அரிய நிழற்படம்
'வியட்நாம் வீடு' நாடகத்தில் 'பிரெஸ்டீஜ்' பத்மநாபன்.
http://i1087.photobucket.com/albums/...pg_285287a.jpg
நடிகர்திலகத்துடன் 'சாவித்திரியாக' நடிகை S.R.சிவகாமி.
நன்றி 'ஹிந்து' நாளிதழ்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Printable View
அரிய நிழற்படம்
'வியட்நாம் வீடு' நாடகத்தில் 'பிரெஸ்டீஜ்' பத்மநாபன்.
http://i1087.photobucket.com/albums/...pg_285287a.jpg
நடிகர்திலகத்துடன் 'சாவித்திரியாக' நடிகை S.R.சிவகாமி.
நன்றி 'ஹிந்து' நாளிதழ்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
DEAR KUMARESAN SIR,
Many more happy returns of the day,May God and NT bless you.
Dear vasudevan sir,
superb write up on garuda sowkyama.Eagerly waiting for your analysis of other NT"s underrated films.
Dear Mr. Kumaresan,
Wish you many many happy returns of the day.
Regards,
R. Parthasarathy
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
நமது திரியின் அற்புதப் பயணத்தை அழகு தமிழில் வர்ணித்து, அதில் பதிவு செய்து கொண்டிருக்கும் என்னையும் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி. தங்களைப் போன்றவர்களின் வருகையால், இந்தத் திரிக்கு மேலும் சுவாரஸ்யமும் பெருமையும் சேர்ந்திருக்கிறது.
தங்களது "கருடா சௌக்கியமா" படத்தின் ஆய்வுக் கட்டுரையின் இரண்டாவது பாகம் அருமை. நடிகர் திலகத்தின் நடிப்பை பிரமாதமாக அலசியிருக்கிறீர்கள். தங்களிடமிருந்து மேலும் பல ஆய்வுக்கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
பொம்மை இதழில் வெளி வந்த யாழ் சுதாகரின் கட்டுரையை அந்தக் கட்டுரை வெளி வந்த அன்றே படித்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அதைப் படித்து மெய் சிலிர்த்தேன். உண்மையில், அந்தக் கட்டுரையின் சில இடங்களைப் படிக்கும் போது, தொண்டை வழித்து, கண்களில் கண்ணீர் பெருகி விழித் திரையை மறைத்திட, மேலும், படிக்க முடியாமல் திணறினேன். எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ இந்தக் கட்டுரைகளை. Hats off to யு, Sir.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
குமுதம் விமர்சனங்களைப் பற்றி நான் எழுதுவேன் என்று திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வது பெரிய சர்ச்சையைக் கிளப்பி விடும் என்பதால், சில விஷயங்களைப் பற்றி மட்டும் கூற விழைகிறேன்.
குமுதம் பத்திரிகையின் விமர்சனங்கள் எப்போதும் நடு நிலையாகத்தான் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம், அந்தப் பத்திரிகையின் ஆசிரியரும், இணை மற்றும் துணை ஆசிரியர்கள் எப்போதும், சொந்த செலவில் மக்களோடு மக்களாக அமர்ந்து முதல் மூன்று நாட்களுக்குள் படத்தைப் பார்ப்பது தான். பத்திரிகையாளர்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்படும் முன்னோட்டங்களுக்கு அவர்கள் ஒரு போதும் செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு எந்த வித நிர்ப்பந்தமும் ஏற்படுவதில்லை. நானே, அந்தப் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்த போது, இணை மற்றும் துணை ஆசிரியர்களுக்கு புதுப்படங்களின் டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். குமுதம் எப்போதும், நடிகர் திலகத்தின் படங்களை மிகச்சரியாக விமர்சனம் செய்யத் தவறியதே இல்லை. அவருடைய "ஸ்ரீ வள்ளி" படத்தை, வெறும் "முருகா. முருகா... முருகா..." என்று மட்டுமே எழுதியது.
