உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:
Printable View
உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:
திரைப்படம்: இரு வல்லவர்கள்
பாடல்: நான் மலரோடு தனியாக
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா (ஷங்கர்-ஜய்கிஷனின் ஒரிஜினல் டியூண்)
http://www.youtube.com/watch?v=WgaYDz5C8n8
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
Those days we had only 78 rpm records(plates). Their recording time was about 3.5 minutes (could be pushed close to 4).
33 rpm records came later. Even then they had to record all songs in a movie in a single LP record,where possible. With CDs that constraint is gone! :)
நன்றி ராஜ் ராஜ் சார்..
டி எம் எஸ் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..தூக்குத் தூக்கி..
ஏறாத மலைதனிலே ஜோரான கெளதாரி ரெண்டு
தானாகவே கிட்ட வந்து ததிங்கினதோம் தாளம் போடுதய்யா..
அப்புறம்
கவலைப் படாதே டொய்ங் டொய்ங்க்..பாட்டு..
சுந்தரி செளந்தரி உமையவளே.. பாட்டு ம்ம்ம்
திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி
பாடல்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
http://www.youtube.com/watch?v=vQuK4A7tZIc
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடி
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஹேஹே
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ
One of my favorite songs featuring my favorite comedy actor....thnx RD!
Some of the lyrics holds true for today's Chennai as well.
"Some of the lyrics holds true for today's Chennai as well." vaikkol kannukutti is not included in "some of the lyrics"! :)