-
டியர் கார்த்திக் சார்,
சில தினங்களுக்கு முன் தாங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த 'நாணல்' படத்தின் 'விண்ணுக்கு மேலாடை' பாடலின் இடையில் முத்துராமனும், கே.ஆர் விஜயாவும் காரில் செல்லும்போது மவுண்ட்ரோட்டில் 'திருவிளையாடல்' பேனர் சாந்தியில் வைக்கப்பட்டிருப்பதை focus செய்திருப்பார்கள். அந்த நிழற்படம் இதோ. (சற்று மங்கலாக உள்ளது) தங்களுக்காக அந்த பாடல் வீடியோவும் இதோ..
http://i1087.photobucket.com/albums/...0-2/Naanal.jpg
http://www.youtube.com/watch?v=pSXg7...yer_detailpage
-
-
அன்பு வினோத் சார்,
மனிதர்குல 'மாணிக்கத்தை' பல சாவால்களைச் சமாளித்து இங்கே பதிப்பித்து இன்புறச் செய்த தங்கள் இனிய உள்ளத்திற்கு நன்றிகள்.
-
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி. 70-களில் கர்ணன் பார்த்த விவரத்தை ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷனாகத்தான் சொன்னேன். அதையும் கூட பாராட்டும் பெருந்தகையாளர் தாங்கள்தான்.
எல்லா விஷயங்களிலும் நடிகர்திலகத்தை முன்னிலைப்படுத்துவது தங்கள் வாடிக்கையென்பது அனைவரும் அறிந்தத் விஷயம். அதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம், மறைந்த நகைச்சுவைக் கலைஞர் லூஸ் மோகனுக்கான அஞ்சலிப் பதிவில், அவர் நடிகர்திலகத்தைப்பற்றிக் கூறியிருந்த அருமையான பேட்டியைப் பதிப்பித்து விட்டீர்கள். 'என் திருமணமே நடிகர்திலகத்தின் செலவில்தான் நடைபெற்றது' என்று லூஸ் மோகன் கூறியிருப்பது இதுவரை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?. நம்மவருக்கு செய்யத்தான் தெரியுமே தவிர அதை விளம்பரபடுத்தத் தெரியாதே.
திரைப்படக்கலைஞர்கள் மட்டுமல்லாது, அவரால் பயனடைந்த, பலன்பெற்ற காங்கிரஸ்காரர்களும் ஏராளம். ஆனால் எதையும், பத்திரிகை நிருபரை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு செய்ததில்லை. அப்போது தெரியாவிட்டாலும் இப்போதாவது எல்லோருக்கும் தெரியட்டுமென்று, ஆவணங்களைத் தேடித்தேடியெடுத்து வந்து விருந்து படைக்கும் தங்கள் கருணை உள்ளத்துக்கு பாராட்டுக்கள்.
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் பதித்துள்ள 'முத்தாரம்' இதழின் நான்கு பக்கங்களும் 'முத்தான' பக்கங்கள் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன. பெரும்பாலோர் நடிகர்திலகத்துக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமே டாக்டர் பட்டம் வழங்கியதாக நினைத்துள்ளனர். பத்திரிகைச்செய்திகள் பலவும் அப்படியே பிரசுரித்து வந்தன. ஆனால் அவருக்கு பெல்ஜியம் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் வழங்கியது பலருக்கு இப்போதுதான் தெரிய வரும். இப்படி பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
நாணல் படத்தின் பாடலில் வரும் சாந்தி பிரதான வாயில் திருவிளையாடல் பேனர் படமும், வீடியோவும் சூப்பர் சார். நான் வெறும் தகவலாகத்தான் சொன்னேன். ஆனால் தேடியெடுத்துக் கொண்டுவந்து பதித்து விட்டீர்கள். 'வெட்டி வா என்றால் கட்டி வரும்' இந்தக்கூட்டத்தைக்காண இப்போது நடிகர்திலகம் இல்லாமல் போய்விட்டாரே.
மூன்று தெய்வங்கள் மற்றும் புதிய பறவை நிழற்படங்கள் அருமை. தூள் கிளப்புங்கள்.
-
அன்புள்ள வினோத் சார்,
கிராமத்து ரயிலடியில், வில்வண்டியில் அமர்ந்தவாறு அண்ணன் மாணிக்கம் அண்ணி சகுந்தலாவைப் பார்க்கும் முதல் பார்வை நிழற்படம் செம தூள். 'இப்படி ஒரு அழகான பெண்ணா' என்று அதிசயிப்பதை பார்வையிலேயே காட்டுகிறார். வண்டிக்கு வெளியே தெரியும் கிராமத்து அழகும் அட்டகாசம்.
ஆற்றுமணலில் பொங்கல் வைக்கும் ('ஆனைக்கொரு காலம் வந்தா')அடுத்த படமும் அருமை.
பதிப்பித்தமைக்கு நன்றி.
-
-
டியர் வாசு சார்,
எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஒரே குழப்பமாக உள்ளது.. தங்கள் ஒவ்வொரு பதிவையும் பாராட்டுவது ஒன்றே நமக்கு உள்ள நேர்மையான வழியாகும். ஞான ஒழியாகட்டும் [40ஆண்டுகளாகி விட்டால் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என ஒரு எழுதப் படாத விதி உள்ளதோ என்னவோ], சவாலை சமாளிக்கும் மாணிக்கமாகட்டும் தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் தங்களுடைய தனி முத்திரை பளிச்சிடுகிறது. பாராட்டுக்கள். அதுவும் குறிப்பாக நாகேஷ் அவர்களின் பிறந்த நாளை மறவாமல் இங்கே பதிவிட்டு அதன் மூலம் எந்த உன்னதக் கலைஞனையும் போற்றத் தயங்க மாட்டோம் என சொல்லியுள்ளது மகிழ்வூட்டுகிறது.
அதே போல் திருடன் ஜூடோ வும். நடனமாகட்டும் சண்டைக் காட்சியாகட்டும் எதி்லும் நான் சோடையில்லை என நடிகர் திலகம் நிரூபித்ததற்கு மற்றொரு சான்று திருடன் சண்டைக் காட்சி. (திருவிளையாடல் படத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று சிலர் நடிகர் திலகத்தின் நடனத்தை கிண்டல் செய்துள்ளனர். அதையும் இங்கே மற்றொரு திரியில் இடுகை செய்துள்ளார்.)
தங்களுடைய பதிவுகளின் மூலம் நடிகர் திலகத்திற்கு தாங்கள் ஆற்றும் பணி மகத்தானது. தொடரட்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
அக்டோபர் 1, 2012 ... நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள்
அகில இந்திய சிவாஜி மன்றம் இலக்கிய அணி சார்பில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் அக்டோபர் 1 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது. மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க, திரு நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா அவர்கள். கைப்பேசி எண் 9566274503
சேலம் நகர சிவாஜி ரசிகர்கள் சார்பில் நண்பர் விஜயராம் கண்ணன் மற்றும் நண்பர்கள் வைத்துள்ள பதாகையின் நிழற்படம்
http://imageshack.us/a/img845/2661/1...xgcopy1by2.gif
பதாகையிலுள்ள கவிதையின் அருகாமைத் தோற்றத்திற்கான நிழற்படம்
http://imageshack.us/a/img7/1033/vasanakavithai.gif
-
இன்று 28.09.2012 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...ps849408c7.jpg