நன்றி க்ருஷ்ணா ஜி என்னை த் தவறாக எடுத்துக் கொள்ளாததற்கு..
Printable View
நன்றி க்ருஷ்ணா ஜி என்னை த் தவறாக எடுத்துக் கொள்ளாததற்கு..
நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த திரிக்கு இப்போதுதான் வருகிறேன். மக்கள் திலகம் திரியை பார்த்தும் பங்களித்தும் இருக்கும் நண்பர்கள் சிலருக்கு என் பெயர் பரிச்சயமாகியிருக்கலாம்.
பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு,
நேற்று நீங்கள் மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட திருமதி. ரெங்கம்மாள் அவர்களின் பேட்டி படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்று அன்போடு கோருகிறேன். மக்கள் திலகம் திரியை நீங்கள் ரெகுலராக பார்க்கிறீர்களா? என்று எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படி பார்க்காவிட்டால் எனது சந்தேகங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போய்விடுமோ என்பதற்காக இந்த திரிக்கே வந்து என் இரண்டு சந்தேகங்களை கேட்கிறேன்.
ஒன்று... அந்த கட்டுரை தொடர்பானது. அதில் திருமதி. ரெங்கம்மாள் அவர்கள், ராஜராஜசோழன் படத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடன் டான்ஸ் ஆடியது மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் அது போன்ற காட்சி இல்லை என்று கருதுகிறேன். முதுமை காரணமாக அவர் மறதியில் சொல்லியிருக்கலாமோ? திரு.சிவாஜி கணேசன் அவர்களுடன் அவர் வேறு எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்ல முடியுமா?
இரண்டு... சமீபத்தில் மக்கள் திலகம் நடித்த ‘ராஜாதேசிங்கு’ திரைக் காவியத்தில் இடம் பெற்ற ‘சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி....’’ என்ற பாடலை தொலைக்காட்சி ஒன்றில் ரசித்தேன். இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களும் பானுமதி அவர்களும் பாடிய கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த அருமையான பாடல். பாடலுடன் கூடவே தவழ்ந்து வரும் மோர்சிங் ஒலி சுகம். ஏற்கனவே உங்களிடம் நான் கூறியிருக்கிறேன். கர்நாடக சங்கீதத்தில் நான் நிபுணன் அல்ல. ஏதோ கேள்வி ஞானம் மட்டுமே. பதில் ஞானம் கிடையாது. அந்த பாடல் என்ன ராகம் என்று சொல்ல முடியுமா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சின்ன கண்ணன்,
நீஈஈஈஈஈஈஈண்ட விளக்கத்திற்கு நன்றி. நான் உடலில் நகைகளோ,மோதிரமோ, கை கடிகாரமோ,(ஏன் அரணா கயிறு கூட) அணிவதில்லை என்ற உண்மையை புரிந்து சொன்னதற்கு நன்றி.
எனக்கு நிஜமாகவே,நீண்ட தொடர் பதிவுகளுக்கு நேரம் போதுவதில்லை.அதனாலேயே சின்ன சின்ன பதிவுகள் தொடர்பு வேண்டி. மற்ற படி இயற்கை ,செயற்கை எல்லாம் இல்லை. சனி என்று குறித்து விட்டால் ,எப்பாடு பட்டாவது எழுத ஒரு உத்வேகம் பிறக்கும்,சொல்லி விட்டோமே என்று. அவ்வளவுதான். நான் சாதாரணமாக செய்யும் விஷயங்கள் கூட மற்றவர்களால் சிக்கலாகி விடுகிறது.
அவள் அப்படித்தான் நிச்சயம் உண்டு. வேறு பட்ட பார்வையில்.
Welcome Kalai. Nice to have you here.
