அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்
அன்புடன்
ரவி
====
பணம் படைத்தவன் - " பவழ கொடியிலே "
வாலி ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபித்த பாடல் - அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணி விடலாம் - சுலபம் - நான் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் , கேட்டு கொண்டு இருக்கிறேன் என்று என்னால் எண்ணி சொல்ல முடியவில்லை .. அந்த ஷாஜகானும் , மும்தாஜும் இந்த ஜோடிகளை போல இவ்வளவு அழகா இருந்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே - என்ன இசை ! எப்படியெல்லாம் தன் காதலியை உயர்த்தி வர்ணிக்கும் பாடல் - அந்த காலத்தில் இந்த பாடலை பாடுவதர்க்க்காகவே , பல ஆண்கள் காதலியை தேடுவார்களாம் ---- LRE 'யின் ஹம்மிங் கேட்க்கும் அனைவரையும் வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும் - MT மிகவும் அருமையாக பாட்டுடன் ஒன்றி நடித்திருப்பார் - இந்த பாடலில் அவர் TMS க்கு பின்னணி பாடினது போல இருக்கும் - அழகை அள்ளி தெளித்திருப்பார் - முதல் தடவை - MT கனவு கண்டு பாடும் பாடல் என்று நினைக்கிறேன்
இந்த பாடலில் ஒரு சில வரிகள் போதும் - கற்பனையின் திறனை காட்ட
"காலடி தாமரை நாலடி நடந்தால் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் "
பவழ கொடியிலே முத்துக்கள் - புன்னகைக்கு ஒரு உதாரணம்
உயிருடன் வரும் ஒரு கன்னி ஓவியம் - அழகான பெண் மயிலுக்கு உதாரணம் ------
இந்த பாடலை கேட்க்கும் பொழுது - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா " என்ற பாடலும் , காவியமா ? நெஞ்சில் ஓவியமா ? என்ற காலத்தால் அழியாத பாடலும் நினைவிற்கு வருவதை தடுக்க முடியாது - தாஜ் மகாலின் அழகை இந்த இரு பாடல்களும் சொன்னது போல வேறு எந்த பாடல்களும் எடுத்து சொல்லியிருக்க இயலாது என்பது என் கருத்து
http://youtu.be/oFLYvDYxGls