Happy to hear that Veerangan's second innings in Kovai Tirupur Ravichandran Sir.
Printable View
Happy to hear that Veerangan's second innings in Kovai Tirupur Ravichandran Sir.
இன்றைய தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் படங்கள் .
எங்கள் தங்கம் - சன் லைப் - 7 pm
தாய் சொல்லை தட்டாதே - முரசு - 7.30 pm
இந்த வார படங்கள் .
நாடோடி மன்னன் - கோவை
வேட்டைக்காரன் - மதுரை
ஆயிரத்தில் ஒருவன் - சென்னை .
இந்த வார ஆனந்த விகடனில் தமிழக சட்டசபையில் மக்கள் திலகம் அவர்களின் திறமையான பதில்கள்
எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பற்றிய விமர்சன கட்டுரை அருமை .
நாடோடி மன்னன் - 56 ஆண்டுகள் தொடர்ந்து மறு வெளியீடு செய்யப்பட்டு வருவது மூலம் மக்கள் திலகத்தின் படங்களின் செல்வாக்கினை அறிய முடிகிறது
.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் .மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு .புரட்சிகரமான கதை - வசனம்
பாடல்கள் - பிரமிக்க வைக்கும் காட்சிகள் - இனிமையான பாடல்கள் .மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை 1958லே
நிலை நிறுத்திய படம் .19 ஆண்டுகளின் எம்ஜிஆரின் உழைப்பு - 1977ல் மிகப்பெரிய வெற்றியை தந்தது .
உலக வரலாற்றில் ஒரு நடிகர் செய்த சாதனை - நாடோடி மன்னன் நாடாளும் மன்னனாக வலம் வந்தது .
60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...
1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?''
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!''
நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
முனுசாமி – மாணிக்கம்
மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
முனு: எதுக்கடா?
மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
முனு: ரொம்பப் பெரிய படமாமே?
மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
முனு: கத்திச் சண்டை உண்டா?
மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
முனு: காமிக் இருக்குதா?
மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
முனு: என்ன தம்பி சொல்றே?
மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!
நான் சொந்தத்தில் இப்படத்தை ஏன் ஆரம்பித்தேன்?
எத்தனையோ படங்கள் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவைகளை முடித்துக் கொடுத்தாலே வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாமே; அதைவிடுத்துப் பணத்தை செலவழித்துக் கடும் உழைப்பை ஏற்று ஏன் இப்படிச் சொந்தப்படம் எடுக்க வேண்டும்? ? இப்படிப் பல கேள்விகளை எனது நல்வாழ்வை விரும்பியவர்களும், என்னைக் கேலி செய்ய விரும்பியவர்களும் கேட்டார்கள்.
மேகலாவில் பங்குதாரனாக இருந்து ?நாம்? என்ற படத்தை வெளியிட்ட பிறகு, வேறு வழியில்லாத நிலையிலும் எனது விருப்பப்படி முழு பொறுப்புடன் படம் எடுக்க வேண்டுமென்று ஆசையுடன் எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற பெயரில் கம்பெனியொன்றைத் துவக்கினேன் (துவக்கினோம் நானும் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் சேர்ந்து). அதற்கு கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கதை, வசனம் எழுதித் தருவதாக இருந்து ?விடிவெள்ளி? என்று பெயரும் இடப்பட்டுக் கதையும் எழுதத் துவங்கினார். இங்கு இப்போது வெளியிடக் கூடாத பல காரணங்களால் தாமதமாயிற்று. எதிர்பாராதவிதமாகக் கலைஞர் அவர்கள் கல்லக்குடிப் போராட்டத்தில் சிறையில் தள்ளப்படவே, எம்.ஜி.ஆர் புரொடக்*ஷன்ஸ் என்ற நிர்வாகத்தை நிறுத்தி வைத்து, எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைத் துவக்கினோம்.
அன்று தோன்றிய எண்ணம் எப்போதும் என் மனதைவிட்டு அகன்றதே இல்லை. ?ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்? என்ற படி காத்திருந்தேன். அந்த விருப்பத்தை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எப்படி இழந்துவிட முடியும்? மனதிலே ஏற்பட்ட புண்ணை அந்த மனதிலே ஏற்படும் ஆறுதலால்தான் ஆற்றிக் கொள்ள முடியும்....
எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.
அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !
?இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை....
?டைரக்டராமே டைரக்டர்... என்ற திமிர் !? ? இதுவும் ஒரு வகை.
?லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? ? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!)
?இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்... தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.
?எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?
- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.
?சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).
?இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.
?தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? ? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.
ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ...எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள். படம்வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப் பிழைத்து விட்டேனே என்பதற்காக.... இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே.... மிக நன்றாக வசூல் ஆகிறதாமே..... நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !
அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ....
இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.....
எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?
உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல.....
கலைத் தொழிலாளர்கள் (லைட்பாய் என்றழைக்கப்படுகிறவர்கள் முதல் எல்லோரும்) நாடோடி மன்னனுக்காக உழைத்த உழைப்பு அளவிடற்கரியது. அவர்கள் எதனை எதிர்பாத்தார்கள்? அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது ? இதுவரை ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்களின் கடமை உணர்ச்சி அவர்களைத் தூண்டி அரும்பாடுபடச் செய்தது. அதன் விளைவுதான் இப்போது கூறப்படும் வெற்றி.....இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் உண்மையில் இந்த ?வெற்றி யாருக்கு??
