டியர் பார்த்தசாரதி சார்,
பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.
1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை
1961 : பாவமன்னிப்பு, பாசமலர்
1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்
1983 : நீதிபதி, சந்திப்பு
1985 : முதல் மரியாதை, படிக்காதவன்
1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.
"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.
['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]
அன்புடன்,
பம்மலார்.