http://i1170.photobucket.com/albums/...ps0yevmkvv.jpg
Printable View
STUNT ACTOR SHANKAR -KAVALKARAN
https://youtu.be/H3fyRJcQ6okhttps://youtu.be/KREIe5CyZSw
கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள்
''மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்''
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் பொருந்திய சத்தியமான வரிகள் .
அவரை தொடர்ந்து இன்று அந்த புகழுக்கு திரு அப்துல் கலாம் அவர்கள் பொருத்த மாகிவிட்டார் .
‘ராமன் தேடிய சீதை’-(1972)
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
இதே போன்ற விதவிதமான உடைகளை அதே ஆண்டில் வெளிவந்த ‘தர்மம் எங்கே’ படத்திலும் அணிந்து சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடியின் சிறப்பை வெளிப்படுத்துவது போல காஷ்மீரில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்தது. இயற்கை எழில் தவழும் காஷ்மீரை படத்தில் சிறப்பாக காட்டியிருந்தனர்.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.
‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’
‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’
‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’
ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
courtesy - malaisudar
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது.
நன்றி, விகடன்!
ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.
ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.
பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)
ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.
இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!
http://i160.photobucket.com/albums/t...psclbzy9zh.jpg
http://dinaethal.epapr.in/553333/Din...2015#page/16/1
GULEBAGAVALLI 60 YEARS FUNCTION NEWS
" இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"
இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....
ஒற்றுமை
இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!
முரண்பாடுகள் / வேற்றுமைகள்
1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .
2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .
3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .
4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க
5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....
6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .
7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று .
8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!