Quote:
பொம்மலாட்டம் –200
சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘‘பொம்மலாட்டம்’’ தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தக்க வைத்துக் கொண்டு 200–வது பகுதியை எட்டுகிறது.
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தொடர், இப்போது மலையாளத்திலும் சூர்யா சேனலில் ஒளிபரப்பாகி வருவது தொடருக்கான வெகுஜன மரியாதை.
தொடரின் இயக்குனர் சிவா.கே. ஒரு காட்சியை படமாக்கி அடுத்த காட்சிக்கான இடைவெளி நேரத்தில் நம்மிடம் பேசியபோது...
‘‘அண்ணன் சிதம்பரத்திற்கு தெரியாமல் தம்பி நடராஜன் விசாகப்பட்டினத்தில் வாங்கிய பங்களாவில் ஒரு கொலை நடந்து இருந்தது. அந்தக் கொலை பற்றிய செய்தி நடராஜன் படத்துடன் தெலுங்கு நாளிதழில் வெளியாகிறது. அந்த செய்தி தனது குடும்பத்தாருக்கு தெரிந்து விடுமோ என்று பயம் கொள்கிறார் நடராஜன். இதனை அறிந்த பாரதி அதை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கையில் மேலும் திடுக்கிடும்படியான செய்திகள் காதுக்கு வருகிறது.
தற்போது திருந்தி வாழும் நாயகன் சந்தோஷின் கண்ணில் படுகிறாள் அவனுடைய பழைய தோழி சகுந்தலா. அவளுடைய பிரச்சினைக்கு நல்ல எண்ணத்துடன் உதவப்போக, தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறான், சந்தோஷ். இந்த விஷயம் சந்தோஷ் குடும்பத்தாருக்கு தெரிய வருகிறது. சந்தோஷ் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக எண்ணிய பாரதி, சந்தோஷை உதறித் தள்ளி விட்டு செல்கிறாள்.
இந்நிலையில் சொத்துக்காக கதிரை அக்ரிமெண்ட் போட்டு பொய் திருமணம் செய்து கொண்ட தேவி. கதிரை தன் வீட்டிற்கு அழைத்து வர முயற்சி எடுக்கிறாள். தன் பழைய காதலி பாரதி இருக்கும் வீட்டிற்கு வர மறுக்கிறான் கதிர். இதனை அறியாத தேவி, கதிரின் வீட்டிலேயே தங்கி விடுகிறாள்.
சொகுசாக வாழ்ந்த தேவி, கதிர் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? ஒரே வீட்டிலேயே தங்கியதால் இருவருக்கும் ஏற்படும் தனிமை சந்தர்ப்பங்கள் கதிரின் மீது தேவிக்கு காதல் ஏற்படுத்துகிறதா? கதிர் அவளின் காதலை ஏற்கின்றானா? நடராஜன் செய்த மோசடிகளை எப்படி பாரதி வெளிக்கொண்டு வருகிறாள்? பிரிந்து சென்ற பாரதி மீண்டும் சந்தோஷூடன் சேர்ந்தாளா?
கேள்விகளுக்கு பதில் சுவாரசியமான அடுத்தடுத்த எபிசோடுகளில் கிடைக்கும்’’ என்கிறார், இயக்குனர்.
தொடரின் நட்சத்திரங்கள்: டெல்லிகுமார், சிரிஜா, ஸ்ரீகுமார், அப்சர், ப்ரீத்தி, சாய்ராம், காத்தாடி ராமமூர்த்தி, விஜய கிருஷ்ணராஜ், கணேஷ்கர், பரத், சசி, ஷீலா, மகிமா, கவுரிலட்சுமி, வித்யா, சுரேந்தர், நித்யா, பிரபாகர், நிஷா, ஈ.எம்.எஸ்.முரளி, ஆளவந்தான், பொன்.ராமச்சந்திரன்.
ஒளிப்பதிவு: சங்கர். கதை: அரவிந்தன். திரைக்கதை: செல்வம் மற்றும் சிவகுமார். வசனம்: நந்தன் ஸ்ரீதரன். பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து. இசை: தினா. பாடல் பாடியவர்: ஹரிசரண்.இயக்கம்: சிவா.கே.
தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட்.