http://i818.photobucket.com/albums/z...ps89dc8f84.jpg
Printable View
ப்ராப்தம் தொடர்கின்றது -------
இந்த படத்தின் சில சிறப்பு அம்சங்கள்
1. இந்த படத்திலும் nt பணம் வாங்கவில்லை - மற்ற காரணங்களால் ஏற்பட்ட நஷ்டங்களிலும் பெரும் பகுதியை nt ஏற்று கொண்டார் .
2. தான் சொன்ன சில மாறுதல்களை சாவித்திரி ஏற்று கொள்ளாவிடிலும் அதனால் மனம் தளராமல் உதவி செய்தார்
3. பாடல்கள் மூலம் படம் நஷ்டத்தை ஈடு செய்தது
4. படத்தில் அதிகமாக தெலுங்கு வாசனை இருக்கும்
5. படத்தில் nt யின் நடிப்பு புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும்
தொடரும்
அன்புடன் ரவி
ஒரு படத்தின் வெற்றி என்பது - 100 நாட்கள் , அதற்கும் அதிகமாக ஓடினதை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது - படத்தின் கதை , பாடல்கள் , இயக்கிய விதம் , ஒளிபதிவு , தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர்கள் , நகைச்சுவை கதையுடன் ஒட்டி போகுதல் , கதையின் விறுவிறுப்பு - இப்படி பல - இப்படி ஒன்றுமே இல்லாத பல படங்கள் 100 நாட்களும் , அதற்கும் மேலாக ஒட்டப்பட்டுள்ளன ( ஓடவில்லை) -
அந்த படத்தை பார்த்தாலே தெரியும் - ஓடினதா அல்லது , ஓட்ட படுள்ளதா என்று - அந்த படங்களில் - மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் , கதா நாயகனே தேவை இல்லாமல் இரண்டு வேடங்களில் வருவார் - ஒருவர் அதில் கெட்டவனாக இருந்தால் , அதற்க்கும் தனி வழியில் ஒரு கதை இருக்கும் - பட முடிவில் அவரையும் மனிதரில் மாணிக்கமாக காண்பித்து விடுவார்கள் - பல நடிகைகள் அவரை ஒரு தலையாக காதலிப்பார்கள் - அவர்கள் மட்டுமே காய , மன்னிக்கவும் கனவு காண வேண்டும் - ஹீரோ வுடன் ஓடி , ஆட - ஹீரோ ஒரு ராமனாக வே இருப்பான் ( ஆண்களில் ராமன் கிடையாது என்றாலும் -----)
வில்லன் , யம லோகத்தில் இருந்து இறக்குமதி ஆனது போல் , போல பாவத்தின் மொத்த வடிவமும் அவனே - அவனுக்கு ஹீரோ வை அடிப்பதுபோல ஒரு கனவு காட்சி கூட கிடையாது - தேவையில்லாமல் சத்தம் போட்டு சிரிக்க வேண்டும் - ஆனால் ஹீரோ விடம் அடி வாங்க தயங்க கூடாது - துப்பாக்கி , வெடி குண்டு (RDX ) கையில் வைத்திருந்தாலும் , ஹீரோவை பார்த்தவுடன் , அவைகள் சக்தியை இழந்துவிடும் - ஹீரோ விற்கு கண்ணிலாத சகோதரி , கணவன் இல்லாத தாய் கண்டிப்பாக இருக்கவேண்டும் - நகைச்சுவை என்பது ஒரு மருந்துக்கும் இருக்காது - அப்படி இருந்தாலும் ஹீரோ வை புகழ மட்டுமே அவை உபயோகப்படும் - மலையின் உச்சியில் , கண்கள் இல்லாத சகோதரியை வில்லன் கீழே தள்ள முயற்சிப்பான் - ஹீரோ காதலித்துகொண்டோ , அல்லது வீட்டில் தாய் கொடுக்கும் உணவை சாப்பிட்டுகொண்டோ , அப்படியே காலால் மலையின் உச்சியில் இருக்கும் வில்லனை அடிப்பார் ( theatre இல் விசில் பறக்கும்) - வில்லன் ஓடிவந்து , காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் - ஹீரோ இரண்டு வேடம் இருந்தால் - இருவரும் சகோதர்கள் ஆகிவிடுவார்கள் - அதற்க்கு ஒரு "பின் கதை" இருக்கும் - நம் எல்லோர் காதிலும் குறைந்தது 20 முழமாவது பூவை சுத்துவார்கள் .
