Originally Posted by
Murali Srinivas
இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமாக விவாதிக்கப்படுவது DTH பற்றிதான். இந்த DTH முறையில் படத்தை நேரிடையாக வீடுகளில் திரையிடும் முறையிலும் நடிகர் திலகம் நுழைகிறார் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. புதிதாக மெருகேற்றப்பட்டு புது பொலிவுடன் தியேட்டர்களில் வெற்றி வலம் வந்து 2012-ல் பல திரையரங்குகளையும் வாழ வைத்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைக் காவியத்தை DTH மூலமாக வெளியிட்டால் சிறப்பாகவும் லாபகரமாகவும் இருக்கும் என நினைத்த ஒரு DTH நிறுவனம் ராஜ் டிவியை அணுகியிருப்பதாகவும் அவர்கள் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என்று சொல்லியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜ் டிவி பற்றி சொல்லும் போது வேறு ஒரு தகவலும் வந்தது. ராஜ் டிவியின் வசம் நெகடிவ் உரிமை இருந்த காலத்தை கடந்து நிற்கும் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழை பாரெங்கும் பரப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்தியாவின் மிகப் பெரிய வணிக குழுமத்தில் இடம் பெற்றுள்ள entertainment wing பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. படத்தை மெருகேற்றி அவர்களே உலகமெங்கும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது! இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இந்த காவியம் பெரிய அளவில் reach ஆகும் எனபது திண்ணம்.
அன்புடன்