ஜனவரி 17 தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர் அனைவரும் இந்த தேதி நினைத்து பார்த்து புளகாங்கிதம் அடைந்த நாள். ஆம், இந்த புண்ணிய பூமியில் காலடிஎடுத்து வைத்து நம் தமிழகத்தில் உள்ளத்தை உறையவைத்து ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் அசரீரியாய் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து, குரல் மட்டுமல்ல...தன்னால் முடிந்தவரை நல்ல ஒரு வாழ்வும் வளமும் பெருக்கிகொடுத்த மூன்றெழுத்து மந்திர சொல்லிற்கு நிரந்தர சொந்தக்காரர் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் M G R அவர்கள் அவதரித்த நாள்.
இந்த நல்ல நாளில் மையம் திரி மக்கள் திலகம் புகழ் பாமாலையை தமது உயிர் மூச்சாக பாடிகொண்டிருக்கும் உண்மையான பக்தர்கள் மற்றும் அவரின் மட்டுமே உண்மையான விச்வாசியாக என்றும் இருக்கும் திரியின் ஜென்டில்மேன் திரு எஸ்வி, பழுத்த அனுபவச்த்தர் அனைவரையும் தகுதியறிந்து அதற்கேற்றபடி போற்றும் நடுநிலையாளர் திரு குமார் (பெங்களுரு) , தகவல் களஞ்சியம் மற்றும் எண்ணிக்கையால் மட்டுமே வயது ஏறிய முரட்டு பக்தர் பேராசிரியர் திரு செல்வகுமார், இளம் புயல் திரு கலைவேந்தன், இனமான நண்பர் திரு யுகேஷ், மக்கள் திலகம் படங்களை விதவிதமாக செதுக்கும் கைதேர்ந்த சிற்பி திரு முத்தையா அம்மு, திரு ரூப் மற்றும் திரு பிரதீப் பாலு ஆகியோருக்கு மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.
மக்கள் திலகம் மட்டுமல்லாது கட்சியை சார்ந்த மற்றவர்களின் விச்வாசியாகவும் இருக்கும் திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன், திரு கலியபெருமாள், திரு சுகராம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...!
மானிடராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரகன்றயாவது பிறர்க்கு பயன்படுமலவிர்க்கு நடவேண்டும் என்ற ஆன்றோர் சொல்லை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சென்ற ஏழைகளின் ஏந்தல் திரு MGR அவர்களின் இந்த பாடலை இந்த நன்னாளில் அவருடைய எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்குபதிவு செய்கிறேன்.
உங்கள் அனைவரின் சேவையும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகின்றேன்.
https://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM