-
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது
அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்
இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்
புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?
ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்
அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை
ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.
இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்
இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது
சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்..... Thanks wa.,
-
-
-
மக்கள் திலகம் பக்தர் சகோதரர் லோகநாதன் 24001 கடந்து மாபெரும் சாதனையை நம் தோழர்கள் ஏனையோர் இன்னும் போற்றி வாழ்த்து பதிவுகள் இடாதது ஏனோ?!
-
-
-
-
-
-