//4. தர்மம் எங்கே - 15.07.1972
இந்த வருடத்தில் வெளியாகி 100 நாட்கள் என்ற வெற்றி கோட்டை தொட முடியாமல் போன ஒரே படம்.
மதுரை -ஸ்ரீதேவியில் முதல் 16 நாட்களில் நடைபெற்ற 55 காட்சிகளில் 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 50//
டியர் முரளி & ராகவேந்தர்.......Quote:
Originally Posted by RAGHAVENDRA
'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. எனக்கு பிடித்த படங்களில் அதுவும் ஒன்று.
இப்படத்தின் சிறப்புக்களைப்பற்றியும், இதன் வெளியீட்டின்போது நடந்த சுவையான நிகழ்வுகளைப்பற்றியும் ஏற்கெனவே முந்தைய பக்கங்களில் நானும் முரளி அண்ணாவும் நிறைய எழுதியிருக்கிறோம். பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' பற்றி மதுரை நிகழ்வுகளை முரளியும், சென்னை ஓடியன் அரங்கின் 'ஒப்பனிங்' பற்றி (என் தந்தையின் வாயிலாக அறிந்தவற்றை) நானும் சொல்லியிருந்தோம். இப்போது ராகவேந்தர் அவர்களின் பதிவு அவற்றுக்கு மேலும் கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.
ஆம், 'ஓப்பனிங் திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.
1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.
'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......
'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...
நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.