நடிகர் சுனில் தத் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மற்றும் நடிகர் திலகத்தின் ஆராதகர் !
அவருடைய பாராட்டு மடல் !
Attachment 3154
Printable View
நடிகர் சுனில் தத் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மற்றும் நடிகர் திலகத்தின் ஆராதகர் !
அவருடைய பாராட்டு மடல் !
Attachment 3154
நமது நடிகர் திலகத்தின் அருங்காட்சியகம் !
Attachment 3155
நடிகர் திலகத்துடன் புகைப்படம் எடுக்க விரும்பி நமது நடிகர் திலகத்தை அமரசெய்து அனைத்து பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவர் அருகில் சாய்ந்தும் நின்றும் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
திறமயாளரான நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டுமே உலக அளவில் இந்த அங்கீகாரம் !
Attachment 3156
மற்றவர்களிடம் போல வெறும் சம்ப்ரதாய பேச்சு அல்ல நம் நேருவினுடயது !...ஆத்மார்த்தமான உரையாடல் !
திராவிட அரசியல்வாதிகளுக்கு நடிகர் திலகத்திடம் உள்ள பொறாமையின் காரணம் இது தான் ! இதனால்தான் !
Attachment 3157
இன்று பிறந்தநாள் காணும் அம்மு என்று மிக நெருங்கியவர்கலால் மட்டுமே அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவருடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் நம்முடைய கலைமகளின் அவதாரமாம் நடிகர் திலகம் அவர்கள்.
நடனம் முடிந்து ஆசீர்வதிக்கையில் "நீ நன்றாக வருவாய்" எனது பரிபூரண ஆசிகள்" என்று மனதார வாழ்த்தியவர் நம் கலைவாணியின் அருள் பெற்ற நடிகர் திலகம்.
கதாநாயகியாக நடிக்க தொடங்கிய காலத்தில்
முதலில் 1966இல் நடிகர் திலகத்தின் மகளில் ஒருவராக மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் தோன்றினார். - 100 நாட்கள் ஓடிய படம்.
http://www.youtube.com/watch?v=0qH0LQUgU6U
பிறகு 12-04-1968, கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக "வந்த இடம் நீ நல்ல இடம் வரவேண்டும் காதல் மகராணி" என்று வரவேற்க்கபட்டார் - படு ஸ்லிமாக ஸ்டைல்ஆக உள்ள நடிகர் திலகத்துடன் நல்ல கதாபாத்திரம் - 100 நாட்கள் ஓடிய படம்
http://www.youtube.com/watch?v=G9BPzusiYJY
6 மாத இடைவெளியில் 21-10-1968 மீண்டும் நடிகர் திலகத்துடன் "எங்க ஊர் ராஜா" - நல்ல ஒரு வெற்றி படமாக மீண்டும் அமைந்தது.
http://www.youtube.com/watch?v=YN_bt0WuODE
கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு 05-09-1969, மீண்டும் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். திரைப்படம் "தெய்வ மகன்" - நடிகர்களில் அதிக நூறு நாட்கள் படங்களை கொடுத்த நடிகர் திலகத்துடன் ஜோடி - 100 நாட்கள் படமாக ஜெயலலிதாவிற்கு அமைந்து மார்க்கெட் உயர வழி செய்தது
http://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
14-01-1970 மூன்று மாத இடைவெளியில், நல்ல ஒரு குணசித்திர நாயகியாக "எங்க மாமா " திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் ஜெயலலிதாவிற்கு - 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் நல்ல ஒரு வசூல் மற்றும் அனைவரும் பாராட்டிய படமாக அமைந்தது.