இப்படி எந்த மசாலாவுமே இல்லாமல் யதார்த்தமாக வந்து வெற்றி வாகை சூடியவைகள் தான் NT யின் படங்கள் - அதனால் வெற்றி என்று வேறு எவருக்காவது யாராவது சொன்னால் அது பல நடிகைகள் ஹீரோவுடன் சேர்ந்து காணும் கனவு கட்சிகள் போல - அதில் உண்மை கடுகளவும் இருக்காது , இருக்க முடியாது
அன்புடன் ரவி
:):smokesmile:
கதை சுருக்கம்
கண்ணன் & ராதா இளம் ஜோடி , காலேஜ்இல் ஒன்றாக படித்தவர்கள் - திருமணம் நன்றாகவே நடந்தது .அவர்களை தேன் நிலவுக்கு அனுப்ப அவர்களுடைய காலேஜ் முழுவதுமே திரண்டு வந்து வாழ்த்தி வழி அனுப்பியது - கதை அருமையாக ஆரம்பித்து மெதுவாக அவர்களின் பூர்வ ஜென்ம வாழ்க்கைக்கு அழைத்து சென்றது . சொந்தங்கள் ஒரு தொடர் கதை , முடிவே இல்லாதது என்பதை எடுத்துக்காட்டவே அவர்களின் முந்தய பிறவியின் தொடர்பை நமக்கு தெளிவு படுத்துவார்கள் . கதையுடன் நாமும் சற்றே பின்னோக்கி செல்கிறோம் -----
கண்ணன் , கோபியாக படகு ஓட்டும் பணியில் இருக்கிறான் - அவனின் உள்ளம் ராதாவை விரும்பிகின்றது - தடையாக வருவது அவர்களின் ஜாதி , அந்தஸ்து ---- இதன் நடுவில் கண்ணை gowri என்னும் பெண் , கண்ணனின் ஊரை சேர்ந்தவள் ஒருதலையாக காதலிக்கின்றாள் - கண்ணன் ராதாவை தானே விரும்புவான் !!
ராதாவின் மாமா கெளரியின் அழகில் மயங்கி அவளை அடையும் முயற்சியில் , கண்ணனால் தோல்வியை தழுவிகின்றார் . ராதாவும் சந்தர்ப்ப வசத்தினால் வேறு ஒருவனை ( ஸ்ரீகாந்த்) திருமணம் செய்துகொள்கின்றாள் - ராதாவின் திருமணம் வெகு நாட்கள் தங்க வில்லை - விளைவு - ராதா ஒரு விதவையாகி விடுகின்றாள் - கண்ணன் - ராதா உன்னதமான உறவை ஊர் ஏற்றுக்கொள்ளவில்லை - முடிவு அவர்களின் முடிவுடன் ஒத்துபோகின்றது - இருவரும் இன்னும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் மீண்டும் கண்ணன் - ராதாவாகவே பிறக்க விரும்பினர் - அவர்கள் விருப்பம் நிறைவேறியது ---- சுபம்
தொடரும்
ப்ராப்தம் முழு நீள படம் கிடைக்கவில்லை - கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் - அது வரை இதன் ஹிந்தி version - Milan -1967 பார்க்கலாம் - இதன் கலர் இந்த படத்திற்கு ஒரு வெற்றியை தந்தது - இந்த NT தந்த அறிவுரையை சாவித்திரி கேட்டுருந்தால் , படத்தின் ப்ராப்தம் வேறு விதமாக அமைந்திருக்கும் ...
ப்ராப்தம் - அலசல் இத்துடன் முடிவடைகிறது - அடுத்த அலசல் - காவல் தெய்வம் - பிறகு பேசும் தெய்வம் ----- பதிவுகளை பொறுமையாக படிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் ---
அன்புடன் ரவி
:):smokesmile:
http://youtu.be/zYNqF3koI7M
Mr Ravi
It is nice to see your reviews on Praptam and do continue
your good work.
Mr Murali Sir,
Thanks a lot for your quick response on Santhippu. It shows NT's BO Power once again
and it is a fitting reply to those who are propagating later part movies of NT will not
succeed well.
Regards
காவல் தெய்வம்
நம்மில் பெரும்பான்மையோர் கிடைக்க முடியாத வாழ்க்கைக்குத்தான் அதிகமாக அஸ்திவாரம் போடுகிறார்கள் .
கிடைத்த வாழ்க்கையை வெகு சீக்கிரமாக தொலைத்து விடுகின்றோம் - தேடி அது திரும்ப கிடைக்கும் சமயத்தில் வாழ்க்கையும் முடிந்து விடுகின்றது - இந்த இடைப்பட்ட நேரத்தில் , நாம் தான் எல்லாமே என்ற எண்ணம் வேறு !! - பல கற்பனைகள் நமக்குள்ளேயே பிறந்து மடிந்தும் விடுகின்றது -
ஒரு அருமையான பாடலுடன் ' காவல் தெய்வத்தை " அலச விழைகிறேன் ---
" பொறப்பதும் போவதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்க்கை
பணி முடிந்தபின் ஒய்வது வாழ்க்கை "
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இல்லை உதிர்ந்துவிடுமோ
சில தினத்தினிலே -----
இச்சையினால் வந்த இந்த வாழ்கையிலே
என்னை என்ன என்னமோ
செய்ய வைத்தான் வேகத்திலே
( கோரஸ் --பொறப்பதும் ---)
தாய் அணிந்து மகிழ்ததுவும் ஒரு கயிறு
என்னை தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு
தென்னை மரம் ஏறிடவும் ஒரு கயிறு - இன்று
தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு
( கோரஸ்- பொறப்பதும் ---)
ஏறாத மரங்களே இல்லை ஐயா
எதிர்வரும் தூக்கு மரம் ஒரு துரும்பே ஐயா
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பேனையா
அதை மாற்ற வேறு தீர்ப்பு உண்டோ சொல்லுங்க ஐயா
(தனி குரல் -பொறப்பதும் )