More thaamarai
http://www.tubetamil.com/view_video....27ed621c335b19
Printable View
More thaamarai
http://www.tubetamil.com/view_video....27ed621c335b19
Aftermath of the attacks by the Sri Lankan Nazy Army on May 10th:
http://www.youtube.com/watch?v=MfKzl...e=channel_page
:'(
தேசத்தை விற்றவர்கள்
ஆஃப்ரிக்கா கண்டத்தின் தென்கிழக்கில் மொஸாம்பிக், ஸாம்பியா, தான்ஸானியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட மலாவி என்ற ஒரு தேசம் இருக்கிறது. அங்கே இப்போது ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கும் பிங்கு வா முத்தாரிகா ( Bingu wa Mutharika) தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்காக ஒரு காரியம் செய்வார். மக்கள் அதிகமாகக் கூடும் ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்று அங்கே திரண்டிருக்கும் அத்தனை பேரிடமும் அங்கே குவிக்கப் பட்டுள்ள பொருட்களில் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொண்டு போகலாம் என்று மைக்கில் தெரிவிப்பார். ஓரிரு நிமிடங்களிலேயே அந்த ஒட்டு மொத்த ஷாப்பிங் மாலும் தூசு துரும்பு இல்லாமல் சுத்தமாகி விடும். மக்கள் தங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவையும் அள்ளிக் கொண்டு ஓடுவார்கள். மாலில் அன்றைய தினம் இருந்த அத்தனைப் பொருட்களுக்குமான தொகையை முத்தாரிகா கட்டி விடுவார்.
அதன் பிறகு அடுத்த தேர்தல் வரும் வரை அவரும் அவருடைய குடும்பத்தாரும் அந்த தேசத்தை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கொள்ளையடிப்பார்கள். இது போன்ற பல கதைகளை ஆஃப்ரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க தேசங்களில் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.
அந்தக் கதைதான் இப்போது தமிழ்நாட்டில் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடந்து கொண்டிருக்கிறது. இதை யாருமே இங்கே எதிர்த்து எழுத முடியாத நிலை வேறு நிலவுகிறது. கருணாநிதியின் மகன் அழகிரியை எதிர்த்து செய்தி வெளியிட்டதற்காக கருணாநிதியின் பேரனான கலாநிதியின் செய்தித்தாளான ’ தினகரன் ’ அலுவலகம் மதுரையில் கொளுத்தப்பட்டு மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். இந்தப் பிரச்சினையில் கருணாநிதி தன் மகனுக்கே ஆதரவு அளித்து கலாநிதியின் சகோதரரான தயாநிதியின் மத்திய மந்திரி பதவியைப் பறித்து கட்சியை விட்டே விரட்டினார். இந்த நாடகம் ஒருசில மாதங்களே நீடித்தன. இப்போது தயாநிதியின் முக்கிய விரோதியான கனிமொழியே ” கலைஞரின் கையில் உள்ள போர்வாள் தயாநிதி ” என்று பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் இருந்திருக்கக் கூடும் என்பது சிறு பிள்ளைக்குக் கூட தெரிந்த விஷயம்.
கனிமொழியின் அரசியல் பிரவேசம் குறித்து ஆதரவாக எழுதியதற்கு வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத் தவிர எனக்கு இப்போது வேறு வழியில்லை.
அ. ராசா தொலைபேசித் துறை மந்திரி ஆன பிறகு நடந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் 10,000 கோடி ரூபாய் சம்பந்தப் பட்டிருப்பதாகச் சொல்கிறது பத்திரிகை செய்தி. இதில் ஒவ்வொரு நபருக்கும் கிடைத்திருக்கும் பங்கு 350 கோடி ரூபாய் என்று தெரிய வருகிறது.
தி.மு.க.வின் நிலை இது என்றால், காங்கிரஸின் ஊழல் இதை விடப் பல மடங்காக இருக்கிறது. மொத்தம் எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியினர்தான் அதிகம். ஒட்டு மொத்தமாக இவர்கள் இந்த தேசத்தையே விற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து வெளிவரும் சுவிட்சர் இல்லஸ்ட்ரேட் பத்திரிகை கடந்த 1991-ஆம் ஆண்டு நவம்பர் 11 தேதியிட்ட இதழில் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுள்ளவர்களின் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் பெரும்பாலும் இந்தியா போன்ற ஏழை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்களே இருந்தன. அந்தப் பட்டியலில் முதல் 14 இடத்தில் இடம் பெற்றிருப்பவர் ராஜீவ் காந்தி. அவர் போட்டுள்ள தொகை 11,000 கோடி ரூபாய். எல்லாம் ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் அடித்த கொள்ளை. பட்டவர்த்தனமாக பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகையில் ராஜீவின் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ராஜீவ் இப்போது உயிருடன் இல்லாததால் இந்தச் சொத்து அத்தனையும் ராஜீவ் குடும்பத்தைச் சாரும்.
