https://pbs.twimg.com/profile_images...v0_bigger.jpeg Nagarjuna Akkineni @iamnagarjuna 16h16 hours ago
Spectacular visuals and dreams come alive in BAAHUBALI !!we salute you rajamouli.
Printable View
https://pbs.twimg.com/profile_images...v0_bigger.jpeg Nagarjuna Akkineni @iamnagarjuna 16h16 hours ago
Spectacular visuals and dreams come alive in BAAHUBALI !!we salute you rajamouli.
https://pbs.twimg.com/profile_images...5i_bigger.jpeg N Chandrababu NaiduVerified account @ncbn
I congratulate @ssrajamouli & team for creating a masterpiece like #Baahubali. He has showcased might & pride of Telugu Cinema to the world.
முதல் நாள் வசூல் 76 கோடி! சாதனை படைக்கும் பாகுபலி!
உலகம் முழுவதும் நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமைந்துவிட்ட 'பாகுபலி' திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.34 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.7 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ.5.15 கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ரூ.15½ கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் 1 டிக்கெட் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 12 டாலருக்கே விற்கப்பட்டது.
மன்னர்களின் வாழ்க்கையை சினிமாவாக்கும் கலை, ஹாலிவுட் கலைஞர்களுக்கு மட்டும்தான் கைவரும் என்று இருந்ததை, இயக்குனர் ராஜமௌலி உடைத்து தென்னிந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நாளில் 1600 காட்சிகள் திரையிடப்பட்டன. விஜயவாடாவில் மட்டும் ஒரே நாளில் 150 காட்சிகள் திரையிடப்பட்டன. இந்திய திரையுலக வரலாற்றில் ஒரே நாளில் ரூ.76 கோடி வசூலானது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் ஒரேநாளில் ரூ.45 கோடி வசூலித்தது. அந்த சாதனையை பாகுபலி படம் முறியடித்தது.
உலகப் புகழ் பெற்ற டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும், கலை வார்ப்புக்கும் ஹாலிவுட் படங்களையே இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
அதிலும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் நேரடியாக 'பாகுபலி' திரைப்படம் வெளிவந்திருப்பது இரண்டு மாநில திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் மலையாளம்,ஹிந்தி மொழிகளிலும் 'பாகுபலி' வெளிவந்திருப்பது கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி'யில் கதாநாயகனாக பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,சத்யராஜ்,நாசர், ராணா, கோபிசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இசை மரகதமணி, ஒளிப்பதிவு செந்தில்குமார். மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி 'பாகுபலி' யை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் அடுத்தப்பாகத்திற்கு 2016 வரை காத்திருக்கவேண்டும்.
Baahubali (The Begining) - must watch at Theater!
Starting few mins, idhukku dhaan ivlo build-upaa feeling.. CG is not that great..but poga poga screenplay arrests you throughout.. Interval block and Baahubali revelation are goose-bump moments.. Second half super.. especially the war sequence!! BGM is very good!!
Even though he made it rich.. usual build up for hero, item song ellam irukku.. but mannika koodaiya alavil ;)
Completely satisfied and kudos to Rajamouli!!
Apoorva Mehta @apoorvamehta18 11h11 hours ago Incredible!! 9.5 rating on IMDB for Baahubali.
https://pbs.twimg.com/media/CJuapd-UkAAP18p.jpg
View photo 346 retweets 558 favorites
- Baahubali retweeted
https://pbs.twimg.com/profile_images...wXh_bigger.jpg Varun Dhawan @Varun_dvn 8h8 hours ago
#Baahubali is must watch. The dedication of every person involved in this film shows in each and every frame
632 retweets 1,116 favorites
- Baahubali retweeted
https://pbs.twimg.com/profile_images...IZF_bigger.jpg Yami Gautam @yamigautam 10h10 hours ago
'Bahubali' is not a movie but an experience which every Indian will be proud of ! Absolute respect for @ssrajamouli sir & the entire team
திரை விமர்சனம்: பாகுபலி- இந்து டாக்கீஸ் குழு
காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி. பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை.
மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா (பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான். பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக் (தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன் அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.
தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின் விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும் பிரபாஸ்... அரசி தேவசேனாவாக அனுஷ்கா... பாகுபலியுடன் வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.
மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.
அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப் படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும் படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.
படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர் பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.
போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின் படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.
திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ், ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர். பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின் கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும் காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.
நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.
நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம். குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ் ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள் ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்கள்.
இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில் விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை. தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும் அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.
காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.
மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச் சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.
எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப் பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு, அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.
பாகுபலி - விமர்சனம்- webulagam
எதிரியால் மன்னன் கொல்லப்படுவான். அவனது மனைவி சிறை பிடிக்கப்படுவாள். அவர்களின் குழந்தை விசுவாசிகளால் காப்பாற்றப்பட்டு படகு ஓட்டுகிறவனிடம் அல்லது விறகு வெட்டுகிறவனிடம் வளரும். குழந்தை வளர்ந்து பெரியவனாகி படை திரட்டி எதிரியை வென்று, தாயை சிறை மீட்டு, ஆட்சியை கைப்பற்றும்.
காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் இந்த எளிய கதைதான் பாகுபலி. தனது திரைக்கதை வன்மையாலும், ஸீஜி உதவியாலும், ஆக்ஷன் காட்சிகளாலும் இந்த எளிய கதையை பாகுபலி என்ற பிரமாண்ட படமாக்கியிருக்கிறார் ராஜமௌலி.
அப்பா, மகன் என்று பிரபாஸுக்கு இரண்டு வேடங்கள். மகன் கைக்குழந்தையாக இருக்கையில் எதிரியிடமிருந்து சிவகாமி என்ற பெண்ணால் (ரம்யா கிருஷ்ணன்) காப்பாற்றப்படுகிறான். பழங்குடியினரிடையே பலசாலியாக வளரும் பிரபாஸுக்கு தான் யார் என தெரியாது. தெரிந்ததெல்லாம், கடைசி மூச்சில் சிவகாமி கைக்காட்டிச் சென்ற அருவி விழும் பிரமாண்ட மலைதான்.
பெரியவனான பிறகு அந்த மலை மீது ஏற முயற்சிக்கிறான். அந்த முயற்சி ஒரு காதலை பெற்றுத் தருகிறது. அந்தப் பெண்ணின் (தமன்னா) மீதுள்ள மையலால் மலையை கடந்து எதிரியின் பேரரசுக்கு வருகிறான். அங்கு மன்னனும் (ராணா டகுபதி) அவனது தந்தையும் (நாசர்) மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து மக்களையும், சிறையில் இருக்கும் தேவசேனா என்ற பெண்ணையும் காப்பாற்ற புரட்சிப்படையொன்று முயல்கிறது. அதில் ஒருவர்தான் பிரபாஸ் காதலிக்கும் தமன்னா.
தேவசேனாவை விடுவிக்கும் பொறுப்பு தமன்னாவுக்கு தரப்படுகிறது. அதனை பிரபாஸ் ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குகிறார். அவரைப் பார்க்கும் எல்லோரும் அவரது பெயர் சிவாவுக்குப் பதில் பாகுபலி என்கிறார்கள். ராணாவின் மகனை காப்பாற்றவரும் படைத்தளபதி கட்டப்பனும் (சத்யராஜ;) அவ்வாறே கூப்பிடுகிறார். பாகுபலி யார்? தேவசோனாவுக்கும் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? பாகுபலி என்னவானார்? ஏன் சிவாவைப் பார்ப்பவர்கள் அவனை பாகுபலி என்கிறார்கள்? சத்யராஜ் இதற்கான விளக்கங்கள் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் முடிகிறது. அதாவது பாதி பிளாஷ்பேக்குடன்.
நிச்சயமாக இது பிரமாண்ட படம்தான். ஸீஜி வேலைகளில் இந்திய சினிமா இன்னொரு மைல் கல்லை எட்டியிருக்கிறது என்று சொல்லலாம். ராஜமௌலியின் திரைக்கதையின் வலிமை என்பது, படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துவது.
வில்லன் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்து பார்வையாளர்கள் வெறி ஏறி, அவனை தூக்கிப் போட்டு மிதிக்கணும் என்று எண்ணும்போது சரியாக ஹீரோ வந்து வில்லனை துவைத்து எடுப்பார். இப்படி, எந்தக் காட்சியாக இருந்தாலும் அதற்குமுன் அந்தக் காட்சிக்கு பார்வையாளர்கள் தயார் செய்யப்படுவார்கள். பாகுபலியிலும் இந்த திரைக்கதை வன்மை பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
கதாபாத்திரங்களை தனித்தன்மையுடன் செதுக்கியிருப்பது இந்தப் படத்தின் இன்னொரு நேர்மறை அம்சம். ஆக்ரோஷமான நாயகனுக்குரிய உடற்கட்டை கொண்டிருக்கிறார் பிரபாஸ். சிவலிங்கத்தை பெயர்த்து தோளில் தூக்கிவரும் காட்சியில், பிரபாஸா இது என்று ஆச்சரிப்பட்டு போகிறோம். அதேபோல் சண்டைக் காட்சிகளிலும்.
