சென்னை வாழ் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களின் மெக்கா என்று அறியப்படும், அழைக்கப்படும் சாந்தி திரையரங்கம் தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாவ மன்னிப்பு முதல் தெய்வ மகன் வரை அங்கே வெளியான படங்களின் பட்டியலையும் ஓடிய நாட்களையும் வெளியிட்டு அனைவரையும் சந்தோஷப்படுத்திய சுவாமிக்கு நன்றி!நன்றி! இனி வியட்நாம் வீடு முதல் வெளியாகப் போகும் இரண்டாவது பட்டியலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மோகன் இங்கே சொன்னது போல் சாந்தியில் மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டால் அதை விட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.
சித்தூர் ராணி பத்மினி படத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் அந்த படத்தை பற்றிய ஆவலை தூண்டியிருக்கும். நமது திரியில் ஏற்கனவே அந்த படத்தின் விமர்சனம் இடம் பெற்றிருக்கிறது. முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த பக்கத்திற்கு செல்லும் சுட்டி இதோ.
http://www.mayyam.com/hub/viewtopic....௨௦
அப்போது போதிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இப்போது ஒளி நெடுந்தகடாக வெளிவந்திருக்கும் போது நல்ல சேல்ஸ். R.A.புரத்தில் உள்ள Moser Baer கடையில் இரு முறை வரவழைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்று தீர்ந்ததை நானே நேரில் பார்த்தேன். கடைக்கு வந்த ஒருவர் இந்த DVD-யைப் பார்த்து விட்டு திருச்சியில் உள்ள தன் நண்பரை கைபேசியில் அழைத்து DVD வந்திருக்கும் விவரத்தை சொல்லி அவருக்கும் சேர்த்து இரண்டு CD-களை வாங்கிப் போனதையும் நேரில் பார்த்தேன்.
ஜீவ பூமியை பொறுத்த வரை கணிசமான அளவிற்கு படமாக்கப்பட்டது என்றே கேள்வி. அன்றைய நாளிதழ்களில் Coming Soon என்று தலைப்பிட்டு முழுக்க ஆங்கிலத்திலேயே முழு பக்க விளம்பரம் செய்யப்பட்ட அந்த விளம்பரத்தின் ஸ்கேன் காப்பி சென்னை மன்றங்கள் வெளியிட்ட மலரில் இருக்கிறது. இங்கே சாரதா குறிப்பிட்டது போல் நல்ல படைப்பாக வந்திருக்க வேண்டிய படம். ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத அவரது குருவான சோமு அவர்கள் [சம்பூர்ண ராமாயணம் படத்தை இயக்கியவர்] இயக்குனர் பொறுப்பை ஏற்றிருந்தார். ரசிகர்களுக்கு கிடைக்காமல் போன ஒரு முத்து என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்.
அன்புடன்
