-
சமீபத்தில் [16.9.2012] இயற்கை எய்திய நகைச்சுவை நடிகர் 'லூஸ் மோகன்' அவர்களின் மறைவுக்கு நமது இதய அஞ்சலி
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 11
நடிப்புலகச் சக்கரவர்த்தி பற்றி நகைச்சுவை நடிகர் அமரர் 'லூஸ்' மோகன்
வரலாற்று ஆவணம் : சினிமா மெயில் : அக்டோபர் 1984
http://i1110.photobucket.com/albums/...GEDC6705-1.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
அப்போதைய 'சினிமா மெயில்' சினிமா மாத இதழுக்காக திரு.'லூஸ்' மோகன் அவர்களை பேட்டி கண்டவர் திரு.எஸ்.விஜயன். இவர் அன்றைய 'சினிமா மெயில்' நிருபர்; இன்றைய 'இதயக்கனி' மற்றும் 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழ்களின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர். திரு.விஜயன் அவர்கள் எனதருமை நண்பரும்கூட..!
-
-
10-08-2001 தேதியிட்ட 'முத்தாரம்' வார இதழில் வெளிவந்த 'நடிகர் திலகம் சிவாஜி : புதிய தகவல்கள்!' என்ற தலைப்பில் வெளி வந்த நடிகர் திலகத்தைப் பற்றிய அற்புத தகவல் களஞ்சியம். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய அருமையான தகவல் பெட்டகம்
http://i1087.photobucket.com/albums/...art%20-2/4.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/2-2.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/m1.jpg
http://i1087.photobucket.com/albums/...art%20-2/3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
டியர் வினோத் சார்,
நேற்று காலை சூரியோதத்திற்குப் பின் தாங்கள் வழங்கிய கலையுலக ஆண்டவரின் 'அருணோதயம்' ஸ்டில்ஸ் அருமை. நன்றி!
-
டியர் செந்தில் சார்,
'திருடன் ஜூடோ' சண்டைக்காட்சி தங்கள் தந்தைக்குப் பிடித்தமான சண்டைக்காட்சி என்பதில் மனம் பெரிதும் மகிழ்வுறுகிறது. நம்மவர் 'ஜஸ்டினு'க்கு டின் கட்டும் உங்கள் எதிர்பார்ப்பான அந்த புகழ்பெற்ற சண்டைக்காட்சி விரைவில் உங்கள் கண்களைக் குளிர்விக்கும். இன்னும் என்னென்ன சண்டைக்காட்சிகளெல்லாம் தொடரில் வரப்போகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள்! 'திருடன்' சண்டைக்காட்சிப் பதிவிற்கான தங்களுடைய தேனான பாராட்டுக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.
-
டியர் கார்த்திக் சார்,
'திருடன்' சண்டைக்காட்சிக்கான தங்களுடைய பாராட்டு என் மனதைத் திருடிவிட்டது. உள்ளம் குளிர்ந்த மனமார்ந்த நன்றிகளை தங்களுக்கு சொல்ல கடமைப்பட்டவனாகிறேன். நன்றி! தாங்கள் கூறியது போல இடைவெளி இல்லாமல் தலைவரது காவியங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருந்ததால் எல்லா காவியங்களும், எல்லா சிறப்பம்சங்களும் நிறைந்திருந்தும் வேண்டிய அளவு வெற்றிகளைப் பெறாமல் போக நேர்ந்தது. இன்றளவும் இந்தக் கதை தொடர்கிறது. இன்று பாலிமர் செய்திகளில் கூட போதிய விளம்பரம் டிஜிட்டல் திருவிளையாடலுக்கு செய்யவில்லை என்று ஒரு செய்தியாகவே காண்பித்தார்கள். மனம் வலித்தது.
-
டியர் பார்த்தசாரதி சார்,
'திருடன்' சண்டைக்காட்சிப் பதிவிற்கான தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் அன்பான நன்றிகள் சார்.
தங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் திலகத்தின் பாடல்களை மிகச் சிறப்பாக ஆய்வு செய்து எங்களுக்களித்து மனம் மகிழச் செய்து வந்தீர்களே! தங்கள் பாடல் ஆய்வுப் பதிவுகள் தொடரவேண்டும், நாங்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும். நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற குலையாத நம்பிக்கையுடன்
வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார் ,
அனைத்து உச்ச கலைஞர்களில் இருந்து நலிந்த கலைஞர்கள் வரை அவர்களுக்கிருந்த நடிகர்திலகத்தினுடனான பாசப்பிணைப்புகளை தங்களைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு சிறப்பாகத் தர இயலாது என்று அடித்துச் சொல்வேன். 'லூஸ் மோகன்' பற்றி தாங்கள் அளித்துள்ள பதிவைத்தான் சொல்கிறேன். 'லூஸ்' மோகன்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவருடைய மறைவிற்கு அவருடைய நடிகர்திலகத்தைப் பற்றிய 'சினிமா மெயில்' பேட்டி மூலமாகவே சிறப்பாக அஞ்சலி செய்து விட்டீர்கள். 'லூஸ்' மோகன் என் இனிய நண்பர். கடலூரில் இருந்தபோது நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களின் போது 'லூஸ்' மோகனை அழைத்துவந்து நாங்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தியதுண்டு. அவருடன் காரில் பயணிக்கும் போது அடிக்கடி தேநீர் அருந்த வண்டியை நிறுத்தச் சொல்வார். ஒரே ஜோக் மழையாகப் பொழிந்து தள்ளுவார். டீ மாஸ்டரிடம் "ஸ்ட்ராங்கா சில்லுன்னு ஒரு டீ போடு" என்று கலாய்ப்பார். கள்ளம் கபடமில்லாமல் குழந்தை போல அன்புடன் பழகுவார். நடிகர் திலகம் பற்றி எங்களுடன் உரையாடும் போது 'அய்யா' என்றுதான் உச்சரிப்பார். தங்கள் பதிவைப் படித்ததும் என் கண்களில் நீர்ப்பெருக்கெடுத்து விட்டது.