மிக்க நன்றி திரு.சங்கர்.
Printable View
தங்கள் அன்புக்கு பணிவான என் நன்றிகள் திரு.சந்திரசேகரன் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
ஜல்லிக்கட்டு, கிருஷ்ணன் வந்தான், என் ஆச ராசாவே ஆகிய முத்தான மூன்று படங்களின் ஆவணத்தொகுப்புப் பதிவுகளுக்கு மிக்க நன்றி. 'ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு (பொம்மை இதழ்) மிக அருமை. என் ஆச ராசாவே படத்துக்கு குமுதம் பத்திரிகை எழுதிய விமர்சனம் நெஞ்சைத்தொட்டது.
'ஜல்லிக்கட்டு' 100வது நாள் விழா மேடையில் நடிகர்திலகம், மக்கள் திலகம், வில்லன் திலகம் மூவருக்கிடையேயான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான தள்ளுமுள்ளு பற்றி ஏற்கெனவே முரளி சார் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். பொம்மை இதழ் கவரேஜில் அந்த நிகழ்ச்சி மிஸ்ஸிங்.
'என் ஆச ராசாவே' படத்தில் நடிகர்திலகத்துடன் நடித்த அனுபவம் பற்றி 'வங்கத்தாரகை' சுவலட்சுமி குறிப்பிட்டிருப்பது சூப்பர். வழக்கறிஞர் அல்லவா, அதான் மிகச்சரியாக எடைபோட்டுள்ளார். 'படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சிவாஜி சார்தான்' என்று சொல்லியிருப்பது சரியான பஞ்ச். அப்படத்துக்கு பெங்களூர் ரசிகப்பெருமக்கள் சூட்டிய ராட்சத மாலைகள் மலைக்க வைக்கின்றன.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தில்லானா மோகனாம்பாள் படத்தைப்பற்றி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கட்டுரையைப் பதிவிட்டமைக்கு நன்றி. 'ஜல்லிக்கட்டு' பாடல் காட்சிக்கும், 'கிருஷ்ணன் வந்தான்' பட நிழற்பட வரிசைக்கும் ஸ்பெஷல் நன்றிகள். இப்பாடலை விட, 'ஏ ராஜா... ஒன்றானோம் இங்கே' என்ற பாடல் காட்சியில் இன்னும் ஸ்டைலாகப் பண்ணியிருப்பார். குறிப்பாக அந்த கருப்பு புல்சூட்டில் சத்ய்ராஜுடன் நடந்து வரும்போது காட்டும் ஸ்டைல், ஒரிஜினல் ஸ்டைல் கிங் இவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.
அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,
உங்கள் கம்ப்யூட்டர் சரியானதும், மீண்டும் அற்புத, அரிய தகவல் மூட்டைகளுடன் வந்து அசத்துவீர்கள் என்று காத்திருக்கிறோம்.
superb vasudevan sir
நம் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: NT அவர்களின் கிரஹப்ரவேசம் திரைப்படத்தில் வரும் கிரஹப்ரவேசக் காட்சி புகைப்படம் நமது ரசிகர் ஒருவரின் புதிய இல்லத் திறப்புவிழா அழைப்பிதழிற்கு தேவைப்படுகிறது. திரு.ராகவேந்திரன் அவர்கள் எனக்கு ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். ஆனால் அது வீடியோவிலிரிந்து எடுக்கப்பட்டதால் Quality சரியாக இல்லை. நமது ஹப்பர்கள் யாரிடமும் இருந்தால் பதிவு செய்தால் அவருக்கு கொடுத்து உதவ வசதியாக இருக்கும்.
நன்றி
'மங்கையர் திலகத்தில்' நடிகர் திலகம் .
http://i1087.photobucket.com/albums/..._005466817.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன் .
அன்பு நன்றிகள் திரு.கார்த்திக் சார். விரைவில் உங்களுக்குப் பிடித்த 'ஏ...ராஜா...ஒன்றானோம் இன்று'...பாடல் ஒலி - ஒளிக் காட்சியைத் தர முயற்சி செய்கிறேன். நன்றி சார்.
'ஜல்லிக்கட்டு' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான ஸ்டைலில் பரிமளிக்கும் 'ஏ...ராஜா..ஒன்றானோம் இன்று' பாடலை திரு.கார்த்திக் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்..
http://www.youtube.com/watch?v=YIbYC...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
வீடியோ விற்பன்னர் வாசுதேவன் சார்,
நடிப்பைப் படைத்த இறைவனின் "என் ஆச ராசாவே..." பாடலான 'கட்டுனன் கட்டுனன் கோட்ட ஒண்ணு' பாடலுக்கு பற்பல நன்றிகள் ! இப்பாடலுக்கு முன்னோட்டமாக அமைந்த தங்களின் வர்ணனை பிரமாதம் !
What a divine dance & acting performance !
நமது இதயதெய்வத்தின் புகழ் என்றென்றும் ஓங்குக !
நமது 'வாசு'வின் வசீகரிக்கும் வதனத்தை நேர்த்தியான நிழற்படங்களாக வழங்கிய எங்கள் வாசு சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !
'ஏ.. ராஜா.. ஒன்றானோம் இன்று' பாடலுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
டியர் mr_karthik,
தங்களது பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
டியர் சந்திரசேகரன் சார், நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
இங்கு மட்டுமா ! அயல்நாடான இலங்கையிலும்
'சாதனைகளின் சக்கரவர்த்தி சிங்கத்தமிழனே'
என்பதனை அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக
நிரூபிக்கும் அற்புதமான கட்டுரை
வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1987
http://i1094.photobucket.com/albums/...EDC4476a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4477a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4478a-1.jpg
இக்கட்டுரையை வடித்த திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும் !
திரு.யாழ் சுதாகர், தற்பொழுது பண்பலை வானொலி அலைவரிசைகளில் [FM Radio Channels] நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார் !
அன்புடன்,
பம்மலார்.