டியர் வாசு சார்,
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். அதிசயமில்லை, அது உங்களுக்கு கைவந்த கலை.
பாலாவின் அந்த நாளைய குரலில் பாடல்களைக் கேட்பது தனிச்சுவை. (இப்போது எஸ்.பி.பி.சரண் அந்த்பாடல்களைப் பாடும்போது பாலாவின் அன்றைய குரல் எட்டிப் பார்க்கிறது).
தேடிவந்த மாப்பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக மனத்தைக் கவர்பவை. 'மாணிக்கத்தேரில்' ஒன்றுதான் சற்று வழக்கமான ஒன்று. அந்தப்பாடலுக்காக சாத்தனூர் அணை பூங்கா முழுவதும் சீரியல் செட் அலங்காரம் செய்யப்பட்டு இரவுக்காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும். படப்பிடிப்பு முடிந்தபின்னும் இரண்டு நாட்கள் அந்த அலங்காரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெற்றி மீது பாடலை மெல்லிசை மன்னர், பாலா இவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆரும் அதிகப்படியான சுறுசுறுப்பால் களைகட்டச்செய்வார். அதனால் அந்தப்படத்திலேயே அதிக ஹிட் ஆன பாடலாக இது அமைந்துவிட்டது.
பாடல் ஆய்வின் இடையே நடிகர்திலகத்தின் கர்ணனை செருகியதன்மூலம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நடிகர்திலகம் ஆக்கிரமித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
இன்னொரு திரியில் உங்கள் 'என்னதான் முடிவு' அலசல் அருமை.
அடுத்த பாடல் என்ன?. "பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா'" தானே?.