http://i1087.photobucket.com/albums/...3-08130627.jpg
http://i1087.photobucket.com/albums/...3-08130604.jpg
Printable View
adiram sir. whether we like or not now NT's most significant milestone films like Thiruvilayadal, Navarathiri, Thillana, Saraswathi Sabatham etc., are in APN's sons custody. As NT fever is on the rise every year and after every rerelease, we need to help bring out NT's classics in a proper sequence without detrimental to the box office collections. Two films per year is a good idea. Like our Divya films at the helm of Karnan's incomparable success over decades to come, other producers, if they emulate, that will be the real service to keep our NT in limelight forever.
வேலூரிலிருந்து தன் தந்தையுடன் வசந்தமாளிகையை ஆவலுடன் தரிசிக்க சென்னை வந்த கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள். அதுமட்டுமல்ல... அவரது தந்தை ('வாழ்க்கை' ராமசாமி) அதிதீவிரமான நடிகர் திலகத்தின் பக்தராம். "என் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதே தலைவர் சிவாஜியால்தான்" என்று அவர் சொல்லும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. ரசிக வேந்தர் சாரும், நானும் எடுத்த ஒரு மினி பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.
http://www.youtube.com/watch?feature...&v=6y-vh7iN75o
'Dinasudar' Today Banglore
http://i1087.photobucket.com/albums/...t%20-2/pg4.jpg
மிகவும் மன வருத்தத்துடனும் மன வலியுடனும் இதை எழுத வேண்டியுள்ளதை நினைத்தால் கஷ்டமாகத் தான் உள்ளது. என்றாலும் நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற நிலையில் தான் இதை எழுதி ஆறுதல் தேட முயல்கிறேன்.
கர்ணன் 2012ன் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த்து நமக்கெல்லாம் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது. அதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் நாடெங்கும் திரையிடப் பட்டு விநியோகஸ்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஊட்டி வந்தது.. அந்த தைரியம் தான் கர்ணன் ஒரு படி மேலே போய் நவீன தொழில் நுட்பத்துடன் வெளிவந்து ஒரு தலைமுறையினையே சிவாஜி ரசிகர்களாய் மாற்றியது. அதனைத் தொடர்ந்து சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் புதிய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தின் நடிப்பில் உள்ள பல்வேறு பரிணாமங்களில் ஒன்றினை அறிமுகப் படுத்தும் விதமாகவும் வசந்த மாளிகையின் நவீன மயமாக்கல் மற்றும் வெளியீடு அமைந்த்து.
தமிழகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற தெய்வத்திற்கு தங்கள் உடல் பொருள் உள்ளம் போன்ற யாவற்றையும் அர்ப்பணித்து மிகப் பெரிய வரவேற்பைத் தந்துள்ளனர். இவ்வளவு பெரிய மக்கள் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருளர் என்று சொல்லுமளவிற்கு பிரம்மாண்டமான அளவில் வசந்த மாளிகை திரைக் காவிய மறு வெளியீட்டிற்கு வரவேற்பளித்தனர்.
ஆனால் நடந்தது என்ன.
சென்னை ஆல்பர்ட் மற்றும் தலைநகரின் மற்ற ஓரிரு திரையரங்குகளைத் தவிர கிட்டத் தட்ட அனைத்துத் திரையரங்குகளிலுருந்தும் ரசிகர்கள் மற்றும் திரையரங்க நிர்வாகம் அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒரே குரலாய் ஒலித்த விஷயம் –
படத்தின் பிரதி சரியில்லை.
இதற்கா நாம் இவ்வளவு உழைத்தோம் என்று ரசிகர்கள் உள்ளக் குமுறலோடு இருக்க, பல திரையரங்குகளில் பிரதி சரியில்லாத காரணத்தால் எடுக்கப் படும் சூழல் உருவாகி விட்டது. திரையரங்குகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கென்று தனி தர நிர்ணயம் உள்ளது. மக்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. காரணம் என்ன தான் இருந்தாலும் தரக் குறைவான பிரதியாகத் திரையிடப் பட்டால் அவர்கள் மறு முறை வரத் தயங்குவர்.
