-
புரட்சித் தலைவரின்
திருக்கரங்களால்
தொடங்கப்பட்ட
கட்சியான
அஇஅதிமுக கட்சியின்
அதிகாரபூர்வ
வெற்றி கொடி
உருவான பதிவு
#அஇஅதிமுக கொடியை வடிவமைத்த நடிகர் திரு.பாண்டு அவர்களின் நேர்காணல்...
"ஆரம்பத்துல இருந்தே சொல்றேனே. என் அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ்,
#MGR-ருக்கு நண்பர். அவரோட சுமார் 40 படம் வொர்க் பண்ணியிருக்கார். அவர் மூலமாகத்தான் எம்.ஜி.ஆர் எனக்கு பழக்கம்.
அப்ப ஓவியக் கல்லூரியில படிச்சுட்டிருந்தேன். எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்கள், அப்பப்ப யார் பெரிய நடிகர்ங்கறதுல மோதிக்குவாங்க.
நான், எம்.ஜி.ஆரை இம்ப்ரஸ் பண்ணணும்னு, நூறு சிவாஜி புகைப்படங்களை ஒன்னு சேர்த்து, #நூறு_சிவாஜி, #ஒரு_எம்ஜிஆர்’
அப்படிங்கற தலைப்புல ஒரு எம்.ஜி.ஆர் முகத்தை வரைஞ்சேன்.
பெரிய அளவுல வரைஞ்ச அந்தப் படம், ஒரு வார இதழ்ல வந்தது. அதைப் பார்த்துட்டு எம்.ஜி.ஆர் என்னைப் பாராட்டுவார், தங்க சங்கிலி பரிசா தருவார்னு நினைச்சேன்.
ஆனா, எம்.ஜி.ஆர், என் அண்ணன் மூலமா என்னைக் கூப்பிட்டார். போய் நின்னேன். ஏதோ பாராட்டப்போறார், தங்க சங்கிலி தரப்போறார்னு மனசுக்குள்ள குறு குறுன்னு இருந்தது.
திடீர்னு பார்த்து திட்ட ஆரம்பிச்சார். "#சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர். அவரை இப்படியா பண்ணுவே"ன்னு கேட்டார்.
எனக்கு பயமாயிடுச்சு. பிறகு, ‘ஒரு மனுஷனை இகழ்ந்து எப்பவும் புகழ்பெறக் கூடாது, சிவாஜி நடிப்புக்கு எதுவும் ஈடாகுமான்னு அவர் சொன்னது, என்னை என்னமோ பண்ணுச்சு. சிவாஜி ரசிகர்கள்கிட்ட இருந்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்.
பிறகு எம்.ஜி.ஆருக்கு என் மேல இருக்கிற கோபத்தைக் குறைக்கணும்னு நினைச்சேன். அதுக்காக, எம்.ஜி.ஆர் கூட முதல்படத்துல இருந்து அவர் ஜோடியா நடிச்ச ஜெயலலிதா வரை எல்லா ஹீரோயின்களோட புகைப்படங்களையும் வச்சு எம்.ஜி.ஆர் முகத்தை பெரிய சைஸ்ல வரைஞ்சு, பிரேம் போட்டு எம்.ஜி.ஆரைத் தேடிப் போனேன்.
அப்ப விஜயா கார்டன்ல ’#எங்கள்_தங்கம்’ பட ஷூட்டிங். நான் செத்துப் பிழைச்சவண்டா பாடல் ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. இடைவேளையில ஓவியத்தைக் கொடுத்தேன். பார்த்துட்டு பாராட்டிய எம்.ஜி.ஆர், ரெண்டு பவுன்ல செயின் போட்டார். இது 1967-ல நடந்தது. இதுக்குப் பிறகு என் மேல அவருக்குப் பாசம் வந்தது.
1969-ல அவருக்கு #பாரத் பட்டம் கொடுத்தாங்க. அந்த நேரத்துல, எம்.ஜி.ஆர் முகத்தை லைன் டிராயிங்ல வரைஞ்சு அவர்ட்ட கொடுத்தேன். "சரி, இதுல என்ன புதுமை இருக்கு?"ன்னு கேட்டார் எம்.ஜி.ஆர்.
சாதாரணமா பார்த்தா ஒண்ணுமே இல்லை, பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தா, ஒவ்வொரு கோடுலயும் பாரத் பாரத்னு தெரியும்னு சொன்னேன். ஒரு பூதக்கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். அவருக்கு சந்தோஷம். அப்ப சத்யா ஸ்டூடியோவுல நடந்த ஒரு விழாவுல இந்த படத்தை வச்சு, மேடையில என்னை பாராட்டினார் எம்.ஜி.ஆர். இதுக்குப் பிறகு அவரோட நான் நெருக்கமானேன்.
1972-ல அதிமுகவை ஆரம்பிச்சார் எம்.ஜி.ஆர். அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ், ’எம்ஜிஆர் கூப்பிடறார், உடனே வா’ன்னு கூப்பிட்டார். போனேன். எம்.ஜி.ஆர், ’கட்சி கொடி பண்ணணும்’னு சொன்னார்.
பிரஸ் எல்லாம் எடுத்துட்டு போயிருந்தேன். பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டு, வரைஞ்சேன். கருப்பு சிவப்புக்கு நடுவுல அண்ணா படம். நான் தான் வரைஞ்சேன். அவருக்குப் பிடிச்சிருந்தது.
அதே போல இரட்டை இலைச் சின்னத்தையும் என்னை டிசைன் பண்ணச் சொன்னார். அப்ப ஒருநாள் கசாப்பு கடைக்குப் போயிருந்தேன். ஆட்டுக்கறியோட நுரையீரலை கடையில தொங்கவிட்டிருந்தாங்க. ரெண்டு இலை மாதிரி அது தொங்கிட்டு இருந்தது. அதைப் பார்த்துட்டு வந்ததும் இரட்டை இலையை வரைஞ்சேன்.
இலைக்குள்ள நுரையீரல்ல இருக்கிற மெல்லிய கோடுகள் மாதிரி வரைஞ்சிருந்தேன். பார்த்துட்டு கட்டிப் பிடிச்சுட்டார் எம்.ஜி.ஆர். நல்லா பண்ணியிருக்கீங்கன்னு சொன்னார்" என்றார் பாண்டு..... Thanks , courtesy friends...
http://www.puthiyathalaimurai.com/ne...ml?frm=old_web
-
24/6/18 அன்று கவிஞர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம் எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த நாள் .
http://i64.tinypic.com/2iiuddt.jpg
-
-
-
காந்தி கண்ணதாசன் திருமண வைபவத்தில் மக்கள் தலைவர் எம்.ஜிஆர்.
http://i68.tinypic.com/mkkikx.jpg
-
-
http://i64.tinypic.com/2q03egz.jpg
புகைப்படங்கள் உதவி : நண்பர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு
-
-
-