Originally Posted by venkkiram
"3 Idiots" பார்த்துவிட்டேன்.
கதையும், சொல்லப்பட்ட விதமும் ரொம்பக் கவர்ந்தது.
மூத்த மாணவர் இறந்து போனதை ஒரு குட்டி helicopter படம் பிடிப்பதாக சொல்லும் திரைக்கதை சூப்பர். அதுபோல, Javed Jaffrey பாத்திரச் செருகலும் அருமை.
"Silencer" - சிரிச்சி மாளவில்லை.
"Rancho" பாத்திரம் முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவராக காட்டாமல், இயல்பாக ஒரு Average மாணவனாக காட்டியிருந்தால் இன்னும் இயல்புத்தன்மை கூடியிருக்கும். செயல்முறை ஞானம் அதிகம் இருக்கும் நிறைய மாணவர்கள் தேர்வுகள், மதிப்பெண்கள் என வரும்போது சாதிக்கத் தவறுவதை பெரும்பாலான இடங்களில் காண்கிறோம். அதுபோலவே Ranchoயும் காட்டியிருக்கலாம்.
மேற்கத்திய படங்களில் காணப்பட்டாலும், இதுவரை இந்திய சினிமாவில் காட்டாத பிரசவ நிகழ்ச்சியை அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். நல்லத் தொடக்கம்.
Muraleetharana ஒளிப்பதிவு, Shantanu Moitra இசை அருமை.
"Give Me Some Sunshine" முதல் முறை கேட்டபோதே பிடித்து போனது.
கல்லூரிக் கதை என்றாலே, மாணவர்களை குழுக்களாக பிரித்தும், அவர்களுக்குள்ளே சண்டைகளை உருவாக்கி, காதலை மையப்படுத்தியே படம் எடுக்கும் இந்தியத் இயக்குனர்களுக்கு மத்தியில் Rajkumar Hirani வானவில்லாக தென்படுகிறார்.
Rajkumar Hirani, இதேப் பார்வையில் நீங்கள் எத்தனைப் படங்கள் எடுத்தாலும் எல்லாமே கவனத்திற்குரியதாக இருக்கும் என நினைக்கிறேன்.
Boman Irani , Aamir Khan , R. Madhavan, Sharman Joshi என எல்லோருக்கும் ஒரு ஓ!