நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன்.
ஜீவனாம்சம் படத்திலிருந்து சூப்பர் ஹிட்.. பாடல்..
https://www.youtube.com/watch?v=rrKVYoStFos
Printable View
நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன்.
ஜீவனாம்சம் படத்திலிருந்து சூப்பர் ஹிட்.. பாடல்..
https://www.youtube.com/watch?v=rrKVYoStFos
http://msvtimes.com/images/rare/msv7.JPG
ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் தூங்குகின்ற கவியரசே,
தூங்கியது போதும்.. இறங்கி வாருங்கள்.
உங்கள் பேனா இல்லாமல் மெல்லிசை மன்னரின் ஹார்மோனியம் வாடி வதங்குகிறது..
http://i.ytimg.com/vi/waibIlcflEQ/sddefault.jpg
கோபால், ராகவேந்திரன் சார் இருவரும் மிக அழகாக கவிஞரைப் பற்றி சொல்லியிருந்தார்கள். இதோ கவிஞர் நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் எழுதிய அற்புதமான பாடல்.
'பொற்சிலை' என்ற திரைப்படத்தில். சீர்காழியின் குரலில்.
நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
பசியென்று வந்தவர்க்கு புசி என்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்று ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
சத்தியத்தின் சோதனையை சகித்துக் கொண்டிருந்தால் வெற்றியைக் காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா
வெற்றிக்கு வித்திடும் கண்ணதாசனின் இந்தப் பாடல் என்னுள் கலந்த ஒரு பாடல்.
காதலா காமமா தத்துவமா தனித்துவமா மதமா மனிதமா... எது வேண்டுமோ எடுத்துக் கொள் என்று இறுமார்ந்து நிமிர்ந்த கவிஞனே!
எழுத்துக்களால் தமிழைச் செதுக்கியவனே!
உன்னை மறப்பது எங்களை மறப்பதற்கு சமம்.
https://youtu.be/doM1ydGU5bw
MSVTimes.com.
http://i1146.photobucket.com/albums/...rcutting03.jpg
http://msvtimes.com/images/rare/msv3.jpg
இன்று பிறந்த நாள் காணும் எம்.எஸ்.வி.
இனிமை என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே எங்களுக்குத் தந்தறியாத நீ நீடுடி வாழ்க!
இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்ல!
http://chennaionline.com/images/gall...119/MSV_10.jpg
ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் இவருடைய குரல் வளத்தாலும் என்னைக் கவர்ந்தவர். செம ஜாலியான குரல் இவருக்கு. ஆழ்நிலைப் பாடல்கள் இவருக்கு அல்வா மாதிரி. இதயத்தில் சுளுவாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தி அதிலிருந்து மீள முடியாமல் செய்வார். கன்னாபின்னாவென்று பாடல்களை எடுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு ஏற்றது மட்டும். ஆனால் அது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது முடிந்த மட்டும்.
'சம்போ சிவ சம்போ' ஜாலியாகட்டும்...
'அல்லா... அல்லா' அருமையாகட்டும்...
'ஆராதனா'வை வென்ற 'எதற்கும் ஒரு காலம் உண்டு' பின்னணி ஆகட்டும்...
'இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே!" என்று சமநிலை சங்கீதமாகட்டும்...
'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற கவிஞனின் நிலையைக் காட்டுவதாகட்டும்...
செம அமர்க்களம்தான்.
ஆனால் மனிதர் உணர்ச்சிப் பெருக்கில் வரிகள் முடிந்து 'ஹோ' என்று இரைச்சல் இட்டாரானால் நம் கண்களில் கண்ணீர் நிச்சயம்.
உதாரணம் ஒன்று சொல்லவா?
https://youtu.be/1uAkUH_2bzc
காவியப் படமான 'காவியத் தலைவி'யில் 'நேரான நெடுஞ்சாலை...ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு' என்று இவர் ஆரம்பிக்கும் போதே குரல் கூராக நம் நெஞ்சைத் துளை போட ஆரம்பிக்கும். இதயமும் சுக்கு நூறாகிப் போகும்.
