-
ரவி சார்,
தந்தை (கருவின் கரு) தகதகக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக மனதை நெகிழச் செய்யும் அந்த கொசுக் கதை. அருமை. பிள்ளைகளை வளர்க்க. ஒரு தந்தை எப்படியெல்லாம் பாடுபடுவான் என்பதை சொல்லாமல் சொல்கிறது. பிள்ளைகளின் கேள்விகளுக்கே இந்த நிலை என்றால் அவர்களை படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
நடிகர் திலகத்தின் 'கவரிமான்' பாடல் விளக்கமும் அழகு.
அருமையாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-
'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ'
'தாய்க்குப் பின் தாரம்'
ரவி சார்,
http://i.ytimg.com/vi/orO_mD4Obes/hqdefault.jpg
http://i58.tinypic.com/28medtt.jpg
நடிகர் திலகத்தின் 'அன்னையின் ஆணை' படத்தில் 'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' பாடலை தங்கள் 'கருவின் கரு'வில் அலசி விட்டீர்கள்.
இப்போது தந்தை தொடரில் அசத்துகிறீர்கள்.
உங்கள் அனுமதியோடு தந்தை பெருமை பறை சாற்றும் ஒரு அற்புதப் பாடலை இங்கே நான் பதிந்து, உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
http://i.ytimg.com/vi/EUSZoQRjnyU/hqdefault.jpg
இந்தப் பாடலும் ஒரு அரிதான பாடல்தான்.
சதிகாரர்களின் சதியால் தந்தையின் உயிர் காளையின் கொம்புகளுக்கு பலியாகி, காலத்தின் கோலத்தால் காலனிடம் போய் சேர்ந்துவிட, அக்கிரமக்காரர்களால் அடைத்து வைக்கப்பட்ட மகன் தப்பி ஓடி வந்து, தந்தையைப் பார்க்க முடியாமல் இடுகாட்டில் அவர் தகனமாவதைப் பார்க்கிறான். தலையில் அடித்து அழுகிறான். துடித்துத் துவல்கிறான். தவித்துப் புலம்புகிறான். தந்தையின் சிதையை கண்ணீரால் அணைக்க முயற்சி செய்கிறான்.
அவர் நினைவாக அரற்றுகிறான். பிதற்றுகிறான்.
'தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவன் என்றால் விந்தை உண்டோ
சர்வமும் அவன் என்றால் விந்தை உண்டோ'
பிள்ளைக்குத் தந்தைதான் சர்வமும். இதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது? பெற்றவள் மடி சுமந்தது மாதம் பத்து என்றால் தகப்பன் சுமந்தது அவன் சாகும் வரை அல்லவா! அன்னைக்கு ஈடு இணை இல்லை. தந்தையும் அவ்வாறே போற்றப்பட வேண்டும்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அவ்வையின் பொன்மொழி வீணா?
ஆண்டவன் போலே நீதியை புகன்றாள்
அனுபவமே இதுதானா?'
'நீங்க சாப்பிடுங்க' என்று மனைவி சொன்னால் 'அவன் சாப்பிட்டானா?' என்று முதலில் பிள்ளையைப் பற்றிக் கேட்பவன் தந்தைதானே!
மனைவி கணவன்பால் கொண்ட பற்றால் முதலில் அவனுக்குப் பரிமாற 'முதலில் அவனுக்கு வை... எனக்கென்ன?' என்று மனைவியை மகனுக்குத் தெரியாமல் முறைப்பவன் தந்தையே.
அது மட்டுமா? தனது தட்டில் இருப்பதைக் கூட எடுத்து 'அவனுக்கு இந்தப் பொரியல் என்றால் ரொம்பப் பிடிக்கும்' என்று அவன் தட்டில் வைத்து உணவோடு சேர்த்து பாசத்தை ஊட்டுபவனும் தந்தையே.
