நெல்லை கண்ணன் அவர்கள், 04.08.2013 விஜய் டி.வி.யின் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில்.Quote:
எங்கள் ஊரில் சிவாஜி உமிழ்ந்தால் அந்த உமிழ் நீர் கூட நடிக்கும்
இந்நிகழ்ச்சியினை நேற்று விஜய் டி.வி.யில் பார்த்தவர்கள் .... நிச்சயம் நெஞ்சம் நெகிழ்ந்திருப்பார்கள். இன்றைய இளந்தலைமுறையினர் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த அளவிற்கு பெருமையோடு பேசுகிறார்கள் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது. எத்தனை மாயத் திரைகள் தடுத்தாலும் அத்தனையும் தாண்டி ஒளி வீசக் கூடியது எங்கள் நடிகர் திலகத்தின் நடிப்புப் பேரொளி என்பதை அந்த இளைஞரின் பேச்சு நிரூபித்து விட்டது.
தலைவா... எங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டது. இனிமேல் எங்களுக்கு கவலையில்லை. உன் புகழைப் பரப்பும் வேலையை எங்களிடமிருந்து வாங்கி அதனைத் தொடர்ந்து செய்ய அடுத்த தலைமுறையினர் தயாராய் இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியினைப் பாருங்கள்...
http://youtu.be/XgVe-EgRIz8
இந்த நிகழ்ச்சியில் அலசப் படும் பராசக்தி பட விவாதத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் உரையாகும். நன்றியுணர்ச்சி, குருபக்தி போன்ற சிறந்த மரபை, பண்பை சிவாஜியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறிய போது அங்கே அவருடைய உதடுகள் அவருடைய உள்ளத்தின் முகமாய் மாறி உண்மையையும் அவர் மேல் கொண்ட பக்தியையும் எடுத்துரைத்தது.