ஒரு தலைப் பட்சமான விமர்சனங்கள் விகடனுக்கு மட்டுமல்ல; மற்ற இதழ்களுக்கும் கூடப் பொருந்தும். 1982-இல் வெளிவந்த ரஜினியின் மூன்று முகத்துக்கு அன்று குங்குமம் எழுதிய விமர்சனத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. அந்தப் படத்தில், அலெக்ஸ் பாண்டியன் என்ற காவல் துறை அதிகாரியாக ரஜினி மிக நன்றாக நடித்திருந்தார் எனினும், குங்குமம் அந்தப் படத்துக்கு எழுதிய விமர்சனத்தில், கடைசியில், "சிவாஜி அன்று நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் அசத்தினார்; இன்று ரஜினி மூன்று வேடங்களில் மூன்று முகத்தில் அசத்தியிருக்கிறார். இந்த மூன்றும் அந்த ஒன்பதுக்குச் சமம்!". அடுக்குமா இந்த ஒப்பீடு? யாரை யாருடன், எந்த நடிப்பை எந்த நடிப்புடன்?? எந்தப் படத்தை எந்தப் படத்துடன்???
யாரையோ சந்தோஷப்படுத்துவதற்காக, நடுநிலையைத் தவற விடுபவர்கள் என்றுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புச் சகோதரி சாரதா அவர்களின் பதிவு அவருடைய பெருந்தன்மையினைப் பறை சாற்றுகிறதென்றால் வாசுதேவனின் அடக்கம் அதற்குக் கட்டியம் கூறுகிறது. அனைவருமே தத்தம் அடக்கத்தையும் எளிமையினையும் பேணி நடிகர் திலகத்திற்குப் பெருமை சேர்க்கிறார்கள் என்றால் அதை விட அந்த உத்தமனுக்கு சிறந்த தொண்டு இருக்க முடியுமோ.
அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.
டியர் குமரேசன்
உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
நடிகர் திலகத்தின் இரு உன்னதத் திரைக்காவியங்கள் விரைவில் நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட உள்ளன. இது பற்றிய ஓர் அறிவிப்பு மற்றோர் நெடுந்தகட்டினில் வெளிவந்துள்ளது. அதன் வடிவினை இங்கே நாம் காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...UPVdvdAdfw.jpg
அன்புடன்
A Very Very Happy Birthday Mr.kumareshanprabhu !
Many Many More Happy Returns !
Warm Wishes & Regards,
Pammalar.
எல்லோருக்கும் புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...ar/PM100-1.jpg
எல்லோரும் கொண்டாடுவோம் !
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் !
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
கலைக்குரிசிலின் "கருடா சௌக்கியமா" திறனாய்வுக் கட்டுரையின் இரண்டாம் பாகம் மற்றும் அதன் தொடர்ச்சி பட்டையைக் கிளப்புகிறது. கூடவே நிழற்படங்களையும் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள் !
தங்களது எழுத்தில் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரித்தான நடையும் அதே சமயம் NT Devotee என்கின்ற உணர்ச்சிப்பிரவாகமும் இணைந்து காணப்படுகிறது. இது மிக அரிதான ஒரு இணைவு. இரண்டும் கலந்த அபூர்வக் கலவை தங்களின் எழுத்தோவியம் !
தங்கள் பதிவுகளின் மூலம் இக்காவியத்தை Frame-by-frame பார்த்து ரசிக்கிறோம் ! Free-of-cost !! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !!!
[திருக்குரான் வாசகங்கள் மற்றும் "இமைகள்" அக்பர்பாஷா அவர்களின் நிழற்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்த விதம் உண்மையிலேயே அற்புதம் ! "வியட்நாம் வீடு" நாடக நிழற்படம் மிகமிக அரிய ஒன்று !]
அன்புடன்,
பம்மலார்.