Dear Parthasarathy sir ,my belated thanks to you.I am not genius as you,Murali and the other experience hubbers.Itry my best and share the news as i can.Thankyou
Printable View
Dear Parthasarathy sir ,my belated thanks to you.I am not genius as you,Murali and the other experience hubbers.Itry my best and share the news as i can.Thankyou
MURALI sir can you give a brief about SANDIPPU aravaragal sunday even show at mahalakshmi and forth coming rereleses of NT at madras.
Fans as usual assembled in good numbers for the screening of Santhippu at
Mahalakshmi Theatre and usual gala celebrations. I expect the remaining news
will be shared by Mr Murali Srinivas for the benefit of millions of our fans.
நான் சுவாசிக்கு சிவாஜி (21) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, சிவாஜியின் பெரிய ரசிகர்.
சென்னை விஜயா - வாஹினி ஸ்டுடியோவில், ரஜினியின், தனிக்காட்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கன்னட தயாரிப்பாளர் ஒருவர், ரஜினியை சந்தித்து, சிவாஜி நடித்த, தெய்வ மகன் படத்தை, கன்னடத்தில், ரீ-மேக் செய்ய விரும்புவதாகவும், அதில், ரஜினி நடிக்க வேண்டும் என்ற, தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
ரஜினி என்னை அழைத்து, அந்த தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி, 'இவர் சொல்வதை கேட்டு, பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...' என்றார். தயாரிப்பாளரும் ரஜினியிடம் கூறியதை என்னிடமும் கூறினார். உடனே நான், 'இவர் மட்டுமல்ல, வேறு எந்த நடிகராலும், தெய்வ மகன் ரீ-மேக்கில் நடிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயற்சிப்பது பைத்தியக்காரத்தனம்...' என்றேன். இதைக் கேட்ட ரஜினி, 'நானும், இந்த விஷ பரிட்சை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனாலும், சிவாஜியைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்ற முறையில், நீங்கள் சொன்னால், அவர் நம்புவார் என்று தான், உங்களைப் பேசச் சொன்னேன்...' என்றார். ரஜினியின் பெருந்தன்மையை கண்டு வியந்தேன்.
கடந்த, 1980களில், ரஜினியும், நானும் பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. நெற்றிக்கண் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்தார் ரஜினி. ஒரு நாள் இரவு, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர், 'நெற்றிக் கண் படத்தில், நான் சமுதாயத்தில் மேல் மட்டத்தில் இருக்கும், மிகப்பெரிய பணக்காரர் வேடத்தில் நடிக்க வேண்டும்; அதற்கு உங்க டிக் ஷனரியைப் பார்த்து, மாடல் சொல்லுங்க...' என்றார். 'டிக் ஷனரியை பார்த்து நான் சொல்ல வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்தே டிக் ஷனரியை பார்த்துவிட்டு வரலாம், வாங்க...' என்று கூறி, சிவாஜியின், உயர்ந்த மனிதன் படம் ஓடிக் கொண்டிருந்த, சென்னை பாரகன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படத்தில், சவுகார் ஜானகியிடம், சிவாஜி கோபமாக பேசும் காட்சி... பணக்காரருக்கு கோபம் வந்தால், அது, கட்டுப்படுத்தப்பட்ட கோபமாக இருக்கும். அதாவது, கோபம் இருக்கும். ஆனால், இரைந்து கத்தி, பேசமாட்டார். அந்த காட்சியைப் பார்த்ததும், ரஜினியிடம் அது பெரிய, பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றுமொரு காட்சியில், தன்னிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த வயதான ஊழியரிடம், அவருடைய விசுவாசத்தை பாராட்டி, தட்டிக் கொடுத்து, வழி அனுப்புவார். அப்போது, சிவாஜி கண்களில், இரண்டு சொட்டு கண்ணீர் வரும். இங்கும், பணக்காரரின் கட்டுப்படுத்தப்பட்ட, கம்பீரமான சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்த காட்சியையும், வெகுவாக ரசித்தார் ரஜினி. உயர்ந்த மனிதன் படத்தை, ரஜினி பார்ப்பது, அது தான் முதல் முறை. நெற்றிக் கண் படத்தில், செல்வந்தர் வேடத்தில் ரஜினி, அந்த காரெக்டரை உள்வாங்கி நடித்ததற்கு, உயர்ந்த மனிதன் ராஜலிங்கம் பாத்திரம், நிச்சயம் உதவியிருக்க கூடும் என்று, நினைக்கிறேன்.
