Who has it? SUN?Quote:
Originally Posted by Nerd
Printable View
Who has it? SUN?Quote:
Originally Posted by Nerd
Kalaingar I think.
Text of thalaivar's speech:
http://onlysuperstar.com/?p=9776
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமது வாழ்த்துரையில் பேசியதாவது…..
“இங்கு வந்திருக்கும் தென்னிந்திய அரசியலின் மூத்த தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே, என் குருநாதர் கே.பி.சார் அவர்களே, என் நண்பர் கமல்ஹாசன் அவர்களே, விழா நாயகர் வைரமுத்து அவர்களே, வாலி அவர்களே, ஷங்கர் அவர்களே, மற்றும் இங்கு வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பத்திரிக்கை நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே…
இரண்டு நாளைக்கு முன்னால வைரமுத்து சார் வந்து, இந்த விழா தொடர்பான அழைப்பிதழை கொடுத்து, ஒரு ஐந்து நிமிடம் வாழ்த்தி பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 30 ஆண்டுகால நட்பு, 1000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். அவரை பற்றி பேச 5 நிமிடம் தானா என்று யோசித்தேன். காரணம், நிறைய பேசவேண்டும் என்றால், நிறைய யோசிக்கவேண்டியதில்லை. ஆனால், குறைவாக பேசவேண்டும் என்றால், நிறைய யோசிக்கவேண்டும். So, எதை பேசுறது எதை சொல்றதுன்னு புரியலே…. எல்லாமே ரொம்ப முக்கியம் தான்.
பி.எம் வர்றாரு. அவரை வரவேற்க சி.எம். ஏர்போர்ட் சீக்கிரம் போகணும் என்பதால, அந்த கட்ட்யாத்துக்காக நான் அதிகம் பேச முடியலே… அதுனால, வைரமுத்து சார் இதே போல இதை விட பிரம்மாண்டமா ஒரு விழாவை நடத்தனும். நான் அங்கே அதிகம் பேசணும்.
அவருடன் எனக்கு உள்ள நட்பு 30 ஆண்டுகால நட்பு… எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர்களில் வைரமுத்துவும் ஒருவர். இப்போ மட்டுமல்ல எப்பவுமே என் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர். அவர் என்னக்காக எழுதிய சில வார்த்தைகள் சில பாடல் வரிகள்…. எனக்கே இன்ஸ்பிரேஷனா இருக்கும். குருநாதர் கே.பி.சார் சொன்ன மாதிரி, ‘அன்னை வாரி கொடுத்தது தாய்ப்பாலு, என்னை வாழ வைத்தது தமிழ் பாலு’, ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா….என் உடல் பொருள் ஆவியை தமிக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா…. என்று எழுதினர். அவையெல்லாம் என்னை மிகவும் சிந்திக்க வைத்த வார்த்தைகள். அதுமட்டுமில்லே… ஒரு கவிஞர் என்ற முறையில் ஒருவருடன் நான் பழகியிருக்கிறேன் என்று சொன்னால், அது வைரமுத்து ஒருவர் மட்டும்தான்.
ஒரு கவிஞர் என்று சொன்னால், முதியவனா, இளைஞா, அரசனா, ஆண்டியா, ஆன்மீகவாதியாக, நாத்திகவாதியாக, காதல்ல ஜெயித்தவனாக, காதலில் தொல்வியுற்றவநாகா எப்படியெல்லாம் சிந்தித்து அனந்த சிச்சுவேஷனுக்குள் போய் கவிதை பாடல்கள் எழுதுகிறார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கும். காம, குரோத, மதமாச்சரியங்களை தாண்டி, அன்பு, பாசம், வசியம், காதல் எல்லாத்தையும் உண்மை என்கிற நெருப்பால் கட்டி, அதற்க்கு பொய் என்கிற வார்த்தைகள் போர்த்தி அந்த வெப்பம் அணையாது காக்கும் கவிஞர் வைரமுத்து அவர்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் அந்த நெருப்பு அணையாது. அவர் எனக்கு எழுதினாரு, “எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ….எட்டாம் எட்டுக்கு மேல இருந்த உனக்கு நிம்மதியில்லேன்னு” சொல்லி. எட்டு எட்டு இல்லை.. பதினாறு எட்டு அடுத்தாலும் சரி… நீங்க பாட்டு எழுதலேன்னு சொன்னா… உங்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் எங்களுடன் இருந்து உங்கள் பாடல்கள் மூலம் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கணும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் வணக்கம்.”
————————————————————-
Whoa!
Thalaivar GVM direction-la nadikkaporadhaa sila pEr sollittu alaiyuraanga :shock:
:clap:Quote:
Originally Posted by Nerd
heard that too. GVM said this on a radio show? waiting for The approval or somesuch.Quote:
Originally Posted by Nerd
It would be really great, if it happens.Quote:
Originally Posted by Poornima
yes... Shankar padathOda brammandam irukkum.. adhai vida selavu konjam kammiya irukkumQuote:
Originally Posted by omega
அசத்தலான வாழ்த்துரை. சினிமா உலகத்தில், இப்படி ஒரு நட்பு தொடர்ந்து வருகிறதென்றால் பாராட்டப்படவேண்டியது. இந்தக் கூட்டணி இன்னும் நிறைய ஆண்டுகள் சினிமாவில் சேர்ந்து பங்களிக்க வேண்டும்.Quote:
Originally Posted by Nerd
D40 programme part 3 & 4 to be telecast this weekend.