இதற்கு என்ன காரணம்
நல்ல வரவேற்பிருந்தும் மேலும் பலர் ஆவலுடன் வரக் காத்திருந்தும் திரையரங்குகளில் படத்தை எடுக்க யார் காரணம். இவ்வளவு பெரிய படத்தை இன்னும் கவனத்தோடு செதுக்கி நல்ல தரத்துடன் வெளியீடு செய்திருந்தால் கர்ணனை விட பல மடங்கு வெற்றியைப் பெற்றிருக்கும்.
நடிகர் திலகத்தின் படங்கள் பொன் முட்டையிடும் வாத்துக்களாய் இருப்பதை வியாபார நோக்கில் அணுகி, ரசிகர்களின் பலத்தையும் அல்லது பலவீனத்தையும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களை என்ன சொல்வது. இனிமேல் நடிகர் திலகத்தின் படம் மட்டுமல்ல, எந்த பழைய படமாக இருந்தாலும் திரையரங்கு நிர்வாகத்தினர் உடனடியாக சம்மதிக்கத் தயங்குவர் அல்லவா.
இனிமேல் படத்தின் பிரதியின் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். இதற்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யத் தயங்க மாட்டார்கள்.
இந்த மன வருத்தத்தை அடுத்த வெளியிடாக அமைய விருக்கும் பாச மலர் நிச்சயம் போக்கும் என நம்புவோம்.
யாரையும் சுட்டிக் காட்டி அல்ல இப் பதிவு. நம் அனைவரின் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.
sivaji fans joy at coimbatore
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rbecsQTx4mc
ரசிக வேந்தர் சார்,
ஒன்றும் சொல்வதற்கில்லை. விதியைத் தான் நொந்து கொள்ள வேண்டும். அனைவரது உழைப்பும் விழலுக்கிழைத்த நீராகி விட்டது.
வருத்தத்துடன்
மதுரை நகர் வீதியிலே மாமன்னனின் வசந்த மாளிகை
மக்கள் நெஞ்செல்லாம் அவருடைய ஆளுகை
கொண்டாட்டங்களை இங்கே பகிர்ந்து கொண்டு
நம்மை மகிழ்வூட்டுவது
வாசுதேவனாரின் திருக்கை
நன்றி சார், இலவசமாக மதுரை நகரை சுற்றிப் பார்க்க வைத்தமைக்காக...
எங்கெங்கு காணிணும் மாளிகையடா... என கூற வைக்கிறது தங்களுடைய நிழற்படங்கள்.
தங்களுக்கும் தங்களுக்கு இவற்றை அனுப்பி வைத்த அன்பருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
ஒளிப்படத்தின் கோளாறு மட்டுமல்ல , பின்னணி இசையையும் மாற்றுகிறேன் பேர்வழி என கெடுத்து வைத்திருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார் .
வசந்தமாளிகை வழக்கமான பிரிண்டே நல்லாத் தானே இருக்கும் . பின்னர் ஏன் Restoration என்ற பெயரில் இப்படி கெடுத்து வைக்கிறார்கள்?
10-3-2013 சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடந்த 'வசந்த மாளிகை' உற்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதி தங்கள் முன் விடியோவாக. நம் இதய தெய்வத்திற்கு மாலைகள் ஊர்வலமாக எடுத்து வரும் காட்சிகளும், ஊர்வலத்தில் ரசிகர்களின் உற்சாக நடனங்களும். கண்டு மகிழுங்கள். இதய தெய்வத்தின் புகழ் பாடுங்கள்.
http://www.youtube.com/watch?v=HDht5LxmRsM&feature=player_detailpage
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks to Vasu sir
for your commitment to bring Madurai VM celebration and posters photos. So colourful and having complete satisfaction to see these posters and feel like been in Madurai.
Thanks again.
Cheers,
Sathish
ஒரே சமயத்தில் கடலூரிலும், மதுரையிலும் சென்னையிலும் நம்மை உலா வர வைக்க வாசு சார் ஒருவரால் மட்டும் தான் முடியும்...
