Originally Posted by saradhaa_sn
டியர் முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் மற்றும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கு.....
நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களால் நமக்குத்தெளிவாக தெரிவது என்ன?.
முதலில்.....
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்களுக்கு நன்றிகள்.
1964-ம் ஆண்டில் சென்னையில் எங்கள் நடிகர்திலகத்தின் படங்களை வெற்றிப்படங்களாக்கிய அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்க்ளுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்களின் 'சங்கம்' திரைப்படத்தின் ரீல்கள் சாந்தி தியேட்டரின் ப்ரொஜக்டரில் கழற்றமுடியாத அளவுக்கு, 200 நாட்களுக்கும் அதிகமாக ஒட்டிக்கொண்டதாலேயே, அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் படங்கள் எல்லாம் மற்ற தியேட்டர்களில் வெளியாகி, உருப்படியாக ஓடி தொடர் வெற்றிகளைப்பெற்று ரசிகர்கள் மனதில் பாலை வார்த்தன.
1964 பொங்கல் முதல் 1965 பொங்கல் வரை 365 நாட்களில் 'கர்ணன்' படம் ஓடிய 100 நாட்கள் தவிர, 265 நாட்கள் சாந்தியில் வேறு படங்கள் இல்லை. காரணம் உங்கள் சங்கம் படம். உங்கள் படம் மட்டும் திரையிடப்படாமல் இருந்திருந்தால், பேராசைக்காரர்களால், அத்தனை படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சாந்தியிலேயே வெளியாகி 'ஒருவழி' ஆகியிருக்கும். காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள்.
'சித்தூர் ராணி பத்மினி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால், நிச்ச்யம் ஆறு வாரங்கள் ஓடியிருக்கும். 'அறிவாளி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால் நிச்சயம் 50 நாட்களைக்கடந்திருக்கும். (மறு வெளியீட்டில் அறிவாளி பெரும் சாதனை புரிந்துள்ளது). அதற்கு மாறாக, பாரகனில் 135 நாட்கள் ஓடிய 'புதிய பறவை' சாந்தியில் வந்திருந்தால் ஈவு இரக்கமின்றி 75 நாட்களில், நடிகர்திலகத்தின் வேறு படத்துக்காக, தூக்கப்பட்டிருக்கும்.
சாந்தியில் வெளிவந்ததாலேயே.......
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'பட்டிக்காடா பட்டனமா' 148 நாட்களில் தியேட்டர் மாற்றப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய ராமன் எத்தனை ராமனடி' 75 நாட்களில் தியேட்டர் மாறியது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'அண்ணன் ஒரு கோயில்' (தியாகம் படத்துக்காக) 100+ நாட்களில் எடுக்கப்பட்டது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'தியாகம்' நல்ல கூட்டம் இருக்கும்போதே (ஜெனரல் சக்கரவர்த்தி படத்துக்காக) தூக்கப்பட்டது.
250 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய 'திரிசூலம்' (இமயம் படத்துக்காக) 175 நாட்களில் எடுக்கப்பட்டது. (இவையெல்லாம் சில சோறு பதங்கள். இன்னும் நிறைய இருக்கிறது).
சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.
என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.