கருடா சௌக்யமா ஆய்வுக் கட்டுரை அருமை. பாராட்டுக்கள் திரு. வாசுதேவன் அவர்களே.
Printable View
கருடா சௌக்யமா ஆய்வுக் கட்டுரை அருமை. பாராட்டுக்கள் திரு. வாசுதேவன் அவர்களே.
டியர் வாசுதேவன் சார்,
கருடா சௌக்கியமா பற்றிய தங்கள் பதிவு.... அட்டகாசம்....
அன்புடன்
ராகவேந்திரன்
வாசுதேவன் சார்,
கலக்குறீங்க..... 'கருடா சௌக்கியமா?' ஆய்வுக்கட்டுரை படுசூப்பர். ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல இப்படத்தின் வசனங்களை வியட்நாம் வீடு சுந்தரம் ரொம்ப அனுபவித்து எழுதியிருப்பார். ஒவ்வொரு வசனத்திலும் சரவெடி இருக்கும்.
முத்துகிருஷ்ணன் சொல்லும் வசனத்தைப்போலவே, பல படங்களில் பல வசனகர்த்தாக்கள் நடிகர்திலகத்தைப்புகழ்ந்து எழுதியிருப்பார்கள்.....
ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்: 'எவ்வளவு சூப்பரா நடக்கிறார் அவர்'
எஸ்.எஸ்.சந்திரன்: 'உனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே தெரியும் அவர் நடை சூப்பர்னு'.
படையப்பாவில் ரஜினியிடம் நடிகர்திலகம்: 'இனிமேல் எல்லாரும் உன் பின்னாடிதான்'
ரஜினி: 'இல்லீங்கய்யா, நாங்க எல்லோரும் எப்போதுமே உங்க பின்னாடிதான்'
'கருடா சௌக்கியமா' போன்ற படங்களை, குறைந்த பட்சம் ரசிகர்களை நான்கு மாதம் காயப்போட்டு வெளியிட்டிருக்க வேண்டும். வயிறு முட்ட தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் பிரியாணியை பறிமாறினார்கள். வேறென்ன செய்வது?. வழக்கமான புலம்பல்தான்.
உங்கள் ஆய்வுக்கட்டுரையைப் படித்து விட்டு மீண்டும் 'கருடா சௌக்கியமா' பார்த்தால் நிச்சயம் புதிய கோணங்களில் ரசிக்க முடியும்.
ஜமாய்ங்க........
mrkarthik - AnA maththa starsoda nadicha padam mAdhiri illAma(wherein those stars say punch dialogue praising NT), Once More-la, NT saying punch dialogue praising the hero irukkum. appA director vElaiya kAtti iruppAr.
டியர் சந்திர சேகரன் சார்,
உங்கள் அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்பு முரளி சார்,
தங்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். தங்கள் பாராட்டுதல்களும்,வாழ்த்துக்களும் நிஜமாகவே என்னைக் கண் கலங்கச் செய்து விட்டன. மறுபடியும் என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கே வரிகளில் நடிகர் திலகம் புகழ் பாடும் வசனங்களை மிக அழகாக தொகுத்து வழங்கி விட்டீர்கள். நாற்பது பக்கங்களுக்கான பொருள் அதில் தென்படுகிறது. அருமை சார்.. நடிகர் திலகம் பற்றிய புகழ் பாடும் வசனங்களை பின்னொரு நாளில் கண்டிப்பாக அலசி விடலாம். நன்றி சார்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் வாசுதேவன்,
என்னது..? உங்கள் ஆய்வுக்கட்டுரையில் குறை சொல்வதாவது?. ஒவ்வொரு காட்சிவாரியாக வசனங்களையும், அதில் உங்கள் பொருத்தமான கமெண்ட்களையும் அங்கங்கே செருகி எவ்வளவு அருமையாக கட்டுரையை வடித்து வருகிறீர்கள். பூதக்கண்ணாடியல்ல, மைக்ராஸ்கோப் வைத்துத்தேடினால்கூட உங்கள் ஆய்வில் குறை கண்டுபிடிக்க முடியாது. நிறைகள் மட்டுமே நிரம்பி வழிகின்றன.
ஒவ்வொரு வசனத்தையும் பொருத்தமான விளக்கங்களுடன் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எப்படியுள்ளது என்றால், இதற்கு முன் இப்படத்தைப் பார்த்திராதவர்கள் உடனடியாக பார்க்கும்படியாகவும், ஏற்கெனவே பார்த்திருந்தவர்களை மீண்டும் பார்க்கத்தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. நண்பர் கார்த்திக் சொன்னதுபோல அந்த சமயத்தில் புற்றீசல்கள் போல நடிகர்திலகத்தின் படங்கள் படையெடுத்ததால் நியாயமாகப் பெறவேண்டிய வெற்றியை இப்படம் பெறவில்லையென்பது வருத்தப்பட வைக்கும் ஒரு விஷயம்.
ஒவ்வொரு பதிவு முடியும்போதும் அடுத்த பதிவு எப்போது என்று ஏங்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக எழுதுகிறீர்கள். என்னைப்பார்த்து எழுதத்துவங்கியதாக சொன்னீர்கள். அதை ஒப்புக்கொள்வதாயினும், நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியை போல. என்னுடைய மாணவர் இன்று பி.எச்.டி. தேறி விட்டதைப்பார்க்க மிகவும் ஆனந்தமாக உள்ளது.
உங்கள் அனைவரது பங்களிப்பாலும் நமது திரி இன்னும் பல சிகரங்களை எட்டப்போவது உறுதி. உங்களது பாசம் நிறைந்த எழுத்துக்களூக்கு எனது பணிவான நன்றிகள்.
அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள்!
http://www.goodlightscraps.com/conte...n-kareem-6.gif
http://i1087.photobucket.com/albums/...an31355/nt.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
மரியாதைக்குரிய 'குரு' சாரதா மேடம் அவர்களே!
http://i1087.photobucket.com/albums/...thousand_3.jpg
நன்றிகள் பல கோடி. என்னை தங்கள் மாணவனாக ஏற்றுக் கொண்டதால் மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றன. 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு உண்மை என்பதை "நான் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை தான்" என்ற வரிகளின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். நிறைகுடங்கள் எப்போதும் தளும்புவதே இல்லை. ஒரு தாயின் கருணையையும்,அன்பையும் அரவணைப்பையும்,பாசத்தையும் பெற்றுவிட்ட பூரிப்பில்...
தங்கள் மாணவன் ,
நெய்வேலி வாசுதேவன்.
Well said mr vasudevan about saradamadam. Nadigar thilagam thiri has m ore knowlegable fans of NT even today after 10years of great actors demise technically for the world definitely not for us because he has become part of our life and soul.
season's greetings to all our friends.
ரஹீமை வைத்து ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னது மிகவும் பொருத்தம் - வியட்நாம் வீடு நாடக நிழற்படம் அருமை - நன்றி திரு.வாசுதேவன் அவர்களே.