சூப்பர் சார் ....
கலக்குங்க...
டியர் ஜோ சார்,
சினிமாஸ்கோப்பில் Restoration செய்யும்போது காட்சிகளின் resolution elaborate ஆகும் போது குவாலிட்டி அடிபட்டுப் போகாமல் கவனமாக கையாள வேண்டும். அதுமட்டுமல்ல... நிறைய இடங்களில் தலைப்பகுதி horizontal position இல் மேற்புறத்திலும் சரி, கீழும் சரி... வெட்டப்பட்டு அதாவது தலைபகுதி கட்டாகி பார்க்கவே என்னவோ போல் இருக்கிறது. ஆடியோ seperation அறவே இல்லை. 2.1 channel இல் கூட நன்றாக இசை பிரியும். ஆடியோ பிரியவே இல்லை.
ஈஸ்ட்மென் கலரில் நம் கண்களை காந்தமாய் இழுத்த காவியம் இப்போது வெளுத்துப் போய் நம்மை வெறுத்துப் போ என்கிறது. வசந்தமாளிகையை நடிகர் திலகம் வாணிஸ்ரீக்கு சுற்றிக்காட்டி பேசும் போது தலைவரும் வாணிஸ்ரீயும் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது. எவ்வளவு முக்கியமான சீன் அது! வெறும் வசனம் மட்டுமே காதில் விழுகிறது. வெளுத்துப் போன நிறங்களில் காட்சிகள் தெரிகின்றன. காட்சிகளின் போது குறிப்பாக இடது புறத்தில் ரவுண்ட் வடிவில் ஒரு வெள்ளை வட்டம் வந்து தெரிந்து உயிரை வாங்குகிறது. ஒரு சில இடங்களில் காட்சிகள் அப்படியே மழுங்கி அப்புறம் கொஞ்சம் தெளிவாகின்றன.
இத்தனைக்கும் ஆல்பர்ட் திரையரங்கிற்காக வேண்டி சில காட்சிகள் மீண்டும் ஓரளவிற்கு சரி பார்க்கப்பட்டதாக சொல்கிறார்கள். சண்டே அன்று பார்க்கும் போது பெட்டராகத் தான் இருந்தது. பாடல் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. ஆனால் கலர்புல்லாக இல்லை.
பேசாமல் 35mm இலேயே release செய்திருக்கலாம் என்று பலபேர் கூறுவதைக் கேட்க முடிந்தது. வண்ணக் கலவை அருமையாக இருந்திருக்கும்.
எனக்கென்னவோ Restoration என்று ஒன்று நடக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 35mm film சினிமாஸ்கோப்பில் மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவே! ஒலி மாற்றமெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை போல் இருக்கிறது.
Restoration என்பது குறைந்த பட்சம் ஒரு முப்பது ஆண்டுகளாவது மறு வெளியீடுகளில் கை வைக்காமல் திரும்ப திரும்ப ரிலீஸ் செய்ய வைப்பதற்காகத்தான். Restoration செய்யும் நோக்கமும் நம் தலைமுறை வரையிலாவது நாம் அடிக்கடி கண்டு களிக்க ஏதுவாக இருப்பதற்காகத்தான்.
ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரேஞ்சுக்கு இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. perfection என்பது இந்த மாதிரிப் படங்களுக்கு மிக மிக அவசியம். அதை உணர்ந்து வெளியிட்ட மாதிரி தெரியவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அத்துணை சிவாஜி ரசிகர்களும், ஏன் பொது மக்களும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி இருப்பது தெரிகிறது. பல பேருடைய உழைப்பு சில பேருடைய அலட்சியத்தினால் வீணடிக்கப்பட்டிருகிறது. கர்ணன் பெற்ற வெற்றியை வசந்த மாளிகை ஏன் பெறவில்லை என்ற கேள்வி எழுந்தால் எப்படி விடை சொல்வது என்று குழம்பிப் போய் நிற்கிறோம். திருவிளையாடல் மிக அருமையாக Restoration செய்யப்பட்டு இறுதியில் விநியோக சட்ட சிக்கல்களினால் நம கண்ணெதிரிலேயே சின்னா பின்னமானது. அந்த அதிர்ச்சியை வசந்த மாளிகை மூலம் மீட்டுத் தருவார்கள் என்று ஆசையாய் இருந்தோம். அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ. இனி ஆண்டவன் விட்ட வழி.
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.
சதீஷ் சார்,
போதுமா... இன்னும் இருக்கிறதா? அடேயப்பா!... இத்தனை நன்றிகளா! அத்தனை நன்றிகளுக்கும் சேர்த்து என் அன்பு நன்றிகள்.
வாசுதேவன் சார்,
விளக்கத்துக்கு நன்றி . சினிமாஸ்கோப்-ல இருந்தா தான் பார்ப்போம் -ன்னு யாரும் சொல்லமாட்டார்கள் ..சினிமாச்கோப் செய்வதகா இருந்தால் உருப்படியாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் சினிமாஸ்கோப் இல்லாமலேயே நல்ல பிரிண்ட் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும் .
நீங்கள் சொன்னது போல கர்ணன் போல வசந்தமாளிகை ஏன் போகவில்லை என குறை சொல்ல வாய்ப்புக்கு காத்திருப்பவர்கள் மகிழும் வகையில் இதை வெளியிட்டவர்கள் உண்மையிலேயே எதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார்கள் என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது
Here, we must give credit to Mr Chockalingam of Divya Films for his
meticulous work and planning in promoting the product of Karnan.
As the final product is also good and the general public given a
overwhelming response to his product.
Atleast now one must take extra effort in promoting our NT Films
in DTS format.
டியர் ஜோ சார்,
தாங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது. சினிமாஸ்கோப்பில் இருந்தால் தான் பார்ப்போம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது ஏற்கக் கூடிய விஷயம் தான். என்றாலும் நாளுக்கு நாள் அடுத்த பரிணாமத்தை நோக்கிச் செல்லும் விஞ்ஞான யுகத்தில் 35 எம்எம் பார்ப்பதே அரியதாகி விடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும் அடிப்படைக் காரணமாய் சொல்லுவது நல்ல மூலப் பிரதி இல்லை என்பதே. அதுவும் பல பழைய திரைப்படங்களின் நெகடிவ்கள் அழிந்து போயுள்ளதாய் வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளன. பல பழைய மற்ற மொழிப் படங்கள் அவரவர் ஊர்களில் நல்ல நிலையில் பராமரிக்கப் படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது பழைய தமிழ்த் திரைப் படங்கள் தான். பராமரிப்பின்றி நெகடிவ் பாழாகிப் போனதற்கு யாரைக் குற்றம் சொல்லுவது. அந்த நெகடிவிலிருந்து தான் பாஸிடிவ் பிரதிகள் எடுக்கப் பட வேண்டும். இந்நிலையில் மீண்டும் பிரிண்ட் எடுப்பது மிகவும் கஷ்டம்.Quote:
சினிமாஸ்கோப்-ல இருந்தா தான் பார்ப்போம் -ன்னு யாரும் சொல்லமாட்டார்கள் ..சினிமாச்கோப் செய்வதகா இருந்தால் உருப்படியாக செய்ய வேண்டும் .இல்லையென்றால் சினிமாஸ்கோப் இல்லாமலேயே நல்ல பிரிண்ட் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டும் .
அப்படி பழைய நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து நல்ல நிலையில் இருக்குமானால், நெகடிவ் இல்லாத நிலையில் கூட அந்த நல்ல பிரதியிலிருந்து நாம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப மாற்ற முடியும். ஆனால் அதற்குத் தேவை நல்ல உழைப்பு, நிதானமான செயலாற்றல், பொறுமை, தேவையான அளவிற்கு முதலீடு போன்ற காரணிகள். இவையெல்லாம் இருந்ததால் தான் சொக்கலிங்கம் அவர்களிடமிருந்து கர்ணன் போன்றதொரு complete product நமக்குக் கிடைத்தது.
