Quote:
ரஜினியின் அடுத்த படம் முடிவாகிவிட்டது. ‘ஜோகையா’. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரின் நூறாவது படம் இது.இதில் ரஜினி கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘‘ரஜினி ஜோகையாவில் நடிப்பது எனது பூர்வ ஜென்ம புண்ணியம்’’என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்கிறார் படத்தின் இயக்குநர் பிரேம். தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட்டுகள் கொடுத்த இயக்குநர். தமிழில் ‘மதுர’, ‘தம்’ படங்களின் நாயகியான ரக்ஷிதாவின் கணவர்.
‘‘எனக்கு மணிரத்னம், ராம்கோபால் வர்மா படங்கள் மிகவும் பிடிக்கும். அந்த இருவரின் கலவைதான் நான். என்னுடைய ‘ஜோகி’ படம் சூப்பர் ஹிட்டானதும் அதை ரஜினி சார் பார்த்தார். அவருக்குப் பிடித்திருந்தது. நல்ல வாய்ப்பு வந்தால் சேர்ந்து பணியாற்றலாம் என்றார்.அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்,அத்தனை எளிமையாய் என்னிடம் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.இப்போ சிவண்ணாவின் நூறாவது படமான ஜோகையாவில் நல்ல கதாபாத்திரம் என்பதால் அவரிடம் சொன்னோம். உடனே ஒத்துக்கொண்டார். இதற்கு நான் மட்டும் காரணமல்ல.ராஜ்குமார் குடும்பத்தின் மீது ரஜினி வைத்திருக்கும் அன்பும் முக்கிய காரணம்.’’
‘‘ரஜினிக்கு என்ன கதாபாத்திரம்?’’
‘‘நான் படத்தைப் பத்தி ரொம்ப சொல்லக்கூடாது. ‘ஜோகையா’ என்பது சிவனின் பெயர்.தீயவற்றை அழிக்கும் சிவனாக நாயகன் இருப்பான். பரபரப்பாக வாழும் அவன் திடீரென்று மனம் மாறி இமயமலை போகிறான். அங்கே ஒரு சன்னியாசியைச் சந்திக்கிறான். அவர் அவனுக்கு வாழ்க்கை நடைமுறைகளை சொல்லித் தருகிறார். அவனை ஆசீர்வதிக்கிறார்.அந்த இமயமலை சன்னியாசியின் உதவியோடு நாயகன் எதிரிகளை அழிக்கிறான் என்பதுதான் அடிப்படை கதை.’’
‘‘ரஜினிதான் இமயமலை சன்னியாசியா?’’
‘‘சார், அதை இப்போ என்னால சொல்ல முடியாது. நீங்களே புரிஞ்சுக்குங்க.படம் வந்ததும் ரஜினிக்கு இத்தனை சக்திவாய்ந்த கதாபாத்திரமா என்று நீங்களே ஆச்சரியப்படப் போகிறீர்கள்.’’