//நீஈஈஈஈஈஈஈண்ட விளக்கத்திற்கு நன்றி. நான் உடலில் நகைகளோ,மோதிரமோ, கை கடிகாரமோ,(ஏன் அரணா கயிறு கூட) அணிவதில்லை என்ற உண்மையை புரிந்து சொன்னதற்கு நன்றி.// கோபால் சார் சொன்ன இரண்டு நன்றிகளுக்கும் நன்றி.. இரண்டாவது வாக்கியம் எனக்கு வழக்கம் போலப் புரியவில்லை.வழக்கம்போல அங்கதமா..(சாட்ட்யர் தமிழ் சரிதானே)
/.நான் எதையுமே மனதிலோ உடலிலோ வைத்துக் கொள்வது இல்லை.. // இந்த என் வாக்கியத்துக்கு எதிர் பதிலா..( நான் வாட்ச் கட்டுவேன்ங்க்ணா)
//அவள் அப்படித்தான் நிச்சயம் உண்டு. வேறு பட்ட பார்வையில்.// எழுதுங்கள்ண்ணா.. நான் கற்றுக் கொள்கிறேன்..
நானும் முடிந்தால் படத்தைப் பார்த்துவிட்டு அதைப்பற்றிச் சொல்லப் பார்க்கிறேன் (கண்ணா திருந்தவே மாட்டடா நீ)
//நான் சாதாரணமாக செய்யும் விஷயங்கள் கூட மற்றவர்களால் சிக்கலாகி விடுகிறது.// இது எப்படி மற்றவர்களால் சிக்கலாகும்..உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை..கிடைத்திருந்தால் எழுதியிருப்பீர்கள்..அவ்வளவே..
அகெய்ன் நன்றி கோபால்சார்..
தங்களுடைய அன்பான பதிலுக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணா சார். திரு. கோபால் தங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு கலை வேந்தர் சார்
இன்ப அதிர்ச்சி .
இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன்.
வாசு மிகவும் சந்தோசம் அடைவார் .
நடிகை திருமதி ரங்கம்மாள் தற்போதைய வடிவேல்,கஞ்சா கருப்பு,சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்த திரை படங்களில் தென் படுகிறார்.அடையாளம் காண முடிகிறது. அவர் பேட்டியை படித்தால் பழைய திரை படங்களில் நடன குழுவில் இடம் பெற்று இருப்பாரோ என்று கொள்ள வைக்கிறது. ராஜ ராஜ சோழன் நினைவில் இல்லை . மீண்டும் ஒருமுறை பார்த்தால் உறுதியாக சொல்ல முடியும் .நிச்சயம் ஒரு முறை பார்த்து விட்டு பதில் தெரிவிக்கிறேன்
ராஜா தேசிங்கு திரை படத்தில் நீங்கள் குறிப்பிட்டு உள்ள பாடல் சுருட்டி ராகத்தில் அமைந்த பாடல். மிக அபூர்வமாக தமிழ் திரை பாடல்களில் உபயோகபடுதபட்டுள்ள ராகம் . சற்று சந்தேகத்துடன் சரச ராணி கல்யாணி பாடலை குறிப்பிட்டு எனக்கு கர்னாடக இசை ஆசான் ஒருவர் சென்னையில் வசிக்கிறார். அவரிடம் அவ்வபோது உரையாடுவேன். அவரிடம் கேட்டு உறுதியும் செய்து கொள்வேன். அவரும் இதை உறுதி செய்தார் .
http://www.youtube.com/embed/BlXxSZaISGc?
முழு பாடல் வரிகள் நமது நண்பர்களுக்காக
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி……….
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா………
கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்…
நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது………….
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து………
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்……….
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்..
சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் ஒன்று நீங்கள் கேள்வி பாட்டு இருக்கலாம் . அது இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்
மிக்க நன்றி .நேரம் கிடைக்கும் போது எல்லாம் நிச்சயம் மக்கள் திலகம் திரிக்கும் வருவேன் . உங்கள் பண்பான அழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் கலை வேந்தர் சார்
நட்புடன்
கிருஷ்ணா
மதுரகானம் திரியின் புதுவரவான கலைவேந்தன் அவர்களுக்கு அன்பான வரவேற்பு. வருக வருக.
பெருமதிப்புக்குரிய பண்பாளர் ராகவேந்திரா அவர்களின் அன்பார்ந்த வரவேற்புக்கு நன்றிகள் பல.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்