Thanks Vicky.
As Mr.Murali mentioned it was indeed dubbing. Unbelievable :bow:
Interesting series Mr.MuraLi. Thank You !
Printable View
Thanks Vicky.
As Mr.Murali mentioned it was indeed dubbing. Unbelievable :bow:
Interesting series Mr.MuraLi. Thank You !
:D 8-)Quote:
Originally Posted by Murali Srinivas
சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்
1972 -ம் வருட தொடர்ச்சி
4. தர்மம் எங்கே - 15.07.1972
இந்த வருடத்தில் வெளியாகி 100 நாட்கள் என்ற வெற்றி கோட்டை தொட முடியாமல் போன ஒரே படம்.
மதுரை -ஸ்ரீதேவியில் முதல் 16 நாட்களில் நடைபெற்ற 55 காட்சிகளில் 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 50
5. தவப்புதல்வன் - 26.08.1972
இந்த வருடத்தின் நான்காவது 100 நாட்கள் படம்.
100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை சகாப்தத்தின் கடைசி அத்யாயம் [இந்த படத்திற்கு பிறகு அவர் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே நடித்தார். அதில் ஒன்று கௌரவ தோற்றம்].
ஆங்கில படங்களே திரையிடப்பட்ட சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - தவப்புதல்வன்.
இதன் பின்னணியை பார்த்தால் பட்டிக்காடா பட்டணமா ஓடிக்கொண்டிருக்கும் போதே அதை தாண்டி, வசந்த மாளிகையின் வெற்றி வீச்சையும் சமாளித்து, தமிழகத்தில் அன்று நிலவிய அசாதாரண சூழ்நிலையையும் மீறி, தீபாவளியையும் தாண்டி 100 நாட்கள் ஓடியது என்றால் நடிகர் திலகத்தின் Boxoffice Power என்ன என்பது புரியும்.
மதுரை - சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 70
6. வசந்த மாளிகை - 29.09.1972
என்றென்றும் புகழ் மங்கா திரை ஓவியம். ரசிகர்களின் நெஞ்சங்களில் காவியம்.
இந்த வருடத்தின் ஐந்தாவது 100 நாட்கள் படம்
[html:5026924772]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vm100days.jpg">
[/html:5026924772]
இந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படம்
இந்த காலண்டர் வருடத்தின் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய மூன்றாவது படம்.
ராஜா
பட்டிக்காடா பட்டணமா
வசந்த மாளிகை
மதுரை - நியூ சினிமாவில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 113.
[அதாவது முதல் 33 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
மதுரை நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 200
மதுரை நியூ சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் வசந்த மாளிகை.
200 நாட்களின் மொத்த வசூல் - Rs 5,30,536.15 p
வரி நீக்கி நிகர வசூல் - Rs 2,92,183.53 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59,098.63 p
மதுரை - நியூ சினிமாவில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் பெற்ற முதல் படம் வசந்த மாளிகை.
மதுரை நியூ சினிமாவில் அதற்கு முன் அதிக வசூல் பெற்ற படத்தை விட குறைவான நாட்களில் அந்த வசூலை தாண்டிய படம் - வசந்த மாளிகை.
மதுரையில் ஒரே காலண்டர் வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை இரண்டாவது முறையாக நடத்தி காட்டினார் நடிகர் திலகம்.
வருடம் - 1959
கட்டபொம்மன் - நியூ சினிமா
பாகப்பிரிவினை - சிந்தாமணி
வருடம் - 1972
பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல்
வசந்த மாளிகை - நியூ சினிமா
மற்றவர்கள் மதுரையில் ஒரு முறை போலும் செய்ய முடியாத இந்த சாதனையை மூன்று முறை செய்தவர் நடிகர் திலகம் மட்டுமே. [மூன்றாவது முறையின் சாதனை அது நடைபெற்ற ஆண்டு வரும் போது வெளியாகும்]
மதுரை தவிர வெள்ளி விழா கொண்டாடிய இடம் - சென்னை
அரங்கு - சாந்தி
ஓடிய நாட்கள் - 176
[இதுவும் கூட நடிகர் திலகத்தின் அடுத்த படமான பாரத விலாஸ் திரையிடப்படுவதற்காக மாற்றப்பட்டது].
மதுரையில் 200 நாட்கள் ஓடிய இந்த படம் ஷிப்டிங்கில் 250 நாட்களை கடந்தது.
இது வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது[1973 பிப்-மார்ச் மாதங்கள்] தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு [இன்றைய இதே அரசு தான் அன்றும்]. திரையரங்குகள் முழுக்க முழுக்க ஜெனரேட்டரை வைத்து ஓட்ட வேண்டிய சூழல். அரங்குகள் இதன் காரணமாக காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை. அப்படி இருந்தும் அதையும் மீறி இமலாய வெற்றி பெற்ற படம் - வசந்த மாளிகை.
7. நீதி - 07.12.1972
இந்த வருடத்தின் கடைசியாக வெளியான படம்
இந்த வருடத்தின் ஆறாவது 100 நாட்கள் படம்.
அதே நாயகன் -நாயகி - தயாரிப்பாளர் -இயக்குனர் - அதே யூனிட் என்று ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே 100 நாட்கள் ஓடிய சாதனையை புரிந்ததும் நடிகர் திலகம் தான்.
ராஜா
நீதி
100 நாட்கள் ஓடிய இடங்கள்
சேலம்
சென்னை - தேவி பாரடைஸ் [99 நாட்கள்]
ஒரே வருடத்தில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.
தவப்புதல்வன்
வசந்த மாளிகை
நீதி
இந்த பொன் வருடத்தின் (1972) மேலும் சில சாதனைகளை நாளை பார்ப்போம்.
அன்புடன்
சிங்கம்ல :thumbsup:Quote:
Originally Posted by Murali Srinivas
:2thumbsup: was it before Deepavali ?? Y'day also I was watching it :DQuote:
Originally Posted by Murali Srinivas
காத்திருக்கிறோம்Quote:
Originally Posted by Murali Srinivas
Its a treat to watch sivaji as rich,suave,egoistic,charismatic man.
he has acted quite a lot of movies like this...they are telecasting par magale par now.
The core theme of this film is about an egoistic person's ambiguity to find out his heir. You could'nt imagine this in today's well advanced technological world.Quote:
Originally Posted by Vivasaayi
Oru DNA test panna mudinjipochu :)
yep!Quote:
Originally Posted by rangan_08
the way he carries himself as a charismatic rich man,with cigarette in his hand and the way he uses coat to take the cash from inner pockets etc...so stylish.
This would have solved many, many old films piratchanai's. Imagine, no more revenge flicks ala the 70s/80s, no reuinion after 25 years plot, etc. DNA finding came and ruined the fun :)Quote:
Originally Posted by rangan_08
:2thumbsup: adichikka mudiyadhunnen.....Quote:
Originally Posted by Vivasaayi
டியர் முரளி,
'குலமா குணமா’ 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
சென்னை - பிளாசா
திருச்சி - பிரபாத்
மதுரை - தேவி
சேலம் - ஜெயா
'சவாலே சமாளி' 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
சென்னை - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
திருச்சி - பிரபாத்
மதுரை - தேவி
சேலம் - ஜெயா
கும்பகோணம் – நூர் மகால் (பிற்பாடு 'செல்வம் தியேட்டர்' என்று பெயர்மாற்றப்பட்டது)
திருச்சி, மதுரை, சேலம் மூன்று நகரங்களிலும் 'குலமா குணமா' 100 நாட்களைக்கடந்தபின் அதே தியேட்ட்ர்களில் 'சவாலே சமாளி' திரையிடப்பட்டது.
டியர் முரளி,
முன்னொருமுறை மதுரை 'தேவி'யில் நடிகர்திலகத்தின் படங்கள் தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஓடியதாக எழுதியிருந்தீர்கள். சென்னை சாந்தியிலும் 1972,73,74 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 641 நாட்கள் ஓடியிருக்கிறது.
பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972 முதல் 28.09.1972 வரை = 146 நாட்கள்
வசந்த மாளிகை - 29.09.1972 முதல் 23.03.1973 வரை = 176 நாட்கள்
பாரதவிலாஸ் - 24.03.1973 முதல் 14.07.1973 வரை= 113 நாட்கள்
எங்கள் தங்க ராஜா - 15.07.1973 முதல் 24.10.1973 வரை = 102 நாட்கள்
கௌரவம் - 25.10.1973 முதல் 06.02.1974 வரை = 105 நாட்கள்
ஆக 1972ல் 239 நாட்கள், 1973 முழுக்க 365 நாட்கள், 1974ல் 37 நாட்கள், மொத்தம் 641 நாட்கள் சென்னை சாந்தியில் தொடர்ந்து நடிகர்திலகத்தின் படமே ஓடியுள்ளது (அனைத்து நாட்களும் தினசரி 3 காட்சிகள் வீதம் தொடர்ந்து 1923 காட்சிகள்).
(பின்னர் 114 நாட்கள் நடிகர்திலகத்தின் படம் சென்னை சாந்தியில் திரையிடப்படவில்லை).
தங்கப்பதக்கம் 01.06.1974-ல் திரையிடப்பட்டு 28.11.1974 வரை 181 நாட்கள் ஓடியது.
1974-ல் சாந்தியில் வெளியான நடிகர்திலகத்தின் ஒரே படம் 'தங்கப்பதக்கம்' மட்டுமே.
இதையடுத்து 11.04.1975 அன்று 'அவன்தான் மனிதன்' சாந்தியில் ரிலீஸானது.
அதே ஆண்டுகளில் மற்ற தியேட்டர்களில் வெளியான படங்கள் (சென்னை மவுண்ட் ரோடு ஏரியா நிலவரம் மாத்திரம்):
ராஜா (தேவி பாரடைஸ் 106 நாட்கள்),
ஞான ஒளி (பிளாசா 113 நாட்கள்),
தர்மம் எங்கே (ஓடியன் 49 நாட்கள்),
தவப்புதல்வன் (பைலட் 112 நாட்கள்),
நீதி (தேவி பாரடைஸ் 99 நாட்கள்),
ராஜ ராஜ சோழன் (ஆனந்த் 103 நாட்கள்),
பொன்னூஞ்சல் (பிளாசா 63 நாட்கள்),
ராஜபார்ட் ரங்கதுரை (பைலட் 102 நாட்கள்),
சிவகாமியின் செல்வன் (தேவி பாரடைஸ் 72 நாட்கள்).