பம்மலார் என்றால் பட்டையைக் கிளப்புதல் என்று பொருளோ... கலக்கல் சார்...
அன்புடன்
Printable View
பம்மலார் என்றால் பட்டையைக் கிளப்புதல் என்று பொருளோ... கலக்கல் சார்...
அன்புடன்
டியர் கார்த்திக் சார்,
திறமைசாலிகளை ஏதோ கடமைக்குப் பாராட்டி விட்டு, உப்புசப்புக்குக் கூட லாயக்கற்றவர்களை ஒப்புயர்வில்லாதவர்கள் என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை தமிழனுக்கு ஈடு இணையாக எவரையும் காட்டி விட முடியாது.
நீங்கள் வெளிபடுத்தியிருப்பது உங்கள் தனிப் பட்ட ஒருவரின் ஆதங்கம் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மனசாட்சியுள்ள அத்தனை நெஞ்சங்களின் உள்ளக் குமுறல் அது.
நடிகர் திலகம் ஆகட்டும்.. எம்.எஸ். வி ஆகட்டும்..டி.எம்.எஸ் ஆகட்டும் இருட்டடிப்புப் பட்டியல் இமயமலைத் தொடர்ச்சியா...........ய் நீண்டு கொண்டே போகும். தமிழ் நாட்டின் தலை விதி அது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, சொற்ப படங்களே ஆனாலும் அதி அற்புதமாய் பாடல்களுக்கு இசையமைத்து செவிக்கு விருந்து படைத்த இசையமைப்பாளர் ஷியாம்..(ஆனந்த தாகம்.. உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே ..)
'செம்மீன்' மலையாளக் காவியத்தின் அற்புத இசைக்குக் காரணமாய் விளங்கிய சலீல் சௌத்ரி. (உள்ளமெல்லாம் தள்ளாடுதே...)
'நீர்க்குமிழி'யிலிருந்து நடிகர் திலகத்தின் 'நிறைகுடம்' போன்ற படங்களின் பாடல்களுக்கு அபூர்வ மெட்டுக்கள் தந்து காதுகளை ரீங்காரமிடச் செய்த காலம் சென்ற இசை அமைப்பாளர் V.குமார். (விளக்கே நீ கொண்ட ஒளி நானே..)
'காற்றுகென்ன வேலி' படத்தின் அற்புதமான மெல்லிசைப் பாடல்களுக்கு தேனான இசை வடிவம் தந்து அத்தோடு காணாமல்போன சிவாஜி ராஜா. (ரேகா.ரேகா.. )
மற்றும் v.s.நரசிம்மன் (ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த..)
இன்னும் எவ்வளவோ திறமைசாலிகள்.
வந்த வேகத்தில் காணாமல் போனவர்களும் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிப் போராடி அலுத்து, களைத்துப் போனவர்களும் ஏராளம்..ஏராளம்...
ஆனால் திறமையற்றவர்களை முதல் இடத்தில் வைத்து மகிழ்வதில் சில ஏன் பல மீடியாக்கள் காட்டுவது தாராளம்..தாராளம்..
(நடிகர் திலகத்தின் அற்புதமான மாபெரும் வெற்றி பெற்ற வெள்ளி விழாக் கண்ட 'தியாகம்' படத்திற்கும் இதே நிலைமை தான். விகடன் மோசமான விமர்சனம் எழுதியது. தியாகம் 100-ஆவது நாள் பத்திரிகை விளம்பரத்திலோ அல்லது வெள்ளி விழா விளம்பரத்திலோ என்று நினைக்கிறேன்.. 'தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்' என்று தயாரிப்பாளர் சார்பில் பதிலடி கொடுத்திருந்ததாக நினைவு.)
நன்றி சார்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
ஜல்லிக்கட்டு வெள்ளிவிழா துவக்க ஆண்டு.
'ஸ்டைல் கிங்'- அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏரியில் ஒரு ஓடம் ...ஓடம்...
http://www.youtube.com/watch?v=WaPmB...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
மறைந்த சசி குமார் அவர்கள் பற்றியா பதிவு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது
தூக்கு தூக்கி என்ற பேரே அருமை-t.m.s நம்மவருக்கு படிய முதல் படம்-நல்ல பாடல்கள்-
26-8-2011 அன்று தினகரன் 'வெள்ளிமலர்' இணைப்பில் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதும் 'old is gold' தொடரில் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பற்றிய அவரது கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...5/scan0007.jpg
http://i1087.photobucket.com/albums/...5/scan0008.jpg
திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கும் மற்றும் தினகரன் தின இதழுக்கும் நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
நேற்று இரு மலர்கள் பாடல் கட்சிகள் பார்த்தேன்-மாதவி பொன் மயிலாள், மன்னிக்க வேண்டுகிறேன் ,மகாராஜா ஒரு மகாராணி ரொம்ப அருமை.
NT ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பார். பத்மினி உடன் நல்ல chemistry.
i think u have to change internet settings-
பிறந்த நாள் வாழ்த்துகள் -நீங்க கொடுத்து வைத்தவர்-நடிகர் திலகத்தின் அருகில் இருந்து பணியாற்றியதால்
கிருஷ்ணன் வந்தான் படக்காட்சி...
http://i872.photobucket.com/albums/a...ncollagefw.jpg