Originally Posted by joe
சமீபத்தில் விவேக் குமுதம்.காம் -ல் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் .அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி "நீங்கள் நடிப்பதற்கு ஏங்கும் ஒரு கதாபாத்திரம்?"
அதற்கு விவேக்கின் பதில் " நடிகர் திலகம் நடித்த பாபு திரைப்படத்தில் அவர் நடித்த பாத்திரம் ..நடிகர் திலகம் என்ரு சொன்னவுடன் எல்லோரும் பராசக்தி ,மனோகரா ,திருவிளையாடல் ,தில்லானா மோகனாம்பாள் என்று பட்டியலிடுகிறார்கள் ..என்னைக் கேட்டால் பாபு திரைப்படத்தை ஏனோ பலரும் சரியாக கண்டு கொள்ளவில்லை ..அற்புதமான படம் ..உலகத்துல எந்த ஒரு நடிகனும் அந்த படத்துல நம்ம நடிகர் திலகம் நடிச்ச மாதிரி நடிக்க முடியாது .இப்போ கேட்டா அதை ஓவர் ஆக்டிங் -னுல்லாம் சொல்லுவாங்க ..ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது . அவரு பண்ணாதது எதுவுவே இல்ல ..அமெரிக்கா தொழில்நுட்டம் எதுவுமில்லமலேயே சாதாரண மேக்கப் தொழில் நுட்பத்துலயே மிகப்பெரிய சாதனையை பண்ணிகிட்டு போயிட்டார் "