யாருக்கோ பிறந்த மகளைத் தன் மகளாக பாவிக்கும் ஜெமினி அப்பனின் அன்பை இந்த 'மெல்லிசை' மன்னன் தன் 'வல்லிசை' குரல் பாவத்தால் அழுந்த வெளிப்படுத்தி இமயத்தின் பாரத்தை நம் இதயத்தில் ஏற்றி வைப்பானே!
'இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்'
என்று.
இரும்பும் உருகுமே...இந்தக் குரலாலும், அந்த விவரிக்கவே முடியாத உணர்ச்சிப் பெருக்கு இசையாலும்.
உண்மைதான். இவரைப் போன்ற இசையமைப்பாளர் 'எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை'தான்.
ஜாலியான தத்துவத்தை குரல் வடிவில் தருவதிலும் மன்னனே!
ஊரை ஏமாற்றி வாயாலேயே உலையில் போடும் 'மிஸ்டர் சம்பத்'தின் தகிடுததங்களை ஒட்டுமொத்த சமூகத்தின் சாடலாக இம்மன்னன் டைட்டிலிலேயே ஜாலியாக ஹிப்பிகள் குரலுடன் இணைந்து எகத்தாளமாகப் பாடுவானே!
கேளுங்கள்.
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பச்சைப் புளுகே விற்பனை ஆகுது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
தர்மம் நீதி கற்பனை ஆனது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பத்து அவதாரம் எடுத்தால் என்ன
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
பாவம் இன்னும் ஆட்டம் போடுது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
நாளும் இப்போ கெட்டுப் போனது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
காலம் எழுதும் தீர்ப்பு என்னவோ
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
(முடித்து விட்டு 'ரீரீரீரி ரரி ரபி பப்பப்பா பபாப்பப்பபப' என்று ஒய்யார சத்தம் எழுப்புவார் பாருங்கள். 'நினைத்தாலே இனிக்கும்')
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
(விசிலின் (விசுவின்) விஸ்வரூபத்தைக் கேட்க மறக்காதீர்கள்)
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
மெல்லிசை மன்னரே! தாசனுடன் நீ சேர்ந்து படைத்திட்ட காவிய கானங்கள்தான் எத்தனை! எத்தனை!
உன் பிறந்த நாளில் உன் பாதம் தொட்டு உன்னை வணங்கி உன்னால் இசை வாழ வாழ்த்துகிறோம்.
https://youtu.be/FMgnnB_h2Yo
இன்று நம்முடைய திரை உலகின் பொற்கால மூவேந்தர்களின் ஆட்சியில் தளபதிகளாக இருந்த கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் .
https://youtu.be/YzK2WA8lbGY
https://youtu.be/OgxbMqQvnFU
இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (M.S.Viswanathan) பிறந்த நாள் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.
l நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.
l சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.
l எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
l பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
l ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.
l கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
l இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.
l ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.
l மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
THANKS - THE HINDU TAMIL
Courtesy: Tamil Hindu
கண்ணதாசன்: காலங்களில் அவன் வசந்தம்!
இன்று - ஜூன் 24: கண்ணதாசன் பிறந்தநாள்
அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…
அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'
எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.
காதுகளின் கவிஞன்
கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.
தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கிறாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என் வேதனை கூறாயோ?
ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:
தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று
அதனையும் கூறாயோ...
தேன்பனி!
சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.
பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:
'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'
(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)
'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதேனோ'
(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட
முளைக்காத சொல்லாட ஆடஆட'
(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)
'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்'
(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)
தேன்மூடிய சிருங்காரம்
காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:
'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...
அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்
கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.
கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!
கண்ணனுக்கு தாசன் என்ற பெயரை சுமந்தாய் - தமிழ் அன்னைக்கு நீ தொடுத்த மாலைகளை அவள் இன்னும் சுமந்து கொண்டுதான் இருக்கிறாள் ....
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்றாய் - ஒரு கோல மயில் உன் துணையாக இருந்த வேளையில் - இந்து மதத்தின் இருப்பிடத்தை அறிந்துகொண்டாய் - வார்த்தைகளில் வேதாந்தம் விளையாடியது ----
மரணம் இல்லை உனக்கு என்றாய் - நாங்கள் மரணம் அடைந்துவிட்டோம் - நீ இன்னும் வாழ்கிறாய் ; உன் படைப்புகள் வாழும் .
https://www.youtube.com/watch?v=kfj0fXnq5xs