:lol:Quote:
Originally Posted by groucho070
Printable View
:lol:Quote:
Originally Posted by groucho070
saradha mam, thanks for the Chennai theatre's statistics. Amazing.
A nostalgia about Dharmam Engey. The failure of the film was inevitable. But the hype this film raised among the Sivaji fans is till date not broken by any other film. At the Odeon Theatre, when the reservation counter was opened for the first day a week before the release, booking for 36 shows (for 12 days @ 3 shows) were fully made and tickets sold out and for about 21 days evening shows were full. Before the film was released it reached one month evening shows (30 shows), i.e. in other words on the day of release, the reservation chart showed 36 shows full and 30 evening shows full. The queue for the reservation on the first day of advance booking went till the bisecting lane (pycrofts lane) from the Odeon theatre counter and again took a U shape and came again to the theatre entrance. You can imagine what a command NT had on the fans.Quote:
Originally Posted by rangan_08
Raghavendran
Raghavendra sir, as I've said many times, those were Golden days. You will never get that excitement and fun in today's internet age.
டியர் சாரதா,
அனைத்து தகவல்களுக்கும் நன்றி. சாந்தியில் மிக அதிகமான நாட்கள் ஓடினாலும் கூட முதலில் இந்த சாதனையை செய்தது எங்கள் மதுரை தான். "முதல் மரியாதை" எங்கள் ஊர் ரசிகர்களுக்கு தான். என்ன சரிதானே?
அன்புடன்
டியர் முரளி......Quote:
Originally Posted by Murali Srinivas
அது உண்மைதானே....
'ராமன் எத்தனை ராமனடி', 'என் மகன்', 'உத்தமன்' போன்ற படங்களை 100 நாட்கள் படங்களாக ஆக்கியதன் மூலமும், பல படங்களை வெள்ளிவிழாப்படங்களாக ஆக்கியதன் மூலமும் 'மதுரை நடிகர்திலகத்தின் கோட்டை' என்று நான் எப்போதுமே புகழாரம் சூட்டியதுண்டு. அதே சமயம் சென்னை சாதனைகளும் போற்றப்பட வேண்டியவைதானே.
டியர் ராகவேந்தர்...
நடிகர்திலகம் இணையதளத்தில், செய்தித்தாள் விளம்பரங்களின (Newspaper Cuttings) அணிவகுப்பு பிரமாதம். அதிலும் பல பிரிவுகளாக (50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளிவிழாக்கள், படம் வெளியிட்ட அன்றைய விளம்பரங்கள் என) அனைத்துமே அருமை.
பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் (உங்கள் அனுமதியின்றி) அவற்றை சேமித்தும் வருகிறோம்.
உங்கள் அபார உழைப்புக்கு (எவ்வளவு சிரமத்துடன் இவற்றை சேகரிக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது) நடிகர்திலகத்தின் பக்த கோடிகளின் கோடான கோடி நன்றிகள்.
புதிது புதிதாக என்ன வெல்லாம் இணைத்துள்ளீர்கள் என்பதை அடிக்கடி சென்று 'செக்' பண்ணுகிறோம். நமது நீண்ட நாள் கனவாயிற்றே...
வாழ்க உங்கள் தொண்டு...
சகோதரி சாரதா அவர்களுக்கு,Quote:
Originally Posted by saradhaa_sn
தங்களுடைய ம்னம் திறந்த பாராட்டுக்கள் என்னுடைய பொறுப்புணர்வினை மேலும் அதிகரிக்கின்றன. நன்றிகள் மிகப்பல. தங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் நம் இணைய தளத்திற்கு மிகப்பெரிய பலம். இது நம்மனைவருடைய இணைய தளம். இதில் தகவல்கள் தரப்படும் நோக்கமே இது ஒவ்வொரு ரசிகருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான். ஆகையால் இதில் என் அனுமதி என்ற கேள்விக்கே இடமில்லை. சொல்லப்போனால் தாங்கள் சேமித்து வைப்பதன் மூலம் என் பணியை நீங்கள் தொடருகின்றீர்கள் என்ற தைரியம் எனக்கு மேலும் ஆவலையும் உத்வேகத்தையும் தருகின்றது. அதற்காக நான் தான் உஙளுக்கு என் நன்றியினைக் கூற வேண்டும். மேலும் சிலகிடைத்தற்கரிய பழைய பாட்டுப்புத்தகங்களின் முன் அட்டைகளின் பிம்பங்களும் தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மிகப்பெரிய முயற்சியாக, நடிகர் திலகத்தின் அனைத்துப் படஙளின் பாடல்களையும் தொகுத்து இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிரது. இறைவன் அருளாலும் தங்களைப் போன்ற எண்ணற்ற ரசிகர்களின் நல் வாழ்துக்களாலும் அது ஈடேரும் என நம்புகிறேன்.
நன்றிகளுடன்,
ராகவேந்திரன்
சாரதா,
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கலைத்தாயின் தலைமகனுக்கு தலைநகரம் செய்த சிறப்புகளை மறக்க முடியுமா என்ன? நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவைதான். அது போல் நீங்கள் எப்போதும் மதுரை புகழ் பாட மறந்ததில்லை என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.
ராகவேந்தர் சார்,
மிக நன்றாக வந்திருக்கின்றன பாட்டு புத்தகங்களின் பதிவேற்றம். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்
1972 வருட சாதனைகள் தொடர்ச்சி
இந்த வருடம் வெளியான படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் சாதனை புரிந்தன.
இதில் ராஜா, பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை போன்றவை பெங்களூர்,மைசூர் மற்றும் கேரளத்திலும் பெரிய வெற்றி பெற்றது.
வசந்த மாளிகையின் முடிவு கேரளத்தில் சோகமாக அமைக்கப்பட்டது. அதாவது கேரள மக்களின் ரசனைகேற்ப, நாயகன் விஷம் குடித்து இறந்து விடுவது போல் அமைக்கப்பட்டது. அது அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, தமிழ் பட வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இரண்டு மாநிலங்களுக்கு இரண்டு முடிவுகள் அமைக்கப்பட்டு அவை இரண்டுமே இரு மாநில மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையை முதன் முதலாக செய்ததும் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை தான்.
வெளி நாடு
இலங்கையில் முதன் முதலாக திரையரங்கு வாசலில் ஒரு நடிகரின் சுழலும் கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்தின் ராஜா படத்திற்கு தான்.
இலங்கையில் வசந்த மாளிகை பெற்ற வெற்றியை அதற்கு முன் எந்த தமிழ் படமும் பெற்றதில்லை.
இலங்கையில் மூன்று அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் ஓடிய நாட்கள் மற்றும் அரங்குகள்
கொழும்பு - கேபிடல் - 287 நாட்கள்
கொழும்பு - பிளாசா - 176 நாட்கள்
யாழ்பாணம் - வெலிங்டன் - 250 நாட்கள்
யாழ்பாணம் - லிடோ - 100 நாட்கள்
யாழ் - வெலிங்டனில் கட்டுக்கடங்காத கூட்டம். அதற்காக லிடோ அரங்கிலும் திரையிடப்பட்டது.ஒரு அரங்கில் காலை காட்சி 10 மணிக்கு ஆரம்பமானால் மறு அரங்கில் 10.15 மணிக்கு தொடங்கும். இப்படி 15 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு ரீலாக டாக்சி மூலமாக ஒரு அரங்கிலிருந்து மற்றொரு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்படி யாழ் நகரில் 100 நாட்கள் வரை 4 காட்சிகளாக ஓடியது. அன்று வரை இலங்கை காணாத சாதனையாகும்.[ நன்றி யாழ் சுதாகர்].
இது இலங்கையில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என்றால் இந்த பாடத்தின் பாடல்கள் இலங்கை வானொலியின் தமிழ் சேவையில் ஒலிப்பரப்பட்ட போது படத்தின் பெயரே கூறப்படாமல் பாடல் ஒலிப்பரப்பட்டது. அந்த அளவுக்கு படம் மிக பெரிய வெற்றி.
மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.
பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்