பிள்ளையின் எதிர்காலம் ஒன்றையே தனது லட்சியமாகக், குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தந்தையை கண்ணீருடன் இந்த மகன் நினைத்துப் பார்க்கிறான். அவன் என்ன சொல்லி வருந்துகிறான் பாருங்கள்!
'உயிரோடு மன்றாடி' என்று தந்தை தனக்காக உருக்குலைந்து போனதை நினைத்து வருந்துகின்றான். இந்த ஒரு வார்த்தையிலேயே தந்தையின் பெருமையை முழுவதுமாக அவன் நமக்கு உணர்த்தி விட்டான்.
'உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே?
உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா'
தந்தைக்கு மூட்டிய சிதையை, அதில் எரிந்து போன அவரின் சதையை, கதை போல் ஆன அவர் வாழ்வை நினைத்து விதியால் அவர் வெந்து தணிந்ததை இப்படி நொந்து பாடுகிறான். அவ்வைப் பாட்டியின் பொன்மொழி கூட அவனுக்கு இக்கணம் பொய்யே.
'காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதிதானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதிதானா?
தந்தை கனலானார் விதிதானா?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அவ்வையின் பொன்மொழி வீணா?
அவ்வையின் பொன்மொழி வீணா?'
பாடகர் திலகத்தின் நா தழுதழுத்த உச்சஸ்தாயி குரலில், உயிரிழந்த உத்தமத் தந்தையின் (ஈ.ஆர் சகாதேவன்) நினைவாக திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் சோகத்துடன் நடிக்க, 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் தந்தை குலத்தின் பெருமை பேசும் உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்.
ஆனால் இந்தப் பாடலை படத்தில் பார்க்காமல் முதன் முதல் வெளியில் கேட்பவர்களுக்கு நடிகர் திலகத்தின் படப் பாடல் போலவே தோன்றும்.
https://youtu.be/8DAR54U70g8
ஹைய்யா! நானும் ஒரு தந்தைப் பாடல் எழுதி விட்டேனாக்கும். :)
-
வாசு - கொஞ்சம் கோபாலிடம் இருந்து கடன் வாங்கிய வார்த்தைகள் இவை ----
"எப்படி என் மனதை படிக்கிறீர்கள் வாசு !" - நேற்று ஹைதராபாதில் கொஞ்சம் தோண்டினதில் கிடைத்த பாடல் இது - தூசியை தட்டுவதற்குள் இந்த பாடல் பறந்து நெய்வேலிக்கு சென்று விட்டதே !!!
இந்த பாடல் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறது பாருங்கள் - என் கையில் அகப்பட்டு சிக்காமல் உங்கள் கை வண்ணத்தில் மலர்ந்து மீண்டும் எல்லோரையும் கேட்க்கத்தூண்டுகிறது . நன்றி வாசு ....
-
-
கருவின் கரு - 110:smile2::)
பாகம் 2 - தந்தை
பால் சாதத்தில் அன்பை உணர்த்தினாள் அம்மா - ஆனால் ஒரு கை அழுத்தத்தில்
எல்லாவற்றையும் உணர்த்துவார் அப்பா
பிறர் முன்னால் என்னை ஹீரோ ஆக்குவாள் அம்மா - முன்னாலும் சொன்னதில்லை ;
பின்னாலும் சொல்லித்தெரியாது -
கிடைக்கும் என் கப்புக்களில் அப்பாவின் கண்ணீரின் கறை கண்டிப்பாக இருக்கும் ....
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை
உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
எனக்கு கிடைத்தது ஒரு வரம் என்று தெரியாது - அந்த வரத்திடம்
பல வரங்கள் கேட்டுக்கொண்டே இருந்தேன் - இறைவனிடம் இறைவனைப்பற்றி பேசுவது போல்
சொல்லிக்கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை...இருந்தும் காட்டிக் கொடுத்த
கண்ணீரைத்துடைக்க இன்று அப்பாவும் இல்லை..
