மலையாள பூமியிலிருந்து
மதராசப் பட்டணத்திற்கு
வந்தீர்கள்-
கையில் ஒரு பெட்டியோடு.
அடுத்தவருக்குத்
தேவையானதும்
நிரம்பி வழிந்த
ஆச்சரியப் பெட்டியது.
அந்தப் பெட்டியில்
இருந்தது,
எங்களை சிரிக்க வைத்தது.
ஆட்டம் போட வைத்தது.
அழ வைத்தது.
ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.
ஆசுவாசம் செய்வித்தது.
நிம்மதியாக்கியது.
அந்தப் பெட்டியின்
செல்வத்தை,
பல இலட்சம் முறைகள்
களவாடியிருக்கிறது..
காற்று.
பெட்டியோடு
நீங்கள் வந்து
ஜெயித்துச் செழித்த
பிற்பாடு,
அதே மாதிரியான
பெட்டியோடு
வந்திறங்கிய
அம்புட்டுப் பயல்களுக்கும்
அந்தப் பெட்டி மீது
ஒரு கண்.
------
-அமரர் அய்யா எம்.எஸ்.வி
அவர்களது பிறந்தநாளன்று
நான் எழுதிய கவிதை இது.
அவர் வைத்திருந்த அந்த
ஆச்சரியப் பெட்டியின் செல்வத்தை அனுபவிக்க
அடுத்தடுத்த தலைமுறைகள்
பிறந்து கொண்டேயிருக்கின்றன.
அய்யா நடிகர் திலகம் போல,
கவியரசர் போல, மெல்லிசை
மாமன்னரும் காலத்தின் கொடை.
இறைவன் நமக்களித்த இசைச்
சொந்தம்.
கொண்டாடப்பட வேண்டியவரை கொண்டாடியிருக்கிறீர்கள்.
வியப்பான அந்த
இனிப்புக் கடலில்
சில துளிகளைப்
பருகத் தந்திருக்கிறீர்கள்.
"இவர் மட்டும் இல்லையென்றால்..?"என்கிற
நமது பதைப்புக் கேள்வி நடிகர் திலகத்தைப் போலவே
மெல்லிசை மன்னருக்கும்
பொருந்தி வருகிறது.
பூவும்,மணமும் போல..
புன்னகையும்,உதடும் போல...
அன்பான உதவியும்,
அதற்கான நன்றியும் போல..
ஆலயமும்,நிம்மதியும் போல..
நடிகர் திலகமும்,மெல்லிசை
மாமன்னரும் இணைந்து செய்த
சாதனைகளுக்கு உவமை சொல்ல இது போல ஏராளமான
"போல"க்களைப் போடலாம்.
சிறப்புக்கு சிறப்பு செய்த நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பிற்கெனது நன்றிகள்.
https://youtu.be/NaItT2DZVXU
Sent from my GT-S6312 using Tapatalk