இனி என்ன செய்யலாம் அல்லது செய்ய வேண்டும்
1. மூலப் பிரதியின் தன்மை மிக உயர்ந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்த பிறகே முயற்சியில் ஈடுபட வேண்டும்.
2. பின்னணி இசை சேர்ப்பு தேவையில்லை. திருவிளையாடல் படத்தை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு சிறு இசைக் கருவி கூட புதியதாக சேர்க்காமல் இருக்கும் இசையினையே மிக அற்புதமாக செய்திருந்தார் திரு பரமசிவம். இதற்காக அவருடைய உழைப்பு பிரமிக்கத் தக்கது. இதற்கான தொழில் நுட்பம் நிச்சயம் உள்ளது. இதனை லண்டனில் சென்று செய்து வந்துள்ளார் அவர். அதே போல் ஒளித்தரம் பிரமிக்கத் தக்க அளவில் அமைக்கப் பட்டிருந்தது. இதற்கான தொழில் நுட்பத்தினை அவர் ஜெர்மனியில் செய்துள்ளதாகவும் சேதி உண்டு.
இன்றைய நிலவரத்தில் நவீன தொழில் நுட்ப மாக்குதலுக்கு சிறந்த உதாரணமாக சொல்ல வேண்டுமானால் திருவிளையாடல் திரைப்படத்தைத் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஈடு இணை இல்லை.
திரு ஏபி.என். அவர்களின் புதல்வர் எந்த முறையில் நவீன மயமாக்குதலை செய்தார் என்பதை தெரிந்து கொண்டு அதனடிப்படையில் இனி வரும் காலங்களில் செய்யலாம். அப்படி இல்லையென்றாலும் கூட நம் சென்னை மாநகரிலேயே இதனை மிகவும் சிறந்த முறையில் செய்யலாம். நம்முடைய தொழில் நுட்பக் கலைஞர்கள் உலகத்தரத்தைத் தர வல்லவர்கள். இதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம். பல ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கே நவீனமயமாக்கலில் கிராபிக்ஸ் செய்யப் பட்டுள்ளன.
மனமும் பணமும் சேர்ந்தால் ஒவ்வொரு பழைய படத்தையும் நாம் திருவிளையாடல் தரத்திற்குக் கொண்டு செல்லலாம்.
நவீன மயமாக்குதல் வரவேற்கத் தக்கது தான். ஆனால் அது தொழில் நுட்ப ரீதியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர படைப்பில் குறுக்கிடக் கூடாது. i.e. there should not be any intervention in the content. குறிப்பாக இசையில் அல்லது பாடல்களில் ஏற்கெனவே இருப்பதின் தரத்தை உயர்த்தலாமே தவிர எக்காரணம் கொண்டும் புதியதாக இசைக் கருவிகளின் ஒலிகள் இணைக்கப் படக் கூடாது.
சரி .இப்போது நிலவரம் என்ன? சென்னை , மதுரை போன்ற நகரங்களில் தொடர்கிறதா இல்லையா?
ஜோ சார்,
இன்னும் சரியான செய்திகள் தெரியவில்லை.
Really shocking and heart paining on reading the posts of Raghavendar sir, Neyveli Vasudevan sir and Joe sir..... about the quality of the print of Vasandha Maaligai.
When we were watching VM on Sunday evening in LCD tv with a very excellent print (same quality print on the day of September 29, 1972), me and my friends were talking that, our fans in Tamilnadu are enjoying technically advanced print than this. But we never expected such a pathetic situation there.
Still surprise, when the negative is in a worst condition, how the DVDs are coming in a verygood quality. Even if you watch the quality of songs often telecasting in tv channels they are very very good and clear in quality. Particularly 'oru kinnaththai yendhugiren', 'kudimagane' and 'mayakkam enna' are nearly shown everyday, and they are so nice.
As Mr. Joe said, it is not necessary to spoil the movies in tha name of degitalization and restoration. What fans and public expect is just brand new prints with good quality of clear color and sound, thats all.
What a disappointment to the fans, who worked hard for several days by expecting a great run.