சிவாஜி மீது, தனக்கு இருக்கும் பாசத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில், படையப்பா படத்தில், தன் தந்தை பாத்திரத்தில் நடிப்பதற்கு சிவாஜியை, 'புக்' செய்த போது, அவருக்கு பெரிய தொகையை அளித்து, அவரை கவுரவப்படுத்தினார் ரஜினி. படப் பிடிப்பின் போது சிவாஜிக்கு எந்த குறையும் ஏற்படாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்.
படையப்பா பட டைட்டிலில், சிவாஜி பெயருக்கு, அடுத்தப்படி தான், ரஜினி பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் மீது ரஜினி கொண்டுள்ள மரியாதையின் வெளிப்பாடு தான் இது.
எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவின், 'லைட்ஸ் ஆன்' நாடகத்தின், நூறாவது நிகழ்ச்சி விழாவிற்கு, தலைமை வகிக்க, சிவாஜி கணேசனை அழைக்க, விஜயா - வாஹினி ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படையப்பா படத்தின் படப்பிடிப்பு, நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம். சிவாஜி சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்பதால், அவருடைய மேக் - அப் அறைக்குள் போகாமல், வெளியே காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திரிகோணம், 'சார் தூங்கலை, உள்ளே போய் பாருங்க...' என்றார். உள்ளே போனேன். அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிக்குரிய, வசனங்களை படித்துக் கொண்டிருந்தார் சிவாஜி. எனக்கு ஒரே ஆச்சரியம்.
நடிப்பில் இமாலய சாதனைகளை செய்து முடித்தவர், ஒரு புதுமுகம் போல நடிக்க வேண்டிய காட்சியின் வசனத்தை பார்த்துக் கொண்டிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. அது குறித்து அவரிடம் கேட்ட போது, 'நான் இறக்கும் காட்சியைப் படமாக்க போறாங்க... மத்த சீன்களிலே அதிக வேலை இல்லை. இந்த காட்சியில் நான் ஸ்கோர் செய்யணும். அது தான், 'டயலாக்' பார்த்துக் கொண்டிருந்தேன்...' என்றார். தன் தொழில் மீது கொண்டிருக்கும் பக்தி புரிந்தது.
ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன் இயக்கி, தயாரித்த வெற்றிப்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை. 1966ல் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவாஜிக்கு பணக்காரர் வேடம். அப்போது, சிவாஜிக்கு வயது, 37 தான். அப்படத்தில், பதிமூன்று குழந்தைகளுக்கு, அப்பாவாக நடித்திருப்பார். 37 வயதில், பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்து உள்ள, வேறு எந்த ஹீரோவிற்கு, 13 குழந்தைகளுக்கு, அப்பாவாக நடிக்கும் தைரியம் வரும்! மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தை பற்றி, மற்றொரு சுவையான செய்தி: இந்தப் படத்தில். முற்றிலும் மாறுபட்ட, சிவாஜியை, காண்பிக்க வேண்டும் என்பதில், எஸ்.எஸ்.வாசன் தெளிவாக இருந்தார். எனவே, சிவாஜி தவிர மற்ற நடிகர், நடிகையரை அழைத்து, அவர்கள் வசனங்கள் பேசி, நடித்து பழக ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தார். 'நீங்கள் எல்லாரும் உங்கள் பாத்திரங்களை சரியாக செய்யுங்கள். படப்பிடிப்பின் போது, நான் உங்களை கவனிக்க முடியாது; அதற்கு நேரம் இருக்காது. ஷூட்டிங் சமயத்தில், என்னுடைய முழு கவனமும் சிவாஜியிடம் மட்டும் தான் இருக்கும். சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வருவது தான், என்னுடைய முயற்சியாக இருக்கும்...' என்று விளக்கினார். அவர் கள் அனைவரும், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டது போல, படப்பிடிப்பின் போது, சிவாஜி மீது மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இந்த சுவையான செய்தியை, என்னிடம் சொன்னது படத்தில் அவருடைய, சம்பந்தியாக நடித்த, மேஜர் சுந்தர்ராஜன். படம் நூறு நாட்கள் ஓடி, வசூலை வாரி குவித்தது.