அறிமுகக் காட்சி என்று பார்த்தால் வில்லனாக வரும் ராணாவின் ஆரம்ப காட்சிதான் அமர்க்களம். சீறிவரும் காளையை புரட்டிப் போடும் போது மனசு முழுதும் நிரம்பி உட்கார்கிறார். வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறாரோ அந்தளவுக்கு படமும் சிறப்பாக அமையும். பாகுபலியின் வெற்றியில் ராணாவின் கதாபாத்திரத்துக்கு அதிக பங்குண்டு.
படத்தின் இன்னொரு வலிமையான பாத்திரப்படைப்பு கட்டப்பன். மக்கள் மீது அன்பும், மன்னன் மீது விசுவாசமும் கொண்ட ஆக்ரோஷ வீரன். சத்யராஜின் கரியரில் இது முக்கியமான படம். ஆளே மாறி அசத்தியிருக்கிறார். சகுனி வேலை பார்க்கும் நாசரும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.
படத்தில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். வீரர்களை கொன்று கைக்குழந்தையை காப்பாற்றும் ரம்யா கிருஷ்ணனிடம் கம்பீரம் கனல்கிறது. நீலாம்பரியின் கோபமும் ஆக்ரோஷமும் கொஞ்சமும் குறையவில்லை. ரொமான்ஸ், ஆக்ஷன் என்று இரு தரப்புகளை திருப்திப்படுத்தும் வேலை தமன்னாவுக்கு. உறுத்தவில்லை என்பதே பெரிய விஷயம்தான். முதல் பாகத்தில் கட்டிப்போட்ட சிங்கம் போல் சின்ன வட்டத்துக்குள் வித்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அனுஷ்காவுக்கு. அடுத்த பாகத்தில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதே அவர் நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரத்தின் வெற்றி. இவர்கள் தவிர சின்னச் சின்ன வேடங்களில் பலர் வந்து போகிறார்கள்.
ஒரு பெருங்கதையை தொடங்கும் போது பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். பாகுபலியின் முதல் பகுதி மெதுவாக நகர்வது போல் தெரிய இதுவே காரணம். படத்தின் ஒளிப்பதிவில், ஸீஜி வேலைகளில் மனதை செலுத்தினால் அதுவே பெரிய அனுபவம்தான். முக்கியமாக போர்க் காட்சிகளில் ஒளிப்பதிவும், ஸீஜியும், எடிட்டிங்கும் சேர்ந்து விளையாடியிருக்கின்றன. பின்னணி இசையின் பங்கு மிக அதிகம். மரகதமணியின் பாடல்களைவிட பின்னணி இசை பிரமாதம்.
சரித்திர படம் என்று வரும்போது வசனம் முக்கியம். செந்தமிழாகவும் இருக்கக் கூடாது, கலோக்கியலாகவும் தெரியக் கூடாது. இந்த கம்பிமேல் வித்தையை மதன் கார்க்கி சரியாக செய்துள்ளார்.
நாயகன் என்றால் 100 சதவீத நல்லவன், வில்லன் 100 சதவீத கெட்டவன். ராஜா கதை என்றால் ஒரு சகுனி, ஒரு வீரன் இருப்பான். ஒரு தியாகி அம்மா, ஒரு அழகான காதலி என்று கதாபாத்திரங்களும், கதையும் மரபான பாணியிலிருந்து விலகாமல் அப்படியே உள்ளன. இந்த ஒன்றுதான் உறுத்தலான அம்சம்.
மற்றபடி பாகுபலி பிரமாண்ட காட்சி அனுபவம். பார்த்து பரவசப்படலாம்.
சீன மொழிக்கு செல்கிறது பாகுபலி! - VIKATAN
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பாகுபலி’. பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் அனைத்து மக்களிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
முதல் நாள் வசூலாக 76கோடிகளை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படத்தை சீன மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
இதற்கு முன்பு பிகே, இங்லீஷ் விங்லீஷ் உள்ளிட்ட படங்கள் சீன மொழியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவின் மூன்றாவது படமாக ‘பாகுபலி’ வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என வெளியான நான்கு மொழிகளிலும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் நல்ல விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.