http://www.youtube.com/watch?v=8WNqcmi1rrQ
29-10-1970 ஒன்பது மாத இடைவெளியில் ஜெயலலிதா நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்திய படம் நடிகர் திலகத்துடன் எங்கிருந்தோ வந்தாள். டூயட் பாடும் நாயகியாக மட்டுமே மற்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதா நடிகர் திலகத்தின் படங்களில் நல்ல பாத்திரம் நல்ல நடிப்பு ஆகியவை கிடைக்க பெற்றார். - மீண்டும் 100 நாட்கள் படம்
http://www.youtube.com/watch?v=D8A9LU3d_IQ
27-11-1970 - பீம்சிங் அவர்களின் ஒரே கலர் படம் பாதுகாப்பு. மிகவும் வித்தியாசமான ஒரு பாத்திர படைப்பு. நடிகர் திலகத்தின் ஜோடி - படம் சரியான வரவேற்ப்பை பெறவில்லை ஆனால் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் பெற்ற படமாக அமைந்தது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் அல்லவா. நடிகர் திலகத்துடன் சேர்ந்த ஜெயலலிதாவும் மணம் பெற்றார்.
http://www.youtube.com/watch?v=LBh-R_0cFBQ
14-04-1971 - ஐந்து மாத இடைவெளியில் திரைப்பட நடிகையாகவே நடித்த சுமதி என் சுந்தரி வெளியானது - வித்தியாசமான ஒரு பாத்திரம். நடிகர் திலகத்துடன் நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்தினார். வசூலிலும் முதன்மை பெற்ற படம்.
http://www.youtube.com/watch?v=lm34oyKgqCA
03-07-1971 இரெண்டரை மாத இடைவெளியில் அருமையான ஒரு சவால் விடும் பாத்திரம் நடிகர் திலகதிருக்கு எதிராக " சவாலே சமாளி " - சிட்டுகுருவிகென்ன கட்டுப்பாடு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் - பிரமாண்ட வெற்றி பெற்ற படம் - நடிகர் திலகத்தின் 150வது படத்தின் கதாநாயகியாக நடிக்க நல்லதொரு வாய்ப்பினை பெற்று சரியாக பயன் படுத்திகொண்டார். - 100 நாட்கள் படம்.
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
26-01-1972 - சரியாக ஆறு மாத இடைவெளி தமிழ் திரை உலகில் இது வரை காணாத புதிய பரிமாணத்தில் நடிகர் திலகம் படு ஸ்டைலாக ஸ்டைலின் உச்சமாக தோன்றிய "ராஜா". நாயகி ஜெயலலிதா - ஜானி மேரா நாம் என்ற ஹிந்தி படத்தின் தமிழாக்கம். ஹிந்தியில் ஹேமமாலினி செய்த பாத்திரம் ஜெயலலிதா செய்தார். இதுவரை தோன்றாத ஒரு ஸ்டைலான உடைகள் ஜெயலலிதா இந்த படத்தில் உடுத்தினார். - மிக பெரிய வசூல் பிரளயம் - ராஜா - 100 நாட்கள் படமாக அமைந்தது.
http://www.youtube.com/watch?v=cqjbdAA5zNU
06-05-1972 - நாலு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் மீண்டும் ஆனால் இந்த சமயம் கருப்பு வெள்ளை படம் - தமிழ் திரை உலகில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக முதன்மையான வசூல் சாதனை மற்றும் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற நடிகர் திலகத்தின் "பட்டிகாடா பட்டணமா" - சவாலான ஒரு வேஷம், நடிகர் திலகம் மூகய்யனாக வாழ்ந்த படம் - என்னடி ராக்கம்மா பல்லாக்கு எடுத்து என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் - நடிகர் திலகத்துடன் முதன் முதலாக குத்து பாட்டு - 200 நாட்கள் கடந்த ஒரே கருப்பு வெள்ளை படம்.
http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms
15-07-1972 ஒன்றரை மாத இடைவெளி - மீண்டும் நடிகர் திலகத்துடன் "தர்மம் எங்கே " - மற்றவர்களுடைய கண் பட்டதோ என்னமோ, படம் மிக மிக சராசரியே !
http://www.youtube.com/watch?v=9o6Ja9XXvuk
07-12-1972 - நான்கு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் " நீதி " - கண் திருஷ்டி களைந்து வசூலில் சக்கை போடு போட்ட படம் - 100 நாட்கள் படமாக மீண்டும் அமைந்தது.
http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk
07-03-1974 ஒரு வருடம் ரெண்டு மாத இடைவெளி விட்டு நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த படம் " தாய் " - சராசரி படம் - சுமாரான வெற்றி !
