Originally Posted by
mr_karthik
சி.என்.பரமசிவன் மிரட்டப்பட்டாரா....??
தொடரும் மர்மங்கள்.
நவீனப்படுத்தப்பட்ட திருவிளையாடல் திரைக்காவியத்தின் மறுவெளியீட்டில் மர்மங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
இந்த திடீர் ரிலீஸுக்கு காரணம் வழக்கு என்று கேள்விப்பட்டோம். ஆனால் தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கையில் இது திட்டமிட்ட சதியோவென்று எண்ணத்தோன்றுகிறது. நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் ஒவ்வொன்றாக நவீனப்படுத்தப்பட்டு சாதனைகள் புரிவது தொடர்ந்தால், அது காலம் காலமாக 'பல்வேறு வகைகளில்' சேர்த்து வைக்கப்பட்ட தங்கள் மாயை உடைபடக்காரணமாகிவிடும் என்று எண்ணிய தரப்பின் செயலாக இருக்கக்கூடுமென நம்பும் வகையில் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே கர்ணன் பெருவெற்றியால் மாயை கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது உண்மை. கர்ணன் பார்த்த பலர் 'இறந்தும் சாதிப்பவர்' என்ற அடைமொழி இவருக்கும் பொருந்துகிறது என்று வெளிப்படையாகச் சொன்னதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை. இவ்வளவும் நான் சொல்லக்காரணம் இன்று சென்னையிலிருந்து என் நண்பனிடமிருந்து வந்த மின்னஞ்சல் தகவல்தான்.
முந்தாநாள் உட்லண்ட்ஸ் அரங்கில் நண்பன் மாலைக்காட்சி திருவிளையாடல் பார்க்கச் சென்றபோது, தியேட்டருக்கு வெளிப்புறம் சுமார் ஐந்தாறு பேர் கூடி நின்ற சிறு கூட்டத்தில் ஆளுக்கட்சி நபர் ஒருவர் (அவர் கட்டியிருந்த கரைவேஷ்ட்டியை வைத்துக் கண்டுபிடித்ததாக நண்பன் குறிப்பிட்டிருந்தான்) அலம்பலாக பேசிக்கொண்டிருந்தாராம். "என்னென்னமோ நினைச்சி திட்டம்போட்டுக்கிட்டு இருந்தானுங்க. விட்ருவோமா?. போன படத்தின்போதுதான் இது எங்கே தேறப்போகுதுன்னு அசட்டையா விட்டுட்டோம். ஏமாந்துட்டோம். ஆனா ஒவ்வொரு தடவையும் விட முடியுமா, அதான் இப்போ உஷாராயிட்டோம். இப்பவும் தடுத்திருப்போம். ஆனா நிறைய செலவுபண்ணிட்டேன்னு கெஞ்சினான். அதான் சத்தமில்லாமல் ஓட்டி, போட்ட காசை எடுத்துக்கோன்னு மிரட்டி விட்டுட்டோம். இத்தோடு சரி, இனி அடுத்தவன் இன்னொரு படத்தைபத்தி நினைக்கமாட்டான். மீறி செஞ்சானுங்கண்ணா எங்க வேலையைக்காட்டுவோம். தமிழ்நாட்டுல 'பவர்' நம்ம கையிலே இருக்கும்போது இவனுங்க நினைச்ச மாதிரியெல்லாம் ஆட விட்ருவோமா?" என்று பேசிக்கொண்டிருந்தாராம்.
குழப்பம் எங்கே நடந்திருக்கும்ணு லேசா புரிந்த மாதிரி இருந்தது என்று அந்த நண்பன் குறிப்பிட்டிருந்தான். அதுதான் உண்மைக்காரணமா, அல்லது அந்த ஆளுங்கட்சி அலம்பல் பேர்வழி தன்னோடு நின்றவர்களை குஷிப்படுத்த சும்மாவாச்சும் அள்ளி விட்டாரா, பரமசிவன்தான் சொல்ல வேண்டும்.