இந்தச் செய்தி தொடர்பாக காங்கிரஸ் 18 ஆண்டுகளாக மௌனம் சாதித்து வருகிறது என்கிறார் எஸ். குருமூர்த்தி. அவர் ஒரு பி.ஜே.பி. ஆதரவாளர் என்று சொல்லித் தப்பிப்பதில் பயனில்லை. அவருடைய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பினர் பதில் சொல்லவில்லை என்பது மட்டும் அல்லாமல், “இந்தப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று பி.ஜே.பி. சொல்வதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது; இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் தலித் குடிசைகளில் ஓர் இரவு தங்கி நாடகம் நடத்துகிறார் ராஜீவின் புதல்வர் ராகுல் காந்தி.
வட இந்தியாவில் காங்கிரஸின் நிலை இப்படியிருக்க, இங்கே தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன் கோவையில் ராணுவத்தினர் தாக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். ஏனென்றால், இலங்கையில் தமிழ் இனம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காங்கிரஸ் அரசும் சோனியாவும்தான் காரணம் என்று நம்புகிறார்கள் தமிழர்கள். இங்கிலாந்தில் சீக்கியக் குழந்தைகள் தலைமுடி (டர்பன்) அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் அதில் தலையிடும் இந்திய அரசு, இங்கே இலங்கையில் ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் தினம் தினம் இலங்கை ராணுவத்தால் கொல்லப் படும் போது அது பற்றி சுண்டு விரலைக் கூட நீட்ட வில்லை. அதுவும் தவிர, தமிழ் இனப் படுகொலையைச் செய்யும் ராஜபக்சேயின் ராணுவத்துக்கு உதவியும் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. அப்படியிருக்கும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு தி.மு.க.வும் காங்கிரசும் இங்கே ஓட்டுக் கேட்க முடியும்?
இதுதான் தமிழர்களின் இன்றைய கேள்வி.
கருணாநிதியோ ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒரு நல்ல காரியத்தைக் கூடச் செய்யாமல் தொடர்ந்து மக்களை வெறுப்பேற்றும் காரியங்களையே செய்து கொண்டிருக்கிறார். அவருக்கும் வேறு வழியில்லை. இலங்கையில் லட்சம் தமிழர்கள் செத்தாலும் சரி, அவருக்கு அவருடைய மகளின் எம்.பி. பதவியும், அவருடைய கட்சிக்காரர்களின் மத்திய மந்திரி பதவியும் முக்கியம் என்று நிரூபணமாகி விட்டது. தன் புதல்வி கனிமொழியையும், மற்றவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்வதை விட்டுவிட்டு ஏற்கனவே பல இன்னல்களில் இருக்கும் மக்களை மேலும் வதைக்கும்படி வேலை நிறுத்தம், மனிதச் சங்கிலி என்று நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் போட்ட நாடகங்களிலேயே மக்களை ரொம்பவும் வெறுப்புக் கொள்ளச் செய்த நாடகம், அவருடைய ஐந்து மணி நேர உண்ணாவிரதம்தான். காலையில் நன்றாக இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு வந்து கடற்கரையில் படுத்துக் கொண்டு மதிய உணவு வேளை வருவதற்குள் “ராஜபக்சே போரை நிறுத்தி விட்டார் ” என்று பொய் சொல்லிவிட்டு லஞ்சுக்கு வீட்டுக்குப் போய் விட்டார்.
இதன் மூலம், இந்த உலகத்திலேயே இப்படி காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்த ஒரே தலைவர் என்ற அருமையான பட்டத்தைப் பெற்றிருக்கிறார் கருணாநிதி. தி.மு.க.வினரையே மனம் புழுங்க வைத்த சம்பவமாக அமைந்து விட்டது இது. ஆனால் மக்களை வெறுப்பூட்டியது இந்த உண்ணாவிரதம் மட்டும் அல்ல; உண்ணாவிரத நாடகத்தின் போது அவர்கள் டி.வி. சேனலில் பார்த்த காட்சிகள்தான்.
ஐந்து மணி நேர உண்ணாவிரதத்தால் களைத்துப் போன முதலமைச்சர் கருணாநிதி கட்டிலில் படுத்திருக்கிறார். தலைமாட்டில் துணைவி; கால்மாட்டில் மனைவி. தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களும் இந்தக் கண்றாவியைக் கண்டு களித்தனர். கருணாநிதி குடும்பத்தின் சன் டி.வி. அவரது கட்சியின் கலைஞர் டி.வி. இரண்டிலும் வரும் சீரியல்களையும் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது அந்தக் காட்சி.
மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், சாலை வசதியின்மை, விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழ்ர்களின் இனப் படுகொலைக்கு தி.மு.க. சாதிக்கும் கொடூர மௌனம் போன்ற பல பிரச்சினைகளால் கொதித்துக் கொண்டிருந்த மக்கள் இந்தக் குடும்பக் காட்சியைக் கண்டு மேலும் வெறுத்துப் போய் விட்டனர். கருணாநிதியின் அந்த ஒரு உண்ணாவிரதமே தமிழர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்து போனது.
இந்தச் சூழ்நிலையை இதுவரை ஈழப் போராட்டத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்த ஜெயலலிதா வெகு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டார். ’ நான் பதவிக்கு வந்தால் தனி ஈழம் வாங்கிக் கொடுப்பேன் ’ என்று சகலரையும் மிரள வைக்கும் ஒரு அறிவிப்பைக் கொடுத்து கருணாநிதியை மேலும் கதிகலங்க அடித்து விட்டார் ஜெயலலிதா. அவர் அதைச் செய்வாரா, மாட்டாரா என்பதெல்லாம் கேள்வி அல்ல. இப்போதைக்கு ஈழத் தமிழர்களின் வேதனையால் துயருற்றிருக்கும் தமிழர்களின் அத்தனை ஓட்டும் அவருக்கு வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டார் ஜெ.
இந்த நிலையில் இன்றைய தினம் (6.5.2009) சென்னையில் நடக்க இருந்த சோனியாவின் பொதுக்கூட்டம் ரத்தாகி விட்டது. இதற்குக் காரணமும் கருணாநிதிதான். ஏற்கனவே சோனியாவின் மீது வன்மத்துடன் இருக்கும் தமிழர்கள் மத்தியில் சோனியாவுடன் ஒரே மேடையில் ஏறினால் தனக்குத் தீராத பழி வந்து சேரும் என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி பொதுக்கூட்டத்துக்கு சில தினங்கள் முன்பே ’ உடம்பு சுகமில்லை ’ என்று சொல்லி மருத்துவமனையில் பதுங்கிவிட்டார். அதனால் கூட்டத்தையே ரத்து செய்து விட்டார் சோனியா.
மதுரையில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் கமிஷனரும் இது சம்பந்தமாக தில்லிக்கு எழுதி விட்டார். மதுரையில் தேர்தலே ரத்தானாலும் ஆச்சரியமில்லை என்ற நிலை. கருணாநிதியின் புதல்வர் அழகிரி போட்டியிடும் தொகுதி மதுரை.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பத்து இடங்களையாவது பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தது. இப்போதய நிலையில் ஒரு இடத்தைப் பிடித்தால் கூட அது அதிசயமாகவே இருக்கும்.
http://charuonline.com/May2009/DesathaiVitravarkal.html
<<<< தலைமாட்டில் துணைவி; கால்மாட்டில் மனைவி >>>>
:banghead: :banghead: indha maadhiri aalungalukkullaam Citizen theerpudhaanyaa correct'u :yes:
Nanri!Quote:
Originally Posted by Nerd
போர்முனைக்குப் போய் வந்தேன்
http://www.paristamil.com/tamilnews/?p=8128
http://ibnlive.in.com/news/at-ndas-big-rally-modi-is-speaking-star/92267-37.html
Narendra Modi on SL issue:
i dunno if he is serious but if he is, then he can change a few things....atleast he is making north indians aware of such goofed up foreign policies and how india is a witness to a genocide....Quote:
"I would like to ask the PM what about my Tamil brothers who are bearing atrocities in Sri Lanka,” he said
Arjun: thiruduradhu thappuQuote:
Originally Posted by MADDY
GM: ayya enna sonneeeng ?
Anyway, quite interesting he spoke this in Ludhiana. I don't think people north of Chennai even care about what's happening in SL.
hmmm
Saw Yesteray's DMK + Sonia rally at chennai.
it was fun to watch Thirumavalavan speaking like "we are indian, there are lot of threat to india from outside, only congress can give product india" blah blah.
Inthalu eppadi ippadi "Desiya Vathi" aanar?
:lol: on first partQuote:
Originally Posted by Prabhu Ram
yes, thats the exact reason i posted this.......TN-la pesina ok, press conference-la shoe-kku bayandhu pesina ok - understood - but speaking in Ludhiana abt eelam issue is pretty interesting.......