Originally Posted by
RavikiranSurya
அறிந்த உண்மை !!
நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.
திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.
இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.
மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.
அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.
இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.
அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.
4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
rks