ஜெமினி ஸ்டுடியோ அதிபரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன், இந்தி நடிகர் ராஜேந்திர குமாருடன், ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற, சிவாஜி நடித்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தை பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும், மேடைக்கு வந்த எஸ்.எஸ்.வாசன், சிவாஜியை கட்டியணைத்து அழுது விட்டார்.
நாடகத்தில், தன் தாயைப் பற்றி, சிவாஜி பேசும்போது, 'பாத்திரத்தோடு பாத்திரமா தேய்ஞ்சாளே, விறகோட விறகா வெந்தாளே...' என்று தன் தாயார் தன்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று, வசனங்களில் சொல்வார் சிவாஜி. எஸ்.எஸ்.வாசன், தன் தாயாரை தெய்வமாக மதித்தவர். இந்த நாடகத்தைப் பார்க்கும் போது, தன் தாய், தன்னை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்ற நினைவுகள் வந்து, அழுது விட்டார். வியட்நாம் வீடு நாடக மேடையில், பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரின் தாயார் படம் மாட்டப்பட்டிருக்கும். அந்தபடம், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படம். வியட்நாம் வீடு திரைப்படமாக எடுக்கப்பட்டபோதும், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படத்தையே, படம் முழுவதும் உபயோகித்தார் சிவாஜி.
— தொடரும்.
எஸ்.ரஜத்
ராமஜெயம் சார்,
நேற்று மாலை நாங்கள் [நான் ராகவேந்தர் சார் மற்றும் சித்தூர் (இப்போது சென்னை) வாசுதேவன் மூவரும்] மகாலட்சுமி திரையரங்கிற்கு சென்றிருந்தோம். சரியான கூட்டம். நாங்கள் செல்லும் போதே அலப்பரைகள் ஆரம்பித்து விட்டன. மிகப் பெரிய ராட்சஸ மாலைகள் பானருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் அனைத்து வித சடங்குகளும், அதாவது அபிஷேகம் செய்தல், சூடம் ஏற்றுதல், திருஷ்டி பூசணி சுற்றுதல் போன்றவை பதிவுக்கிரமாய் நடந்தேறியது.
அது என்னவோ தெரியவில்லை அரங்கத்தின் நேர் எதிரே ஒரு போலீஸ் பூத் அமைக்கப்பட்டிருப்பதனால் அங்கே ஒரு காவல் துறையை சேர்ந்த வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இது நீதி இதே அரங்கில் வெளியிடப்பட்டிருந்த போதும் இதே நிலைமைதான் இருந்தது. ஆனால் காவல் துறையினர் ரசிகர்களை எந்த கெடுபிடிகளுக்கும் ஆளாக்காமல் அமைதியாக கடமையை செய்தனர். ரசிகர்களும் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அதே நேரத்தில் நாம் மேற்சொன்ன வைபவங்களும் வாழ்த்து முழக்கங்களும் ஆட்டம் பாட்டமும் ஒரு உணர்ச்சி வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெகு வெகு நாட்களுக்கு பின் நண்பர் மோகன் {ரங்கன்] அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான மோகனின் Father In Law அவர்களும் நலமாக இருக்கிறார் என்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நாங்கள் அங்கே நிற்கும் போதே பால்கனி ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. அரங்கத்தின் கீழ்த்தள டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. வழக்கம் போல் பஸ்ஸில் சென்றவர்கள், கார் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அனைவரும் பார்த்து வியந்து கொண்டே செல்ல சிவாஜி சேனையின் சக்தி மீண்டும் ஒரு முறை ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் நிரூபணமானது. ஒரு தவிர்க்க முடியாத வேலை காரணமாக நானும் ராகவேந்தர் சாரும் முக்கியமான ஒருவரை சந்திக்க செல்ல வேண்டியிருந்ததால் படத்திற்கு செல்லாமல் கிளம்பி விட்டோம். நண்பர் வாசு அவர்களும் வீடு திரும்ப வேண்டிய சூழல்.