திரு.வாசுதேவன் சார்,
வசந்தமாளிகை மதுரை கொண்டாட்ட பதிவுகள் அருமை. நன்றி.
திரு ராகவேந்திரன் / திரு.வாசுதேவன் / திரு.ஜோ / திரு.ஆதிராம் மற்றும் நண்பர்கள்
தெரிவித்த வசந்தமாளிகை மறுவெளியீடு குறித்த கருத்துப் பதிவுகளையொத்தே எனது உணர்வும் உள்ளது. அடுத்தடுத்த வெளியீடுகளாவது நமது குறையைப் போக்கிடும் விதத்தில் அமையும் என்று நம்புவோம்.
Banners in Ambattur Rakki
http://i1234.photobucket.com/albums/...psefd29d17.jpg
http://i1234.photobucket.com/albums/...psa482e348.jpg
[QUOTE=KCSHEKAR;1025857]திரு ராகவேந்திரன் / திரு.வாசுதேவன் / திரு.ஜோ / திரு.ஆதிராம் மற்றும் நண்பர்கள்
தெரிவித்த வசந்தமாளிகை மறுவெளியீடு குறித்த கருத்துப் பதிவுகளையொத்தே எனது உணர்வும் உள்ளது. அடுத்தடுத்த வெளியீடுகளாவது நமது குறையைப் போக்கிடும் விதத்தில் அமையும் என்று நம்புவோம்.[/
We fully endorse your views kc sir and raghavendran neatly written well about the shortcomings in the NT.COM cover itself. hope these things will not get repeated in the pictures those are getting ready for release. then only we can see more successful films like KARNAN
MANY MANY THANKS FOR VASU SIR for wonderful coverage.
today evening show around 200 tikets gone for VM
even new latest films are not nearing this mark on a week day evening show.
Inspite of shortcomings the movie is running successfully.
It is a great news.
Raghavendhar sir, Vasudevan sir (x2), Chandrasekhar sir and other friends,
Please give a brief satement about Vasandha Maaligai, how it is going in Chennai theatres and throughout Tamil Nadu.
We hope it is going well.
pl confirm.
For VM, the box office is rather disappointing compared to Karnan. Hats off to Divya Films Chokkalingam Sir for his meticulous planning and a systematic execution of the project with apt usage of all possible media, motivating the audience thronging to the theaters. VM was expected to surpass Karnan in terms of film quality and sound effects. While the DVDs of VM are excellent in clarity and audio, this theatre print is somewhat not upto the mark in my personal opinion. Fans suggestions in the light of value addition to VM sothat the younger generation can also have the same impact on viewing, were not given due respect. If the same trend continues with the upcoming rereleases too, ....... please let us not give way for erosion of our NT's name and fame by improper presentations for which the fan clubs and fans have to spend a lot of time, energy and money too towards getting satisfaction. It is time our Sivaji Peravai and ardent followers of NT regularized a systematic and sequential rerelease of NT classics without giving chance to feed bad mouths that are waiting on the anvil.
டியர் சந்திரசேகரன் சார்,
நன்றி! சினிக்கூத்து வசந்தமாளிகை பதிவிற்கு என் நன்றிகள்.
வசந்த மாளிகை கற்றுக் கொடுக்கும் பாடம்.
கர்ணனின் அசுர வெற்றிக்குப் பின் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த அனைத்து அம்சங்களும் அமைந்த அற்புதமான 'திருவிளையாடல்' தித்திக்கும் விருந்தாய் நமக்கு கிடைக்க மாட்டாமல் போனது. சரியான திட்டமிடாமை, விநியோக உரிமை சிக்கல்கள், வழக்கு என்ற பல்வேறு சோதனைகளுக்குள்ளாகி குடத்திலிட்ட விளக்காய் திருவிளையாடல் ஒளி குன்றியது. சரி என்று நாம் ஏற்றுக்கொண்ட பின்பு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்படியாக வசந்தமாளிகை வெளியீடு விளம்பரம் வந்தது. விளம்பரம் வந்து படத்திற்கான ஆக்கப் பணிகள் நடைபெற்று பின் சற்று பின்தங்கி சென்சார் போர்டு சென்று பிறகு திரைக்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் அபிமான வசந்த மாளிகையை வரவேற்க தயாரானார்கள். அதற்கு கால அவகாசம் போதுமானதாகவே இருந்தது. இந்த நேரங்களில் ரசிகர்கள் வசந்த மாளிகைக்காக தன் முழு நேரத்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார்கள். வசந்தமாளிகையை வரவேற்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள், போஸ்ட்டர்கள், மாலைகள், தோரணங்கள், அன்னதானம், திரையரங்கு அலங்காரங்கள், மலர் வெளியீடுகள், சுவர் விளம்பரங்கள் என்று தங்கள் சொந்த வீட்டு விசேஷங்களைப் போல செலவுகள் செய்து ரெடியானார்கள். நம் ரசிகர்களின் நிலைமை நாம் நன்கறிந்ததே! எந்த பக்க பலமும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற அந்த அற்புத மந்திர சொல்லிக்கு மயங்கி நம் தெய்வத்தை 'ஆனந்த்' தமாக தரிசிக்க தரித்திரத்திலும் சொந்த செலவுகள் செய்தார்கள். சிலர் வீட்டில் உள்ள நகைகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்தார்கள். சிலர் கடன் உடன் பட்டு வசந்த மாளிகைக்கு தோரணம் அமைத்தார்கள். சிலர் வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்தார்கள். ஒவ்வொரு ரசிகரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்த contribution ஐ தந்தார்கள். சிலர் வீட்டுச் செலவுகளைக் கூட சுருக்கி சுயதேவைகளுக்காக வைத்திருந்த தொகைகளைக்கூட செலவு செய்தார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு நடிகர் திலகத்தின் மீது சுயநலமில்லாத விசுவாசம். அன்பு...வெறி...அதுமட்டுமல்ல... கர்ணனின் மிகப்பெரிய வெற்றி அவர்களின் மேலான உற்சாகத்திற்கு முழு காரணமாய் அமைந்தது.
ஆனால் நடந்தது என்ன?
சற்று பின்னோக்கிப் பார்ப்போம். நடிகர் திலகம் ஒர் அட்சய பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாமல் தந்து கொண்டே இருக்கும் பாத்திரம். அன்று தொட்டு இன்று வரை அவர் படங்களினால் லாபங்களைக் குவித்தவர் பலர். இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் மனசாட்சிக்கு விரோதமாய் பலர் உண்மையை மறைத்ததுண்டு... அதை விட்டு விடுவோம்.
நடிகர் திலகத்தின் படங்கள் சிறிது காலங்களாக அவ்வளவாக வெளிவராத நிலையில் பல ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'புதிய பறவை' புத்தம் புதிய காப்பியாக சென்னை சாந்தியில் திரையிடப்பட்டு அமோக வெற்றி அடைந்தது. வசூலில் பிரளயம் செய்தது. ஆனால் சென்னையில் மட்டுமே வெளியானது. சென்னை காணாத அளப்ப்பரையைக் கண்டது. நடிகர் திலகத்தின் அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது புதிய பறவை.
தொடர்ந்து சாந்தியில் ராஜபாரட் ரங்கதுரை, திருவருட்செல்வர், கௌரவம், மன்னவன் வந்தானடி என்று தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டு களைகட்ட ஆரம்பித்தது. இத்தனைக்கும் பட பிரிண்ட்டுகள் சுமார் ரகம்தான். சாந்தியில் மட்டுமல்லாது சென்னையின் பிற அரங்கங்களிலும் சொர்க்கம், தங்கப்பதக்கம் என்று படங்கள் வெளியாயின.
பட பிரிண்ட்டுகள் சுமாராக இருந்தும் கூட இவையெல்லாம் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டித் தந்தன. இந்தத் தொடர் வெற்றிகள் கர்ணன் என்ற அற்புத காவியத்தை சொக்கலிங்கம் அவர்கள் டிஜிட்டலில் Restoration செய்யுமளவிற்கு காரணிகளாய் அமைந்தது.
