-
எந்த ஒரு ரகசியமும் ஒரு நாள் வெளி வந்தே தீரும் , அப்படி தான் அந்த ரகசியமும் வெளியே வர , குடும்பத்தில் புகம்பும் (அந்த காரணம் மிகவும் சின்ன காரணம் )
பல குடும்பத்தில் மனைவி கத்த ஆரம்பித்த உடன் கணவர் silent ஆகி விடுவார் , அதற்க்கு காரணம் 100/90 % henpecked nature கிடையாது , இருவரும் கத்தினால் வீடு ரெண்டாவது உறுதி , அதை தடுக்க தான்
தன் கணவர் படிக்கிற வயதில் செய்த ஒரு சின்ன தப்பை பெருதாக ஊதி விட்டு KRV சண்டை போடும் பொது , நடிகர் திலகம் சாரி சந்தோஷ் கெஞ்சும் காட்சி , அவர் பேசும் வசனம் , இயல்பு , மிகவும் எதார்த்தம் .
எதை பற்றியும் கவலை படாத தன் மாமனார் மேஜர் தன் மருமகன் கூட பேசும் காட்சியில் , தன் மீதே அணைத்து தப்பும் என்று சொல்லும் இடமும் , தன் மனைவியை விட்டு குடுக்காமல் பேசும் போதும் , என் கண்ணில் , இதை எழுதும் பொது தெரிகிறது
தன் மனைவி கேட்ட விவகாரத்தை , அவர் தந்து விட்டு , பிள்ளையும் தானே வளர்த்து விடும் வாய்ப்பு இருந்தும் , முதலில் அதை தன் மனைவி கிட்ட கொடுப்பதும் , அவர் மறுத்த பின் , அந்த பொறுப்பை அவரே எடுத்து கொண்டு சிறப்பாக முடிப்பதும் , இடையில் ரீனா ரூபத்தில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருந்தும் அதை அவர் லாவகமாக handle செய்வதும் , simply hats off , அதுவும் அவர் மலையாளம் சம்சாரிக்கும் காட்சி பார்த்த பொது சகலகலா வல்லவனே என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது
-
பிரிந்த ஜோடிகள் மீண்டும் சந்திக்கும் பொது இருவரும் காட்டும்
முக பாவனைகள் இருகிறதே - ஜாம்பவான்கள் (இருவரும் தான் ) கலக்கி இருப்பார்கள்
டைரக்டர் SPM இருவரிடமும் நீங்கள் பேச கூடாது , reactions மட்டும் தான் என்று சொன்னால் எத்தனை நடிகர்கள் இப்படி சிறப்பாக நடிப்பார்கள்
நம்மவர்க்கு இது சர்வ சாதாரணம்
அந்த காட்சி
இவரின் (NT ) கண் close up தெரியும் பொது , KRV வின் கண் காட்ட படும் , NT வின் வாய் துடிக்கும் பொது , KRV வின் காது காட்ட படும் ,
wonderful சீன்
இந்த படத்தில் NT மகனாக வருபவர் சக்ரவர்த்தி நன்றாக நடித்து இருந்தாலும் கொஞ்சம் ஓவர் action என்றே தோன்றியது , இன்று பின்னணி குரல் கொடுப்பதில் கோடி கட்டி பறக்கிறார்
KRV வின் நடிப்பு மட்டும் என்ன , கர்வம் பிடித்த பெண் என்று சொல்லி விட அதிகமாக சான்ஸ் இருந்தும் , ஒரு சின்ன நூல் அளவு வித்தியாசம் காட்டி அதை வித்தியாச படுத்தி காட்டி இருப்பார் , குறிப்பாக அவர் மகன் தான் டென்னிஸ் பிளேயர் அமர்நாத் என்று தெரிந்து அவர் தவிக்கும் காட்சி , தன் மகனை சந்திக்க அவர் வீட்டுக்கு வரும் பொது , சிவாஜி சார் அவரை மிகவும் கூலாக deal செய்யும் காட்சியும் , கொஞ்சம் கூட கோபம் இல்லாமல் , தன் மகன் வளர்ப்பு சரி தான் என்பதை எடுத்து காட்ட செல்லமாக டீஸ் செய்யும் காட்சி , KRV வின் நிலைமை யை நினைத்து கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது
அதே புருஷனின் தயவு தேவை படுகிறது கோகிலாவுக்கு , தன் மகன் தன்னை அங்கீகரிக்க , வாழ்கை என்ற வட்டம் , மேலே கிழே செல்லும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துகாட்டு.
அதுவும் , நடிகர் திலகம் அந்த காட்சியில் , தன் மனைவியை தன் மகன் அலட்சிய செய்து விட்டு வரும் பொது கண்டிக்கும் காட்சி , தன் மனைவியை போலே தன் மகனும் சினத்தினால் வாழ்கையை தொலைத்து விட கூடாது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது
இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்
தன் மாணவிக்கு advice செய்யும் காட்சியில் நடித்த நடிகையின் பெயர் என்ன என்பதை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் , அவரை பல MGR படங்களில் பார்த்து இருக்கேன் , குறிப்பாக , ரிக்க்ஷகாரன்(காலேஜ் principal ) , உழைக்கும் கரங்கள் போன்ற பங்களில் பார்த்து இருக்கேன்
கடைசியாக ஐம்பதிலும் ஆசை வரும் என்ற காலத்தினால் அழியாத பாடல்
அந்த பாடல் படபிடிப்பு நடந்த இடம் ஒரு பெரிய மலை உச்சி , இருவரையும் நடத்தியே அழைத்து சென்று படம் பிடிக்க பட்டது , சிவாஜி சார் செல்லம்மாக சலித்து கொண்டாராம்
அடுத்த நாள் SPM மற்றும் பாபு (ஒளிபதிவாளர் ) இருவரும் அடிவாரத்தில் ஒரு காட்சி , பிறகு 10 அடி உயரத்தில் ஒரு காட்சி , 20 அடி உயரத்தில் ஒரு காட்சி என்று எடுத்து , மலை உச்சிக்கு அழைத்து சென்று விட்டார்கள்
இதை அறிந்து கொண்ட நடிகர் திலகம் இருவரையும் பார்த்து திருட்டு பசங்களா , என்னை இப்படியே போக்கு காட்டி உச்சிக்கு அழைத்து வந்து ஷூட் பண்ணிடிங்க என்று செல்லமாக கோபித்து கொண்டு பின்பு location யை பார்த்து பாராட்டினார் என்று SPM , AVM தந்த SPM என்ற புஸ்தகத்தில் எழுதி உள்ளார்
இந்த இடம் கேரளாவில் இருக்கும் KRV க்கு சொந்தமாக பாக்டரி பக்கத்தில் எடுக்க பட்டது , KRV அணைத்து உதவியும் செய்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்
இந்த படம் பார்த்து விட்டு காபி குடித்த பின் ஐஸ் வாட்டர் குடிக்க பழகி உள்ளேன் நன்றாக உள்ளது
-
தென்னை மரம் ஏறி , வானத்தின் எல்லையில் தன் மகளுக்காக வீடு கட்டி , இன்னிசை பாடிகொண்டுஇருந்தான் அவன் - மகள் தான் அவனுடைய காவல் தெய்வம் - அவள் தான் அவனது வாழ்க்கை - அவள் சந்தோஷம் தான் அவன் தினமும் உண்ணும் உணவு - கவலைகளை மரம் ஏறும் போது அங்கேயே விட்டு விட்டு தினமும் மகிழ்ச்சியை மட்டும் வீட்டுக்கு கொண்டு வருவான் - உலகம் அவனுடைய மகள் மூலம் அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டது அவனும் தென்னை மரமும் , அவளும் தான் தான் உலகம் என்று வாழ்ந்தான்
விதி அவன் வாழ்வில் சற்றே விளையாட ஆசைப்பட்டது - அதனுடைய விலையை பாவம் அவனால் கொடுக்க முடியவில்லை - உபசரிக்கப்பட்ட நண்பர்கள் அவன் இல்லாதபோது அவனுடைய மகள் மூலம்அவனுக்கு இருந்த கனவுகளை எல்லாம் அழித்தார்கள் - மகளின் கதறலை கேட்ட அவன் - அவளது வாழ்வை சூறையாடிய இருவரில் ஒருவனை பிடித்து தேங்காயை சீவுதுபோல தலையை சீவினான் - சிறைக்கு ஒரு அடிபட்ட சிங்கமாக சென்றான் - விதி அவனக்கு சற்றே கருணை காட்டியது - அவன் மகளை மானபங்கம் செய்தவனை சிறையில் பார்க்கிறான் - இரத்தம் கொதித்தது - அவனை கொன்றால் தான் மகளுக்கு சாந்தி கிடைக்கும் என்று அந்த வாய்ப்புக்காக காத்திருகின்றான் -
சிறைக்கு அருகில் ஒரு தெரு கூத்து - ஹிரன்ய கசிபுவின் கதை - நரசிம்மமாக சிறையின் கம்பிகளை உடைத்துக்கொண்டு அந்த கயவன் இருக்கும் அறையில் நுழைகிறான் - அந்த கயவனின் கதை முடிகின்றது - மிகவும் மன நிம்மதியுடன் தூக்கு மேடையை சந்திகின்றான் - அது அவனை அவனுடைய மகளிடமும் , மனைவியிடமும் அவனை கொண்டு சேர்க்கிறது - நல்ல நடிப்பு இதனுடன் முடிவடைவதால் - மிஞ்சியுள்ள படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை
தொடரும்
-
நடிப்பு என்றால் இதுதான் - ஒரு கனவு சிதைத்து போது வரும் கோபம் , அருமை மகளை இழந்த சோகம் - மனித வடிவில் திரியும் மிருகங்களை கொல்ல துடிக்கும் வேகம் - அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை-------
http://youtu.be/mEy_1K15MRE
-
நம்பியார் நல்லா பேசினாலுமே வில்லனாக தான் காட்சி தருவார் - தூக்கில் போடபோகும் செய்தியை அவர் சிவாஜி க்கு சொல்லும் காட்சி - கல்லும் கரையும் ----------
http://youtu.be/v_PpMbGf-vs
-
Dear Ravi Sir,
Superb write ups of Praptham , Kaaval deivam( both movies, I did not watch , will watch soon ,kudos to your writings), Paper cuttings of Moondru Deivangal rare one, I appreciate your sincere work
-
சிங்கத்திற்கு சிங்கத்தின் தீனியை போட்ட படம் --------
http://youtu.be/Iz4sfMxKA5k
அலசல் முடிவுபெற்றது
அன்புடன் ரவி
:):smokesmile:
-
-
Dear RKS,
Can you kindly translate your context in English, though I'm Tamil speaking Indian very difficult to read our language as i learnt kannada here in Bangalore.
JAIHIND
M. Gnanaguruswamy
-
இன்று ஒரு உன்னதமான நாள் - இனிய நாள் - மஹாசிவராத்திரி - எல்லோரும் இந்த அருமையான நாளில் இறைவனை வழிபாட்டு எல்லா இன்பங்களும் பெற வேண்டும் என்று இறைவனை வணங்கிவிட்டு - nt படங்களில் இடம் பெற்ற சிவனை புகழும் சில படங்களையும் , பாடல்களையும் இங்கு உங்களுக்கு சமர்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - அவர் படங்களை விட்டால் உவமை காட்ட வேறு யார் உள்ளார்கள் ? எந்த படம் அப்படிப்பட்ட சிறப்பை அடைந்துள்ளது ?
அன்புடன் ரவி