படம் எடுக்கப்படுகிறதே யாருக்காக?...
பட உரிமையாளரின் இரும்புப்பெட்டியை நிரப்ப...நட்சத்திரங்கள் பணம் சேர்க்க....
சிலர் புகழ்பெற.....இப்படிப் பதில் வரும் சிலரிடமிருந்து,
மக்களுக்கு வாழ்வின் இலட்சியத்தை எடுத்துக்காட்ட,
மக்களை ஒன்றுபடுத்த,
நாட்டுப்பற்றை உண்டாக்க ? அதிகப்படுத்த, இல்லாத சுதந்திரத்தைப் பெற, காப்பாற்ற!
இப்படிப் பதில் கூறுவார்கள் இலட்சியப்பற்றுடைய மக்கள் கலைஞர்கள்.
இப்படிப் பேசும் கலைஞர்களைக் கேலி பேசுவோர்களும் உண்டு.....
?இது ஜனநாயக உலகம். யாருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கின்றனவோ அவர்கள்தான் நாட்டை ஆளுவார்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு, எழுதப்படிக்கத் தெரியதாவர்களைப் பெரும்பான்யினராகக் கொண்டது நமது நாடு....
இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் பெரும் பெரும் தேசத் தலைகள் எல்லாம்.
இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரரான ஒரு படமுதலாளி, ?முதலாளி ஒழியவேண்டும், முதலாளிகள் ஏழைத் தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை போன்றவர்கள். என்றெல்லாம் நம்புகிற ஒரு எழுத்தாளரையோ, ?ஏழை ? முதலாளி என்பது வேறு நாட்டிலும் கூட இருக்கிறது, நாடு விடுதலை பெற்றாலன்றி, இன உணர்ச்சி தோன்றி ஒன்றுபட்டாலன்றி, பகுத்தறிவு ஏற்பட்டு, சமுதாயச் சீர் கேடு ஒழிந்தாலன்றி, சமூகத்திற்கோ, ஏழைகளுக்கோ விமோசனமில்லை? என்ற கொள்கையைக் கொண்ட ஒரு எழுத்தாளரையோ அழைத்துப் பணம் கொடுத்து அவரவர் கொள்கைக்கேற்ப கதை, வசனம், பாடல்கள் அமைத்துப் படம் எடுத்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்தப்படத்தை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து, அதிலே சொல்லப்படும் கருத்தைப் புரிந்து, அதன்படி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று நினைத்தால் அந்த மக்களுடைய ஓட்டுக்கள், அவர்கள் ஆசைப்படும் ஆட்சியை ஏற்படுத்த யார் விரும்புகிறார்களோ அவர்களுத்தான் கிடைக்கும். அப்படிப் பெரும்பான்மையான ஓட்டுக்கள் பெற்று ஆட்சி பீடத்திலே அமருகிறவர்களுடைய திட்டப்படி சட்டம் கொண்டு வந்தால் லட்சக் கணக்காகப் பணம் சேர்த்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியா செய்யும்.
இதை உணராதவர்கள் தான் பணத்தைப் பெருக்கப் பட முதலாளிகள் ஏதேதோ கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று கூறுவார்கள். அவர்கள் என்ன நினைத்துப் படம் எடுத்து வெளியிட்டாலும் பலன் மக்களுக்கு ? குறிப்பாக ஏழைகளுக்கு நன்மை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் ?நாடோடி மன்னன்? அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் கிடைத்தப் பல வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் லாபமடைந்திருக்கலாம். ஆனால் நாடோடியின்....(என்னுடைய) ஆசை நிறைவேறுகிறது. மக்களுக்கு எதைச் சொல்ல விருப்பமோ அதைச் சொல்லிவிட்டேன்.
மக்களுடைய எண்ணத்தைச் சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை ?நாடோடி மன்னன்? மூலம் மக்கள் சொல்லுகிறார்கள். ஆகவே எல்லாத் தரப்பினரின் ? எல்லா மக்களின் எண்ணத்தை நாடு முழுவதும் சொல்ல வைத்த மக்களின் வெற்றிதான் இது என்று குன்றேறிச் சொல்லலாம். மக்களுக்குப் பிடிக்காவிடில் வெற்றி பெற்றிருக்காது. (படம் பல நாட்கள் ஓடியிருக்காது.) ஆகவே மக்களின் எண்ணம் மன்னனின் வாயிலாக ஒலிக்கப்பட்டது என்று பொருள். மக்களின் குரல் ஏகோபித்துப் பாராட்டப்படுகிறது என்றால் இது யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு, மக்களின் வெற்றி நமது நாட்டின் வெற்றி ? நமது இனத்தின் வெற்றி ? இன்பத் திராவிடத்தின் வெற்றி....என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கூறி, மக்கள் வாழ்க ! மக்களுக்காக வாழும் மக்கள் கலைஞர்கள் வாழ்க எனத் துணிந்து கூறுகிறேன். வணக்கம், வாழ்க திராவிடம் !
நன்றி !
* நாடோடி மன்னன் வெற்றி விழா மலர்
1958 ல் அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த காவியம்
"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).
"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.
"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!
"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.
நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.
அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.
மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.
"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.
மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
3 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.
ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!