நண்பனாக இருந்தாய் - தவறு செய்யவில்லை
ஆசானாக இருந்தாய் - கிடைத்த பட்டங்களுக்கு முடிவு இல்லை
அப்பாவாக இருந்தாய் - நீ தான் என் பலம் என்று உணர்தேன்
எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும்
அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?
அப்பா சொன்னது நினைவிற்கு வந்தது
So when tomorrow starts without me
Don't think we're far apart,
For every time you think of me
I'm right here in your heart.
https://youtu.be/0PSBmL2cL-E
-
கருவின் கரு - 111
பாகம் 2 - தந்தை
மதி நடித்த படங்களில் அவருக்கும் , எனக்கும் பிடித்தபடம் " பெற்றால் தான் பிள்ளையா " . சுறுசுறுப்பாக ஓடியாடி சண்டை போட்டு , காதலில் ஒரு புதிய இல்லக்கியத்தை சொல்லிகொடுத்து , பாடல்களால் அனைவரையும் மயக்கும் இவரிடம் உணர்ச்சிகள் இவ்வளவு கொட்டிக் கிடக்கின்றதே என்று என்னை அயர வைத்த படம் . முதலில் கிடைத்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிப்பார் -- பிறகு அதே குழந்தைக்காக வாழத்துடிப்பார் - இடையில் கிடைத்த காதல் அவரை கட்டிப்போடாது - அந்த குழந்தையின் பெற்றோர்கள் வந்து முறைப்படி நீதி மன்றத்தில் அந்த குழந்தையை திருப்பிக்கேட்டுக்கும் போது அவருடன் சேர்ந்து நாம் எல்லோருமே " பெற்றால் தான் பிள்ளையா " என்று கத்துகிறோம் - MGR படம் என்று பறைச்சாற்றுவது தேவை இல்லாமல் திணிக்கப்பட்ட ஒரு சண்டை காட்ச்சி மட்டுமே - படம் முழுவதும் மதி நம்மை கட்டிப்போட்டுவிடுவார் - பாசம் என்பது பெறாமலும் வரலாம் என்பதை உலகிற்கு அருமையாக எடுத்து சொன்ன படம் ....
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
(செல்ல)
நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணால் கொடி வளர்த்து
காதல் மலர் பறித்து
பெண்ணில் குழல் முடிக்க
வள்ளல் தருவான்
(செல்ல)
ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து
நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
(செல்ல)
https://youtu.be/3UG6vVlwZyc
https://youtu.be/miHGvS385h0
-
கருவின் கரு - 112
பாகம் 2 - தந்தை
மகராஜா ஒரு மகாராணி ---- இந்த தந்தையிடம் தான் எத்தனை மகிழ்ச்சி - பெருமிதம் , பூரிப்பு - தன் மகளுடன் எப்படி விளையாடுகிறார் ?? ஒவ்வொரு மகளும் இதைத்தான் தன் தந்தையிடம் எதிர் பார்க்கிறாள் - ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைகளுடன் குழந்தையாக இருக்கத்தான் விரும்பிகிறான் - காலம் என்னும் சக்கரம் மட்டும் ஓடாமல் இருந்தால் அல்லது சற்றே மெதுவாக சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?!! பத்து மாதங்கள் சுமப்பவளும் சுமக்க முடியாத பிணைப்பு - அப்பா - மகள் உறவு ! இதை எழுதி தெரிந்துகொள்ள முடியாது - உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டிய உன்னதமான உறவு ----
https://youtu.be/YifS0OtnvPA
-
கருவின் கரு - 113
பாகம் 2 - தந்தை
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
கண்ணதாசன் தினமும் வாழும் பாடல் இது - பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்ல ஒரு தொல்லை -------
https://youtu.be/Fo_dKWe-MoE
-
வாசுவும் ,நானும் பேசி கொண்டிருந்த போது ,ஏன் கேமரா ,இசை பற்றி விலாவரியாக எழுத கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் சொன்னேன். கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற கணக்காக ,இவ்வளவு சுளுவாக எழுதியும் இரண்டே ரசிகர்கள். வாசுவும்,ராகவேந்தரும்.ரசனை உள்ளதாக பீற்றி கொள்ளும் முரளியும், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர் ஆக மாறி விட்டார். இந்த அழகில் ஆழமான விஷயங்களா ,மூச்.....
