THANK YOU VASUDEVAN SIR
http://i45.tinypic.com/2d6nrrs.png
http://i46.tinypic.com/mb5x1z.jpg
THANK YOU VASUDEVAN SIR
http://i45.tinypic.com/2d6nrrs.png
http://i46.tinypic.com/mb5x1z.jpg
எத்தனையோ லாரன்ஸ் போன்ற 'அதிமேதாவி' களை சக்கை வேறு சாறு வேறாகப் பிழிந்தெடுத்த எங்கள் அருண் என்ற ஆண்டனிக்கு இந்த சாத்துக்குடிகளும், ப்ளம் பழங்களும், ஆரஞ்சுகளும் எம்மாத்திரம்!
http://i1087.photobucket.com/albums/..._037900127.jpg
http://i1087.photobucket.com/albums/..._037905767.jpg
http://i1087.photobucket.com/albums/..._037928607.jpg
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 6.
படம்: திருடன்
வெளிவந்த ஆண்டு: 1969
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/1-2.jpg
இயக்கம்: A.C.திருலோகசந்தர் M.A.
நடிகர் திலகத்துடன் மோதும் வில்லன் : ராமகிருஷ்ணன்
சிறுகுறிப்பு: இந்த சண்டைக்காட்சியில் நடிகர் திலகத்துடன் மோதும் வில்லன் ராமகிருஷ்ணன் 'காமெரா மேதை' கர்ணனின் ஆஸ்தான ஸ்டன்ட் நடிகர். கர்ணன் தான் இயக்கிய கங்கா, ஜக்கம்மா, ஒரே தந்தை, காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து போன்ற அனைத்துப் படங்களிலும் ராமகிருஷ்ணனைப் பயன்படுத்தி இருப்பார். நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/2-1.jpg
இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு பம்மலாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
'திருடன்' படத்தில் நடிப்பால், குணத்தால் நம்மைத் திருடியவரின் அட்டகாசமான 'ஜூடோ' டைப் பைட். ஒரு குழந்தையைத் திருடிக் கொண்டு வருமாறு நடிகர் திலகத்திடம் கொள்ளையர் தலைவன் பாலாஜி பணிக்க, முதலில் குழந்தையைத் திருடி வர மறுத்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரித்து திருடிக் கொண்டு வில்லன் ராமகிருஷ்ணனிடம் மாடியில் இருந்து தூக்கிப்போட, எதிர்பாராதவிதமாக குழந்தையின் தாய் குழந்தையைப் பிரிந்த அதிர்ச்சியில் மயக்கமாக, காலமான தன் தாய் தன் மனக்கண் முன்னே காட்சியளித்து, "நீ செய்வது மிகப்பெரிய தவறு," என்று கூறி மறைகையில், மனம் மாறி குழந்தையை திரும்ப அதே தாயிடம் ஒப்படைக்க வில்லன் ராமகிருஷ்ணனிடம் சென்று குழந்தையைக் கொடுக்குமாறு கேட்க, வில்லன் மறுக்க, காரின் அருகில் ஆரம்பமாகும் அமர்க்களமான சண்டைக்காட்சி. சும்மா பந்து போல் துள்ளி, உருண்டு, நடிகர் திலகம் (சும்மா பள்ளிக்கூட பையன் போல அவ்வளவு இளமையாக படு ஸ்லிம்மாக 'சிக்'கென்று இருப்பார்) தன் கால்களால் கொஞ்சமும் டூப்' இல்லாமல் வில்லனின் இடுப்பில் பிடிபோட்டு, நாம் எதிர்பாராத வகையில் 'ஜூடோ'வை கையாள்வது செம ரகளை. குத்துக்கள் வெட்டுக்களாக விழும் வேகம், குழந்தையை பத்திரமாகத் தாயிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற பதைபதைப்பு, சண்டையிட்டுக் கொண்டிருக்க இது நேரமில்லை என்ற அசுரவேக வினாடித் தாக்குதல்கள் அனைத்தும் சேர்ந்து இந்த அட்டகாச சண்டைக்காட்சியை சிகரத்துக்கு கொண்டு செல்கின்றன. இனி நடிகர் திலகத்தின் 'ஜூடோ' தாக்குதல்கள்.
http://www.youtube.com/watch?v=IL464...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
திரு வாசு சார்,
திருடன் ஜூடோ சண்டைக்காட்சி அருமை .என் தந்தைக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் சண்டைகாட்சிகளில் இதுவும் ஒன்று என்பதால் இதற்க்கு என் மனதில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.உங்கள் தொடரில் அடுத்து மாற்றுமுகாமின் ஆளை புரட்டும் 'தியாகம்'தானே?
அன்புள்ள வாசுதேவன் சார்,
'திருடன்' படத்தில் இடம்பெற்ற பல்வேறு சண்டைக்காட்சிகளில் மிக முக்கியமான, அற்புதமான சண்டைக்காட்சியை இங்கே பதிவிட்டு அசத்திவிட்டீர்கள். இதே படத்தில் ஓடு ரயிலின் மேலே நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் அண்ணாநகர் டவர் மீது நடக்கும் சண்டைக்காட்சியும் கூட சூப்பர் என்றாலும், இது அனைத்திலும் விசேஷமானது.
