-
இந்தத் திரியை பம்மலார் Tamil Film Classics பகுதியில் தொடங்கினாலும் தொடங்கினார்... திடீர் திடீரென்று இந்தப் பகுதியில் உறங்கிக் கிடந்த பல்வேறு திரிகளில் பதிவுகள் ஆரம்பித்திருப்பது, பம்மலார் எந்த அளவிற்கு இங்கே மய்யம் கொண்டுள்ளார் என்பதைத் தான் காட்டுகிறது. சபாஷ் பம்மலாரே...
-
-
சிவாஜி குடும்பத்திற்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றிய ரஜினி, கமல்!
http://cinema.dinamalar.com/tamil-ne...Kollywood/.htm
-
Sivaji ninaivunaal posters of trichy district fans are superb
21=7 malaimalar trichy full of sivaji ninaivunaal news only.
Kudos to our trichy collegues.
-
இன்று வெளியிடப்படும் விக்ரம் பிரபுவின் 'கும்கி' திரைப்பட பாடல்கள் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
விழாவில் கலந்துகொள்ள திரு குமரேசன் பிரபு மற்றும் நண்பர்கள் சுமார் 100 பேர் பெங்களுரிலிருந்து சென்றிருக்கிறார்கள் .
-
-
கர்ணன் அமெரிக்காவில் ரிலீஸ். ராஜ் டிவி புகழாரம்.
http://www.youtube.com/watch?v=Uor4c...yer_detailpage
நன்றி: ராஜ் டிவி மற்றும் youtube இணையதளம்
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
காவல் தெய்வம் படத்தில் அண்ணன் ஏற்றிருந்த சாமுண்டி கிராமணி கதாபாத்திரத்தையும் அதில் அவருடைய பெர்ஃபாமன்ஸையும் அணுஅணுவாக அலசியிருக்கும் விதம் சூப்பர். சும்மா மொத்த காட்சிகளையும் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
முதல் வெளியீட்டின்போது (1969) இப்படத்தைப்பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. (பள்ளியில் தேர்வு நேரம் என்று நினைவு). சில ஆண்டுகள் கழித்து வடசென்னை முருகன் தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு இன்னும் நினைவில் நிற்பது, அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஏற்பட்ட ஆரவாரமும், உணர்ச்சிப்பெருக்கும் தான். தூக்கிலிடப்போகும் கடைசிநாள் இரவில், தன் கொட்டடியில் இருந்துகொண்டு, சக கைதிகளைநோக்கி "சுவருக்கு அந்தப்பகம் இருக்கும் முகம் தெரியாத ஐயாமார்களே, நாளைக்கி இன்னேரம் நான் இருக்க மாட்டேன்யா. எனக்காக எல்லாரும் ஒரு பாட்டுப்பாடுங்கய்யா" என்று கெஞ்சும்போது, எனக்கு முன் சீட்டிலிருந்த ஒரு பெண்மணி புடவையால் வாயைப்பொத்திக்கொண்டு விசும்பியது இன்னும் நினைவில் நிற்கிறது.
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். படத்தில் சாமுண்டி கிராமணி தூக்கில் போடப்பட்டு அவர் பார்ட் முடிந்ததுமே முக்கால்வாசி தியேட்டர் காலியாகி விட்டது. நான் அப்போதுதான் முதல்முறையாகப்பார்த்ததால் கடைசி வரை இருந்து பார்த்து விட்டு வந்தேன்.
இலவசமாக நடிக்கும் படம்தானே என்று ஏனோதானோ என்று பண்ணாமல், மற்ற படங்களைவிட அதிக சிரத்தையும் சிரமமும் எடுத்து நடித்திருப்பார்.
அருமையாக அலசியதற்கு மிக்க நன்றி.
-
25-7-2012 அன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி. தன்னுடைய அழகாலும், துடிப்பான சண்டைக்காட்சிகள், மற்றும் நடனக் காட்சிகளால் இளைஞர்களைக் கவர்ந்த ரவிச்சந்திரன் அவர்களை அவருடைய நினைவு தினத்தில் நினைவு கூர்வோம்.
http://i1087.photobucket.com/albums/...n31355/r-8.jpg
ரவிச்சந்திரன் அவர்கள் நினைவாக நடிகர்திலகம் அவர்களின் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்திலிருந்து அவர் நடித்த பாடல் காட்சி. நடிகர் திலகம் ரசிப்பதாக வரும் பாடல் கூட.
http://www.youtube.com/watch?v=5x2LFD2KkOQ&feature=player_detailpage
-
அன்பு பம்மலார் சார்,
காவல் தெய்வம்'இன்று முதல்' விளம்பரம் அசத்தலோ அசத்தல். சாமுண்டி கிராமணியின் கம்பீரமும், அடக்கமும் ஒரு சேர உள்ள விளம்பரம் தூள்.
காவல் தெய்வம் தினமணி கதிர் விமர்சனம் o k. விமர்சன முடிவின் இறுதி இரண்டு வாக்கியங்கள் விமர்சனத்தின் ஹைலைட்.
அரிய அற்புத பதிவுகளுக்கு இதயம் மலர்ந்த நன்றி!