வாசுவிடம் பேசியதற்காக கொஞ்சமே கொஞ்சம்.
இந்த படம் ரோஷோமோன் ஒரு சராசரி கேமரா லென்ஸ் வைத்து deep -focus முறையில் எடுக்க பட்டது .மூவர் சம்பந்த பட்ட close -up ஷாட் படத்தின் கருவின்கருவை காட்டி விடும்.
இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.
ஒளியையும் ,நிழலையும், மழையையும்,சூரியனையும்,மப்பு மந்தாரத்தையும் கதாபாத்திர எண்ண எழுச்சிகள்,,மற்றும் குறியீடுகளாய் அமையும். இறுதி காட்சி அதற்கு சான்று. (இரண்டே செட் ரோஷோமோன் வாயில்,விசாரணை இடம்.மீதி காட்டில்.)
அந்த கால படங்களில் 200 சாட் இருந்தாலே பெரிசு. 407 ஷாட்கள் எடுத்து எடிட் டருக்கு செம வேலை. அழகாக டெக்னிகல் திறமை,அனுபவம் எல்லாவற்றையும் காமெரா,எடிட்டிங் காட்டி விடும் இயக்குனர் தலைமையில்.
குரசோவா வுக்கு மௌன படங்கள் மிக பிரியம். படங்களில் மௌனம் பெரும் பங்கு வகித்தாலும் (இரைச்சல் படங்களை இன்னும் கடினமாக்கி விட கூடும்). இவர் பாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கு தக்க அப்போது பிரபலமான பாடல்,இசை ஆகியவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் பாரம்பரிய இசை. அதிலும் counter -point என்பதில் பிரியம். (இளையராஜா ரசிகர்களிடம் கேளுங்கள்)
குரசோவா ,அப்பா இறந்ததும் புதிய பறவை கோபால் ரேஞ்சில் விரக்தியுடன் உலவும் போது ,ஒரு துள்ளலிசை கேட்டு மூட் மாறியதிலிருந்தே counter -point ரசிகராகி விட்டார்.படத்திலும் பரவலாக உபயோகிப்பார்.
பின்னாட்களில் ,seven samurai ,படத்திலிருந்து Long Lenses ,Telephoto Lenses ,உபயோகித்து,பல காமிராக்களில் படம் பிடித்து, தொகுப்பில் ,நடிகர்களே எதிர்பார்த்திராத நடிப்பை,இயல்பாக கொண்டு வந்து விடுவாராம்.பின்னாட்களில் அகல திரைக்கும் போனார்.
கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே இவர் எடிட்டிங் நேர்த்தி அலாதி. வெட்டிலிருந்து ,எடிட்டிங் படத்தின் ஓட்டத்தோடு செல்லும் படி அமையும்.காமிராவை ஒரு நடிகர் அல்லது இடத்தின் அருகாமைக்கு கொண்டு சென்று பின் நகர்வதை, கிரேன் ஷாட் வைக்காமல்(Tracking Shots with Dissolve ),jump Cut match செய்து சாதித்தாராம். இதன் தன்மையே அலாதி.
இத்தனைக்கும் இவர் படங்கள் நேர்கோட்டில்,சாதாரமாக, சம்பவங்களின் தொகுப்பில் ,பழைய பாணியிலே நகரும் தன்மையுடையது. ஆனால் படமாக்கும் விதத்தில்,திரைகதை நேர்த்தியில் பள பள புதுமையில் அனைவரையும் கட்டி விடும்.
-
//இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.//
http://cdn.gunaxin.com/wp-content/up...rashomon-1.jpg
https://thevoideck.files.wordpress.c...m-10-46-08.png
http://lisathatcher.files.wordpress..../rashomon1.jpg