13-11-1974 எட்டு மாத இடைவெளிவிட்டு நடிகர் திலத்துடன் வெளிவந்துசுமாரான வெற்றி பெற்ற படம் "அன்பை தேடி". வருடங்கள் ஓட ஓட ஜெயலலிதா சற்றே இளமை சிறிது குன்றி வயது சிறிது காட்டி கொடுக்க தொடங்கிய தோற்றம்.
http://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU
11-04-1975 இல் மீண்டும் நடிகர் திலகத்தின் லேண்ட்மார்க் படம். 175வது படம் - அவன் தான் மனிதன். திரைப்படம் முழுதும் - என்னை வாழ வைத்த தெய்வம் , என்னை வாழ வைத்த தெய்வம் என்று கூறும் ஒரு பாத்திரம். அதில் உண்மையும் இருந்தது என்பதை அனைவரும் அறிவர் ! - மீண்டும் 100 நாட்கள் படம்
http://www.youtube.com/watch?v=TyjBHMV-yTw
06-12-1975 எட்டு மாத இடைவெளியில் "பாட்டும் பரதமும்" வெளிவந்தது. சற்றே முதிர்ச்சி மேலும் அப்போது நிலவிய அரசியல் சூழல் - படத்தின் வெற்றியை வெகுவாக பாதிக்க - சுமாரான ஓட்டம் - ரசிகர்கள் சிறிது இளமை பொலிவை இழந்த ஜெயலலிதாவை பார்க்க நேர்ந்தது.
http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM
22-10-1976, சித்ரா பௌர்ணமி - ஜெயலலிதா நடிகர் திலகத்துடன் நடித்த கடைசி படம். அரசியலில் Thiru. MGR உடன் பங்கு கொள்ள செல்வதற்கு முன்னால் வந்த படம் - அனைவரும் எதிர்பார்த்தபடி ஒரு தோல்வி படம் !
http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0
18 திரைப்படங்கள் நம் நடிகர் திலகத்துடன் செல்வி ஜெயலலிதா நடித்தார்.
நடிகர் திலகத்துடன் நடித்ததால் ஒரு கதாநாயகியாக 18 படங்கள் நடித்து பிற்காலத்தில் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்ற நடிகையாக விளங்கினார்.
நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் இனைந்து நடித்த படங்களில் வியாபார ரீதியாக வெற்றி பெறாத படங்களாக " பாதுகாப்பும் ", "சித்ரா பௌர்ணமியும் " அமைந்தன.
ஆக, 18 படங்களில் வியாபார ரீதியாக 16 படங்கள் வெற்றி படங்களாகவும், 9 படங்கள் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள் - அதில் ஒரு படம் 200 நாட்கள் ஓடிய படமாகவும் ஜெயலலிதாவிற்கு அமைந்தது !
namathu nadigar thilagam avargal elloraiyum aakki parthavar,yaraiyum alithhu parthavar kidaiyathu.nandri thiru.RAVIKIRAN sir.
SELVI J.JEYALALITHA avargal ethanaiyo padam nadithirunthalum avarkalukku peyar vangi thantha padam engiruntho vanthal ondru mattum than.
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்து வெளிவந்து, வெள்ளிவிழா கண்ட சிவாஜி PRODUCTIONS "சந்திப்பு" சென்ற வெள்ளி முதல் சென்னை மகாலச்மியில் வெளியாகி சிறந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.
தலைவன் சிவாஜி டாட் காம் என்ற இணையதளத்தின் சொந்தக்காரர் திரு இன்பா அவர்கள் ராம் பிரபு PICTURES என்ற பட வினியோகஸ்த நிறுவனம் தொடங்கி, வெளியிடும் முதல் திரைப்படம். சந்திப்பு .
அவர்கள் மேன்மேலும் வளர நமது பூரண நல்லாசிகள். !
http://www.youtube.com/watch?v=zD-alvbaDRk
It was nice to meet Raghavendra sir & Murali sir after a long time, near Mahalakshmi theatre. Hope fans enjoyed "Sandhippu" with the usual allapparais.
சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சில வரிகள்...கண்ணதாசன்.
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
–கவியரசு கண்ணதாசன்