ஷண்முக ப்ரியா .
சில ராகங்களை கேட்கும் போது ,பிரமிப்பில் ஆழ்ந்து விடுவோம். அவை புரிந்து உணரவே சில வருடங்கள் ஆகும்.பாடி முயலவோ பல பிறவிகள்.ஆனால் ஒரு ராகம் மட்டும் கேட்டதும் ,அட இது நம்ம தோஸ்த் ,நாமும் பாடலாம் என்ற உணர்வை லகுவாக ஏற்படுத்தும் இதமான ராகம் ஷன்முகபிரியா. தமிழ் கடவுளின் பெயரில் அமைந்த ,லேசான ,அன்றாட உணர்வுகளுக்கு தோதான ராகம். எப்போ கேட்டாலும் மனசுக்கு பிடிக்கும்.எல்லோருக்கும் பிடிக்கும்.
இதுவும் ஒரு சம்பூர்ண மேளகர்த்தா.அவன்தான் மனிதன் ரவிகுமார் போல நிறைய உறவுகள் (ஜன்யம்)இல்லாத ராகம்.
நிறைய பாடல்கள் இந்த ராகத்தில் ஜனங்களின் ஜனரஞ்சகம் அல்லவா?
காதல் காட்சிகளில் முதன்மை என்று யார் என்னை கேட்டாலும் நான் இந்த படத்தில் கதாநாயகன் தன் கன்று காதலை விவரிப்பதும் ,அதில் நாயகி பொறாமையுடன் react செய்யும் சிவாஜி-வைஜயந்தி சம்பத்த பட்ட இரும்புத்திரை காட்சிதான் என்று சொல்வேன்..(hats off கொத்தமங்கலம் சுப்பு-வாசன்).அது முடிந்து வரும் இந்த தொடர்ச்சி பாடல் தொடாமலே ,இந்த ஜோடியை எண்ணி சிலிர்க்க வைக்கும்.(இயற்கையின் வளர்ச்சி முறை வரிகளில் நடிகர்திலகத்தின் புதிர் நிறைந்த பாவம் மற்றும் action அடடா).எஸ்.வீ.வெங்கட்ராமன் அவர்களின் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்".
அந்த படமே ஒரு surprise package .அந்த மாதிரி ஒரு புராண படத்தையோ,நடிப்பையோ,சுவாரஸ்யத்தையோ அதுவரை உலகம் கண்டதில்லை.ஆனால் அந்த படத்தில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை துள்ளி உட்கார வைத்த surprise package ஒவ்வையார் பாடல்.(சுந்தராம்பாள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து திரையில் தோன்றி பாடினார்).திரை இசை திலகத்தின் "பழம் நீயப்பா ,ஞான பழம் நீயப்பா".
அந்த பாடகர் ,திலகங்களின் சாம்ராஜ்யத்தில் நிரந்தர சிற்றரசர்.பாடக சக்ரவர்த்தி.திடீரென நடிக்கும் ஆசை. திலகங்களையே இணைத்த பெரும் இயக்குனர் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் தயங்கவில்லை.அந்த பாடகரும் ,நடிகர்திலகத்தின் அங்கம் என்பதாலோ என்னவோ,அதே பாணியில் நடித்து,பேசி
ஒப்பேற்றியிருந்தார்.(ஒரு இடம் கிளாஸ் .தொழு நோய் கண்டு எங்கும் போக முடியாத நிலையில் மனைவியிடம் வேட்கையை வெளியிடும் காட்சி).அந்த படத்தின் இந்த பாடல் இப்படியும் ஒரு கடும் தமிழை இசையுடன் பாட ஒருவரா என்று இவரை எண்ணி வியக்க வைக்கும்.அருணகிரி நாதரின் திருப்புகழ் "முத்தை தரு பத்தி திருநகை".
சண்முக பிரியாவின் எனக்கு பிடித்த சில sample .
காலத்தில் அழியாத- மகாகவி காளிதாஸ்.
மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்.
தகிட ததிமி தகிட ததிமி- சலங்கை ஒலி
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா-வேதம் புதிது.