படத்திற்கு சென்றவர்கள் இரவு படம் முடிந்தவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது அரங்கத்தின் கீழ் தளத்திலும் சரியான கூட்டம் என்று சொன்னார்கள்.
படத்தை வெளியிட்டுருப்பவருக்கு நிச்சயமாக லாபத்தை ஈட்டி தரும் என்பதிலும் சந்தேகமில்லை என்பது அங்கே அரங்கத்தை சேர்ந்த சிலருடன் பேசிய போது தெளிவானது. படத்தை வெளியிட்ட நண்பருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
அரங்கத்திற்கு வெளியே எடுத்த சில புகைப்படங்கள். நன்றி ராகவேந்தர் சார்!
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...27348817_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...39362558_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...42822415_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...48486042_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...50853611_n.jpg
அன்புடன்
ராமஜெயம் சார்,
சென்னையில் அடுத்து வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் எவை என்று பார்த்தோமென்றால் அவற்றின் பட்டியல் இவ்வாறு அமையலாம்.
தங்க சுரங்கம்.
அண்ணன் ஒரு கோவில்
அவன்தான் மனிதன்
வைர நெஞ்சம்
வெள்ளை ரோஜா
தியாகம்.
மேலும் நமக்கு மிகவும் பிடித்த சில படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கலாம். அவை இன்னும் பேச்சு வார்த்தையில் இருப்பதால் அந்த விவரங்களை பிறகு வெளியிடுகிறேன். கலர் படங்கள் மட்டுமல்ல சில கருப்பு வெள்ளைப் படங்களும் அதில் அடக்கம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
கோவையில் அடுத்து வெளியாகப் போகும் படம் சொர்க்கம். மார்ச் 7 முதல் [tentative date] ராயலில் வெளியாகிறது. சென்னையில் வெளியாகும் அனைத்துப் படங்களும் இனி கோவையிலும் வெளியாகும்.
அது போன்றே மதுரையில் விரைவில் வைர நெஞ்சம் படத்துடன் துவங்கப் போகிறது வெற்றி உலா. நெல்லையில் ஏற்கனவே நமது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சூழல் தமிழகமெங்கும் விரைவில் காணலாம்.
மேலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
thanks Murali sir for sharing not only madras news and also forthcoming rereleases of our BOX OFFICE hero NADIGARTHILAGAM,in all centres. sandippu will dinitely make a record,
Kalangal maralam rasanaigal maralam but our NADIGARTHILAGAM
values remains at skyhigh ALWAYS,being proved every now and then.
my kind enquiries to all our SHANTI friends.
<a href="http://s818.photobucket.com/user/jravikumar/media/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg.html" target="_blank"><img src="http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg" border="0" alt=" photo MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg"/></a>
மூன்று தெய்வங்கள் - சில ஆவணங்கள்
என் அலசலில் - மூன்று தெய்வங்களின் ஆவணங்களை சில technical snag னால் முன்பு பதிவிட முடியவில்லை - வாசுவின் உதவி மூலம் , அந்த இடைஞ்சலை இப்பொழுது தவிர்க்க முடிந்தது - நன்றி வாசு
http://i818.photobucket.com/albums/z...ps1ebbe773.jpg