அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். இதற்கு பின்னால் இருந்து செயல்பட்ட வேறு சிலரும் இருக்கின்றனர். முதலில் மணிசேகரன் சார். அவர் எழுத தொடங்கிய தொடர் இது [ஆனால் அவர் நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து பாடலகளையும் உள்ளடக்கி எழுதினார்].அவரால் தொடர முடியாத சூழல் வந்தபோது என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். பாடல்களை தேர்ந்தெடுப்பது, பாடல்களின் பின்புலத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு Broad Outline எனக்கு தந்தார். அவரிடம் இருந்த சில குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். அவருக்குதான் முதல் நன்றி. அதே போன்று என்னை இந்த தொடர் பாடல் கட்டுரை எழுத பெரிதும் ஊக்கமளித்தவர்கள் நமது ஹப்பின் மாடரேட்டர்கள் RR அவர்களும் NOV அவர்களும். அப்போது மட்டுமல்ல இப்போதும் என்னை பெரிதும் பாராட்டி தன்னுடைய முகநூல் /வதன புத்தகம் wall -ல் இந்த பதிவின் சுட்டியை அளித்த NOV அவர்களுக்கு மீண்டும் நன்றி.
மற்றொரு மறக்க முடியாத நபர் திரு மோகன்ராம் சார். இந்த பாடல்களின் தொடர் கட்டுரையை நான் எழுதும்போது நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரைப்பட துறையை சேர்ந்த நடிகர் திலகத்துடன் பணியாற்றிய பலரையும் சந்தித்து உரையாடி பல விஷயங்களை நான் தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்தவர் மோகன்ராம் சார். அவர் உதவி இல்லாமல் என்னால் இத்துணை விரிவாக எழுதியிருக்க முடியாது.
இந்த ஞான ஒளி படத்தைப் பொறுத்தவரை, திரு L I C நரசிம்மன் அவர்கள் [இன்றைக்கு அவர் உயிருடன் இல்லைஎன்பது வருத்தத்துக்குரிய செய்தி] பல சுவையான விஷயங்களை பகிர்ந்து கொணடார். அது போன்றே வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் உதவியும் நல்ல முறையில் கிடைத்தது.
இந்த பாடலைப் பற்றிய என் பதிவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது எனபது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமாக அடைகிறேன். அன்றைய நாளில் பதிவிட்ட நடிகர் திலகத்தின் ஏனைய பாடல்களின் ஆய்வு பதிவுகளை தேடி எடுத்து மீண்டும் மீள் பதிவு செய்ய இது ஒரு தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
கார்த்திக்,
ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் நண்பர்கள் ராகவேந்தர் சார், கோபால், சாரதி மற்றும் சுவாமியிடம் சொல்வதுண்டு. அதாவது யாராவது ஒருவர் தன மனதிற்கு பிடித்த பதிவை செய்திருக்கிறார் என்றால் அதை அஃகு வேறு ஆணி வேறாக அலசி மனம் திறந்து பாராட்டுவதில் அதை அழகாய் வெளிப்படுத்துவதில் கார்த்திக்கு இணை யாருமில்லை என்று. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
மேலும் பதிவை பாராட்டிய ராகவேந்தர் சார், ராகுல்ராம், சந்திரசேகர் மற்றும் சித்தூர் வாசுதேவன், ரவிகுமார் , அலைபேசியில் கடந்த 3 நாட்களாக பாராட்டு மழை பொழிந்த கோபாலுக்கு நன்றிகள் பல.
அன்புடன்