-
பாவ மன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் - 26.04.2015
எத்தனை எத்தனை சந்தோஷ செய்திகள்! திருச்சியில் வரலாறு காணாத வசூல் என்றால் மதுரையில் புதிய வரலாற்றை உருவாக்கிய வசூல்.
வானம் இடிப்பட்டது! பூமி பொடிப்பட்டது என்று எதுகை மோனையாக சொல்வது வழக்கம்! ஆனால் இன்று மதுரை டவுன் ஹால் ரோடிலும் சரி உள்ளே சென்ட்ரல் திரையரங்கத்துக்குள்ளிலும் நடைபெற்ற அலப்பரை அந்த வகையைத்தான் சார்ந்திருந்தது என்று சிலரும் இல்லை இல்லை அதற்கும் மேலே என்று பலரும் சொல்லியவண்ணம் இருக்க ரஹீம் பாய்க்கு அமோக வரவேற்பு.
நாளது தேதிவரை எந்த படத்திற்கும் வந்திராத கூட்டம். ஹவுஸ் புல் என்பதையெல்லாம் தாண்டி ஓவர் டிக்கெட் என்று சொல்வார்களே அது போல மக்கள் வெள்ளம். நாங்கள் நின்று கொண்டு பார்க்கிறோம் அல்லது அரங்கத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம். டிக்கெட்டை மட்டும் கொடுங்கள் என்று தியேட்டர் ஊழியர்களை சுமார் 150 பேர் சுற்றி நின்று கேட்ட காட்சியை சென்ட்ரல் திரையரங்கம் வெகு நாட்கள் கழித்து கண்டது.
சரம் சரமாய் சர வெடிகள். கணக்கிலாத 5000 மற்றும் 10000 வாலாக்கள். மற்றொரு தீபாவளி திருநாள் டவுன் ஹால் ரோட்டில் மட்டும் அரங்கேறிய காட்சியை கண்டவர் வியந்தனர். அந்த வழியாக நடக்கும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வெடிக்கும் பட்டாசும் நடிகர் திலகத்தை வாழ்த்திய கோஷங்களும் பானருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளையும் பார்த்தபோது அங்கே நின்ற பல பேருக்கு நாம் ஒருவேளை 1969 நவம்பரில் இருக்கிறோமோ இல்லை 1972 மேயில் நிற்கிறோமோ அல்லது 1974 ஜூனில் போய் மீண்டும் இறங்கி விட்டோமோ என்ற ஐயப்பாடு தோன்றிக் கொண்டே இருந்ததாம்.
இந்த களேபரத்திற்கு இடையில் இரண்டு மூன்று கார்கள் வர தியேட்டர் வாசலில் நடக்கும் கொண்டாட்டங்களை சொல்லி அவர்களை வேறு பக்கம் போக சொல்ல அய்யா! நாங்கள் வந்திருப்பதே இந்தப்படம் பார்க்கத்தான் என்று அவர்கள் சொல்ல அசந்து விட்டார்களாம்.
தியேட்டருக்கு வெளியேதான் இத்துணை ஆர்ப்பாட்டம் என்றால் அரங்கதில் நுழைந்து படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் முகத்தை மறைக்கும் டேப்பை கையால் தட்டிக்கொண்டே மெல்ல டேப்பை விலக்க பூரணச்சந்திரன் போன்ற அந்த முகத்தை கண்டதும் உள்ளே சரம் சரமாய் வெடித்திருக்கிறது 5000 வாலா பட்டாஸ்.
பல பல பழைய ரசிகர்கள் எல்லோரும் மீண்டும் இன்று ஒன்று கூடிய ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் உணர்ச்சிமயமாக மிகுந்த சந்தோஷத்துடன் இன்றைய மாலைப்பொழுதை இனிமையாக கழித்திருக்கிறார்கள்.
தியேட்டர் அதிபர் சுந்தரம் அவர்களுக்கு ரசிகர்கள் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து மகிழ அருமையான பிரின்ட்டோடு படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவீஸ் பங்குதாரர்களுக்கும் நன்றி சொல்லியிருக்கின்றனர்
உண்மையிலே இப்படிப்பட்ட அருமையான படத்தை நல்ல பிரிண்டுடன் திரையிட்ட விநியோகஸ்தருக்கு நமது நன்றியும் உரித்தாகட்டும். இதே படத்தை விரைவில் தமிழகமெங்கும் திரையிட அவர் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வோம்.
நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல முதல் மூன்று நாட்கள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது பாவ மன்னிப்பு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
RKS,
It is not that we don't have one more public holiday! We never had any public holidays during any of our films release. But we hardly need them!
Regards
-
முரளி சார்
பாவமன்னிப்பு வசூல் செய்தி சூப்பரோ சூப்பர்... இதை நடத்திக்காட்டிய மதுரை மக்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
அருமை முரளி - ஒருபக்கம் நிஜமான நிலநடுக்கம் - மறுபக்கம் பாவ மன்னிப்பு ஏற்படுத்தும் நிலநடுக்கம் . உண்மையில் நாடு இருக்கும் நிலைமையில் நாம் அழுதுகொண்டே சிரித்துகொண்டிருக்கின்றோம் . பாவ மன்னிப்பை இந்த உலகம் கேட்க்காததால் தானோ இப்படியெல்லாம் தாறு மாறாக நடந்து கொண்டிருக்கின்றது.
எது எப்படியோ , அல்லாவின் பெயரை சொல்லிக் கொண்டு கொண்டாடும் நேரம் நமது திரியில் இப்பொழுது - உங்கள் பாவ மன்னிப்பு தொகுப்பு பிரமாதம் - மிகவும் ரசிக்கும் படி இருந்தது
இந்த பாடலை நாம் எல்லோரும் பாடும் நேரம் இது
https://youtu.be/ruMVBLeUsEw
அன்புடன்
ரவி
-
-
-
-
-
-
-