http://i125.photobucket.com/albums/p...ps6d36dcea.jpg
Printable View
Hearty congratulations - & best wishes to starts our evergreen emperor of tamil, indian, world, universe cine field, political world -only one - mgr., proudly, prestigely thread part 9 (nine)... All of the makkal thilagam's devotees participate in time, every time...thank you all viewers...
http://i60.tinypic.com/1zwozli.jpg
MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE
நமது ஈடு இணையில்லா பெருமை மிகு மக்கள்திலகம் அவர்களின் 8 ம் பாகம் இனிதே நிறைவு பெற்று பாகம் 9 அருமையாக நம் பேராசிரியர் செல்வகுமார் துவங்குவது உள்ளபடியே மகிழ்ச்சியான தருணம்... இதுவரையில் அறியாத அற்புதமான மக்கள்திலகம் - பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டால் அனைவரும் பயன் பெறுவர் என நம்பும் புரட்சி நடிகர் அபிமானி...
3 முதல்வர்களுடன் மகேந்திரன் அனுபவம்
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.
ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.
"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
courtesy malaimalar
Avargal Movie Song Sequence our thalaivar movie displayed from 4.08 to 4.09 minutes
https://www.youtube.com/watch?v=93FlwTQ3cIg
http://i1170.photobucket.com/albums/...ps324153de.jpg
கருணை உள்ளமே .....
கிராமப்புறத்தில் பெண்கள் நீர் நிலைகளில் குளித்துவிட்டு , தங்களிடம் உள்ள "ஒரே" சேலையை பாதி அணிந்துகொண்டு மீதியை " வெயிலில்" நின்று காயவைத்து பின் அணிந்து கொள்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட முதல்வர் "மக்கள் திலகம்" MGR அவர்கள் , பண்டிகை நாட்களில் பெண்களுக்கு " இரண்டு சேலைகள் " வழங்க ஆணை பிறப்பித்தார்கள் ....
Courtesy net
http://i1170.photobucket.com/albums/...psf6b52471.jpg
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா ?
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா ?
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !