http://i1065.photobucket.com/albums/...pszey7fqo3.jpg
Printable View
இந்த பதிவை மக்கள் திலகத்தின் திரியில் உற்ச்சாகமாக பதிவுகள் போடும் திரு சைலேஷ் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வீடியோ லிங்க் யை எனக்கு அனுப்பியதற்காக மட்டும் அல்ல , பாடலையும் விட நடிகர் திலகத்தின் நடிப்பை மனமுவந்து ரசித்து பாராட்டினதற்க்காகவும் - நீங்கள் சொன்னது உண்மை திரு சைலேஷ் - பராசக்தியில் உலகத்தை தட்டி எழுப்பிய அவரின் நடிப்பு , இன்றும் உலகத்தை புரிந்து கொள்ளாமல் உறங்கி கொண்டுருப்பவர்களை தட்டி எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறது - பாடலை பாருங்கள் - 5 வினாடியில் 1000 உணர்ச்சி வெளிப்பாடுகள் - விவேகானந்தராக , இஸ்லாமிய நண்பராக , போலி சாமியாராக - பாடலின் அழகை பாருங்கள் - ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியுள்ளார் - இன்றும் போலி சாமியார்களைத்தானே அதிகமாக நம்பி கொண்டிருக்கின்றோம் - அவர்களால் மிகவும் சுலபமாக நம்மை emotional blackmail பண்ண முடிக்கின்றது - இந்த பாடல்கூட இவருக்கு தேவை இல்லை - 5வினாடியில் body language மூலம் இந்த உலகம் உள்ளவரையில் தேவைப்படும் நீதி போதனைகளை தந்திருப்பார் - the irony is , பாடல்களை மட்டுமே நாம் ரசிக்கின்றோம் - நீதி போதனைகள் காற்றில் கரைந்து விடுகின்றன ....
மீண்டும் என் நன்றிகள்
அன்புடன் ரவி
https://youtu.be/1sFvW14cCas