குழந்தையைக் கடத்தும் முன் கண்ணாடிக்கதவைத் திறக்க நடிகர்திலகம் மேற்கொள்ளும் உத்தி கைதட்டல் பெற்றது. (அதே நேரத்தில் 'இப்படித்தான்யா திருட வர்ரவங்களுக்கு கத்துக்கொடுக்கிறாங்க' என்ற முணுமுணுப்பும் எழுந்தது). ஐடியா நிச்சயம் மூலப்படத்தில் இடம்பெற்றதாகத்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் தந்துள்ள சண்டைக்காட்சியில் மின்னல் வேக அடிகள் கண்களுக்கு நல்விருந்து. படம் வந்தபோது (1969) பரபரப்பாக பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படமெல்லாம் நன்றாக திட்டமிட்டு போதிய இடைவெளி கொடுத்து ரிலீஸ் செய்யப்பட்டிருக்குமானால் பெரிய வெற்றிகளைப்பெற்றிருக்கும். ஆகஸ்ட்டில் நிறைகுடம், செப்டம்பரில் தெய்வமகன், அக்டோபரில் திருடன், நவம்பரில் சிவந்த மண்..... உருப்படுமா?.
சண்டைக்காட்சிப்பதிவுக்கு சரமாரி பாராட்டுக்கள். தொடருங்கள் அதிரடியை..
அன்புள்ள ராகவேந்தர் சார்,
இவ்வாண்டில் மீண்டும் சாதனை படைத்த டிஜிட்டல் கர்ணன் படத்தின் நினைவுகளை அசைபோட்ட விதம் அருமை. நானும் கர்ணன் படத்தை பாரகன் தியேட்டரில் 1973-வாக்கில் மறு வெளியீட்டின்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது பாரத்த பிரிண்ட்டில், வண்ணம் ரொம்பவே வெளுத்துப்போய் கேவா கலர் படம்போல இருந்தது. பாடல்கள் ஏற்கெனவே கேட்டு கேட்டு மனதில் பதிந்திருந்தபோதிலும், மோசமான பிரிண்ட்டில் பார்த்தபோது மனநிறைவில்லாமல் இருந்தது.
பின்னர் 1978-ல் விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரில் புத்தம்புது காப்பியாக திரையிடப்படுவதாக செய்தித்தாள் விளம்பரம் பார்த்து, நமது சாந்தி நண்பர்கள் ஒரு கூட்டமாகப்போய் பார்த்து வந்தோம். நிஜமாகவே அருமையான ஒரிஜினல் ஈஸ்ட்மன் கலரில் தெள்ளத்தெளிவாக இருந்தது. மனதுக்கு திருப்தியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. அதிலிருந்து எங்கே திரையிட்டாலும் கர்ணன் தரிசனம் நிச்சயம் உண்டு. பின்னர் ஒளிநாடா, குறுந்தகடு, நெடுந்தகடு என்று என்னென்ன விதமாக இப்படம் கிடைத்ததோ அந்த எல்லா வடிவங்களிலும், என்னிடம் நிரந்தரமாக வந்தடைந்தது.
எனினும் திரையரங்கில் காணும் பிரமிப்பு எதிலும் கிடைக்காது. எனவே நம்மைப்பொறுத்தவரை இவ்வாண்டு 'கர்ணன் ஆண்டு' என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் சொன்னதுபோல, படம் ரிளீஸான 1964-ல் இளைஞர்களாக இருந்து ரசித்தவர்களுக்கு இப்போது குறைந்த பட்சம் 70 வயதிருக்கும். அவர்களில் பலர் மறைந்திருப்பார்கள். இருக்கின்ற சிலரும் கணிணியைக் கையாள்பவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அவர்களின் அனுபவங்களை நாம் கேட்டுப் பதித்தால்தான் உண்டு. (சாரதா அவர்கள் அவருடைய தந்தையின் அனுபவங்களைக்கேட்டு முன்பு இங்கே பதித்தது போல).
திருவிளையாடலும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக கலக்கியிருக்க வேண்டிய படம்தான். ஆனால் ரிலீஸ் குளறுபடிகளால் சொதப்பிவிட்டனர்.
திரு. பம்மலார் அவர்களே,
தங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுடைய ரசனையை நன்கறிந்து, அதற்கேற்றார்போன்ற நிழற்படங்களைப் பதித்து மகிழ்ச்சியுறச் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
திரு. வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய நடிகர் திலகத்தின் அற்புதமான சண்டைக் காட்சிகள் வரிசையில், "திருடன்" பட சண்டைக் காட்சியைப் பதித்து நெஞ்சைக் கொள்ளை கொண்டு விட்டீர்கள்.
மிக்க நன்றி,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
திரு. கார்த்திக் அவர்களே,
அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் (ஒரு புறம் வயிற்றெரிச்சல் இருந்தாலும்). மாற்று முகாமைப் பார்த்தால், 1969-இல் நம் நாடு, அடிமைப் பெண் என்று இரண்டே படங்கள். இத்தனை படங்கள் வந்தாலும், பெரும்பாலான படங்களை வெற்றிப்படங்களாகத்தான் தந்தார். என்ன, நல்ல இடை வெளியில் வந்திருந்தால், நிறைய படங்கள் மேலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் mr_karthik,
தங்களுடைய அன்பு நிறைந்த பாராட்டுதல்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!
ரஹீமும், மேரியும் இணைந்திருக்கும் புகைப்படம் தங்களுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தங்களின் அன்பான பதில்பதிவில் இருந்து தெரிகிறது. தங்கள் சந்தோஷம் என் பாக்கியம்..!
"திருவிளையாடல்" டிஜிட்டல் வரும் அக்டோபரில் பிரம்மாண்ட வெளியீடாக வலம்வரும் என்று சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்..!
மலரும் நினைவுகளாக, 1970களில் மறுவெளியீடுகளில் "கர்ணன்" காவியத்தை தாங்கள் கண்டு ரசித்ததை பதிவு செய்திருந்தவிதம் அருமை..!
அன்புடன்,
பம்மலார்.