-
வாலு படத்துக்கு மேலும் ஒரு சிக்கல்
சிம்பு நடித்துள்ள வாலு இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் அந்தப் படத்துக்கு.
சிம்பு நடிக்கும் படத்தின் பாடல்களை உருவாக்குவதில் அவரும் தனது பங்களிப்பை செலுத்துவார். பாடல்களில் அவரது ஐடியா தூக்கலாக இருக்கும். வாலு படத்திலும் அப்படியே. இந்தப் படத்துக்கு இசை எஸ்.எஸ்.தமன்.
வாலு படத்தில், யூ ஆர் மை டார்லிங் என்ற பாடலை தமனும், சிம்புவும் இணைந்து பாடினர். இந்தப் பாடலின் டியூனை தான் இசையமைக்கும் தெலுங்குப் படம் ஒன்றிலும் பயன்படுத்தினார் தமன். வாலு முதலில் வரும் என்ற எண்ணத்தில் இதனை அவர் செய்தார்.
ஆனால், வாலு படத்தை முந்திக் கொண்டு அந்த தெலுங்குப் படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களைப் பொறுத்தவரை தெலுங்குப் படத்தில் வந்த டியூனை வாலு படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்.
படம் தாமதமானாலும் நினைக்காத திசையிலிருந்தும் சோதனைகள் வரும்.
-
ஒரு வழியாக சிம்புவின் ’வாலு’ படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்துள்ளது.
சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு படத்துக்கு தமிழக அரசின் வரிச் சலுகை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் புதிய ட்ரைலரை இந்த வாரம் வெளியிடப் போவதாகவும், வரும் ஜூலை 3ஆம் தேதி படத்தை வெளியிடுவதாகவும் டி.ராஜேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-
-
1 Attachment(s)
AD with TR words..
Attachment 4206
-
வாலு என் படம், எப்போது அழைத்தாலும் வருவேன்- webulagam
ஜுலை 17 வாலு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் நெருக்கமாகி காதலில் கசிந்துருகினர். பிறகு அந்தப் படம் முடிவதற்குள் காதலில் கசப்புற்று பிரிந்தனர்.இந்த கசமுசா காரணமாக ஹன்சிகா படப்பிடிப்புக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது. அதனை மறுத்த ஹன்சிகா, அவர் தந்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாகவும், தற்போது வேறு படத்தில் நடிப்பதால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சம்மதித்தால் வாலு படத்தில் நடித்து தருவதாகவும் கூறி, அதன்படி நடித்தும் தந்தார்.
தற்போது மேலும் ஒரு சர்ச்சை. வாலு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஹன்சிகா கலந்து கொள்ள மாட்டார் என்று. "வாலு நான் நடித்த படம். அதன் புரமோஷன் நிகழ்ச்சிக்கு எப்போது அழைத்தாலும் வந்து கலந்து கொள்வேன்" என அந்த சர்ச்சையையும் மறுத்துள்ளார் ஹன்சிகா.
-
Vaalu Trailer2 | STR, Hansika Motwani, Santhanam | SS Thaman | Vijay Chandar
https://youtu.be/TfVedaWc0b0
-
தனுஷை குறிவைக்கிறதா வாலு டிரெய்லர்?
என் ஃபேன்ஸோட சந்தோசம் தான் ஃபர்ஸ்டு! மத்ததெல்லாம் நெக்ஸ்டு! நீங்க இல்லாம நான் இல்லை. அப்டினு ட்விஸ்டை ட்விட்டரில் ட்விட் செய்துவிட்டு பின்னாடியே வாலு டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
வாலு டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே ட்விட்டரில் ட்ரெண்டானார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் டிரெய்லரில் வரும் வசனங்கள் தனுஷை குறிவைக்கிறதா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் மாரி டிரெய்லரில் தனுஷ் , “ நானெல்லாம் தர லோக்கல் என்று வசனங்களை பேசியிருப்பார். அதுபோல வாலு டிரெய்லரில் சிம்பு, “ நானெல்லாம் எக்ஸ்ட்ரீம் லோக்கல் சார்” என்று சொல்கிறார். தனுஷை குறிவைத்தே பதில் வசனங்களை உருவாக்கியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டுவருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், குரைக்கிற நாய் தான் கல்லடி வாங்கும், பதுங்குற புலி தான் ஆள அடிக்கும், சொல்லிவை, அவன்கிட்ட, தேவையில்லாம என் வழியில குறுக்க வாரான், மவனே கண்டமாயிடுவான். என்று தெறி பறக்கும் வசனங்களை பேசியிருக்கிறார். இந்த வசனங்களை ட்விட்டரில் தனுஷை மையப்படுத்தி ட்விட் செய்துவருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.
“எப்படியிருந்தாலும் வாலு , மாரி இரண்டு படமுமே ஜூலை 17ம் தேதி வெளியாகிறது. அப்போ தெரிந்துவிடும் யாரு தர லோக்கல்? யாரு எக்ஸ்ட்ரீம் லோக்கல்னு ” என்று ரசிகர்களின் கமெண்டுகள் வந்துவிழுகிறது ட்விட்டரில்...
-
"here is my good friend simbu's vaalu trailer
all the best simbu" - Dhanush FB page.
Media is making nonsense articles just to create hype and rivalry.
-