is there a way to find "ennirendu pathinaru vayadhu" video on net.
All other famous songs of shivaji are there except this song.
Printable View
is there a way to find "ennirendu pathinaru vayadhu" video on net.
All other famous songs of shivaji are there except this song.
vivasaayi - This song used to be on youtube. A lot of accounts got inactivated and it could be one of those accounts that hosted this song... kidaichchaa post-REn...
True ..one of those accounts is mine :oops:Quote:
Originally Posted by RC
thanks RC :)Quote:
Originally Posted by RC
அடடே தம்பி நீங்களா...?Quote:
Originally Posted by PARAMASHIVAN
LOCK- ஆகிறதுக்குன்னே THREAD OPEN பண்ற பார்ட்டி இல்லே நீங்க...?
MR PARAMASIVANQuote:
Originally Posted by PARAMASHIVAN
The song which you had mentioned is from the movie "vaazhkkai" where shivaji sir ,THE GREATEST ACTOR INDIA HAS EVER PRODUCED appears in that younger getup only for 15 to 20 minutes.But do you know how good a movie that is? If u have not watched it please get a copy ,watch it and comment.
திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.
விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".
பெருமிதத்துடன்,
பம்மலார்.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...
74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்
75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்
76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்
77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)
78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்
79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்
80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்
81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்
குறிப்பு:
ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
(தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:
பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81
இதில் வெள்ளி விழா கண்டவை : 6
20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2
100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33
10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12
50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9
43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7
6 வாரங்கள் வரை : 12
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் நிறைவு.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...
அன்புடன்,
பம்மலார்.
நேற்றைய (24.02.2010) 'சிங்கத்தமிழன் சிவாஜி' (வசந்த் டி.வி.) நிகழ்ச்சியில், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் 'கலைப்புலி சேகரன்' கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தன்னுடைய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதில் பெரிய விசேஷம், வழக்கமாக வரும் வி.ஐ.பி.க்கள் போல அரைத்த மாவை அரைக்காமல், புதிய கோணத்தில், கிட்டத்தட்ட ஒரு ரசிகனின் பார்வையில் அவரை ரசித்தார்.
தான் முதன்முதலில் வினியோகஸ்தரானதே, நடிகர்திலகத்தின் 'என் தம்பி' படத்தின் மறு வெளியீடு மூலம்தான் என்றும், அந்தப்படததை சென்னை ராயபுரம் பிரைட்டன் தியேட்டரில் வெளியிட்டு லாபம் பார்த்தபின்னரே, இதையே தொழிலாக தொடர்வது என்று முடிவெடுத்ததையும், இரண்டாவது வெளியீடாக 'நீதி' படத்தை மறு வெளியீடு செய்து அதிலும் பெரும் லாபம் கிடைக்கவே, அடுத்து 'வசந்த மாளிகை' படத்தை ஒன்றரை ல்ட்சம் ரூபாய் எனும் பெரும் தொகை கொடுத்து வாங்கி ஷிப்டிங் முறையில் பல அரங்குகளில் வெளியிட்டு, முழுசாக ஐந்து லட்சம் லாபம் கிடைத்ததையும் விவரமாகச்சொன்னார்.
இதைச்சொல்லும்போது நடிகர்திலகத்தோடு, மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரையும் சேர்த்துக்கொண்டு, இவர்கள் இருவரின் படங்கள் என்றென்றைக்கும் வசூலை வாரிக்குவிக்கும் படங்களாக விளங்கி வருவதையும், எத்தனையோ வெளியீட்டாளர்கள் புதிய படங்களை வாங்கி திரையிட்டு நஷ்டமடைந்தபின்னர், அதை ஈடு கட்ட நடிகர்திலகம் மற்றும் மக்கள் திலகம் படங்களை வாங்கி மறுவெளியீடு செய்து லாபம் பார்த்து, தங்கள் நஷ்ட்டங்களை ஈடு செய்தனர் என்றும் விலாவரியாக விளக்கினார்.
தானொரு சிவாஜி ரசிகர்மன்றத் தலைவனாக, நடிகர்திலகத்தை அன்னை இல்லத்தில் சந்தித்த நிகழ்வுகளை, ஒரு பக்தனின் ஸ்தானத்தில் இருந்து உணர்ச்சி பொங்கக் கூறினார். வி.ஐ.பி.க்கள் யாரும் அதிகம் பேசாத, சிவாஜி ரசிகர் மன்ற படை பற்றியும், அது காங்கிரஸுக்கு எவ்வளவு பெரிய தொண்டர் படையாக விளங்கியது என்பது பற்றியும் அவர் விளக்கியபோது, 'ஆகா, இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தோம்' என்று மனம் குதூகலித்தது. நாம் இங்கே இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் பல விஷயங்களைப்பற்றி (மற்றவர்கள் யாரும் சொல்லாதவைகளை) அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரையும் ஆயுதமாக ஏந்தி, இன்றைய நடிகர்கள் சிலருக்கு சின்ன சின்ன 'பஞ்ச்'கள் ஆங்காங்கே கொடுத்தார். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இன்றைக்கும் கூட அவர்மீது உயிரையே வைத்திருப்பதையும், அவரது புகழ்பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளையும் அழகுற எடுத்துரைத்தார்.
காமராஜர் சாலையில், மகாத்மா காந்தி, மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கருகே நடிகர்திலகத்துக்கு சிலையமைத்து, வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளும் ரசிகர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் செய்த முதல்வர் கலைஞருக்கு அதிகம் நன்றி தெரிவித்துக்கொண்ட திரு. கலைப்புலி சேகரன், பள்ளி பாடப்புத்தகங்களில் நடிகர்திலகம் பற்றிய அத்தியாயம் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டுமென்று கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி, வழக்கமாக வி.ஐ.பிக்கள் தரும் அரைத்த மாவு அல்ல, முற்றிலும் நாம் எதிர்பாராத இனிய விருந்து. ரசிகர்களின் உள்ளக்கிடக்கையை பிரதிபலித்த அற்புத உரை.
நன்றி, கலைப்புலி சேகரன் சார். நமது நடிகர்திலகத்தின் புகழ்பாட ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத்தரட்டும்.
பாபு சினிமா விமர்சனம் (விகடன் பொக்கிஷம்)
'நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்' என்று சொல்வதுகூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!
ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக்குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.
பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ''நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?'' என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித் துப்போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப் பணித்துக் கொள்ளும் விசுவாசம் - இப்படிப் பல காட்சிகள் குறிப் பிடத்தக்கவை.
சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.
பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண் டுமா?
பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள் ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக்கொள் கிறார். குழந்தை பிச்சையெடுத்து விட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனை யால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர்குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்த னையையும் உருக்கமாகச் சித்திரித் திருக்கிறார், சௌகார் ஜானகி.
படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவ குமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிரா யரைப் போட்டுக்கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்துகொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவ குமார்-நிர்மலா காதலைவிட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம் பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.
'கஞ்சி வரதப்பா' பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக்கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ் துக்கு சிறப்பாகத் தேறிவிடக்கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.
சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!