ஆயிற்று... கர்ணன் வெளிவந்து ஒரு புது சரித்திரத்தையே படைத்தது. சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வழக்கம் போல நடிகர் திலகத்தால் தொடங்கப்பட்டது. பழைய படங்களை டிஜிட்டலில் Restoration செய்தால் பணம் பார்த்து விடலாம் என்ற எண்ணம் சிலர் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அதில் தவறேதும் இல்லை.. இது வியாபாரம். யாரும் எதையும் செய்யலாம். நடிகர் திலகத்தின் மதிப்பு, சந்தையில் அவரது படங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆயிரங்கள் என்று சொல்லிக் கொண்டு வியாபாரம் பேசப்பட்ட படங்கள் இப்போது லட்சங்களுக்கு எகிற ஆரம்பித்தன.
கர்ணனை சொக்கலிங்கம் Restoration செய்தார் என்றால் அவர் உழைப்பு அசாத்தியமானது. சரியான திட்டமிடுதலை அவர் மேற்கொண்டார். அதற்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். அனைத்து ரசிகர்களின் கருத்துக்களை அவர் முதலில் கேட்டுக் கொண்டார். அவர் யாரையும் விட்டு வைக்கவில்லை. தன் வாழ்நாள் கனவுப்படமாக கர்ணனை கையில் எடுத்துக் கொண்டார். Restoration க்கு மும்பை வரை அலையாய் அலைந்தார். குவாலிட்டி முக்கியம் என்பதில் உறுதியாய் இருந்தார். Restoration செய்தவரை பலருக்கும் படத்தைப் போட்டுக் காட்டி நிறைகுறைகளை கேட்டு அறிந்து கொண்டார். முடிந்தவரை குறைகளை நிவர்த்தியும் செய்தார்.
படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையே உண்டாக்கி விட்டது. வியாபார நோக்கத்திற்காக என்று மட்டுமல்லாமல் ஒரு லட்சிய வெறியோடு இன்றைய சமூகத்திற்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு படத்தை எவ்வாறு சேர்க்க வேண்டுமோ அவ்வாறு கொண்டு சேர்த்தார் சொக்கலிங்கம். அதில் மாபெரும் வெற்றியுமைடைந்தார். சாதாரண விநியோகஸ்தர் சொக்கலிங்கம் 'கர்ணன்' சொக்கலிங்கமானார். நண்டு சிண்டெல்லாம் கர்ணன் சொக்கலிங்கம் என்று கூறுமளவிற்கு பெரும் பெயரை,புகழை அவர் பட்டி தொட்டியெங்கும் அடைந்தார். ஏன்? செய்த தொழிலில் ஒரு முழு ஈடுபாடு...ஒரு perfection, dedication அவரிடம் நிச்சயமாக இருந்தது.
ஆனால் வசந்த மாளிகையில் நடந்தது என்ன? இதற்கும் கர்ணனுக்குப் பிறகு வெளியான படம் இது. (முதல் வெளியீட்டிலும் சரி...மறு வெளியீட்டிலும் சரி)... கர்ணனே சிறந்த முறையில் restore செய்யப்பட்டிருக்கும் போது வசந்தமாளிகை அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றால் துரதிருஷ்டவசமாக அது நடக்காமல் போனது.
இது யாருடைய தவறு?
படத்தின் மீது தவறா?... காலகாலமாய் கற்பகவிருட்சம் போல கொட்டிக் கொடுத்த படம். வசூலில் ஒவ்வொரு வெலியீடுகளிலும் பிரளயம் செய்து காட்டிய படம். எனவே படத்தின் மீது குற்றமில்லை.
சரி... நடிகர் திலகத்தின் மீது குற்றமா?...நினைக்கவே முடியாது... ஏற்றிவிட்ட ஏணியை யாரும் குற்றம் சொல்ல முடியுமா... அந்த வள்ளலுக்கு பிறரை வாழச் செய்து பார்த்துதான் பழக்கம்....அவர்தான் மூலாதாரம், அஸ்திவாரம் எல்லாம்.
சரி... ரசிகர்கள் மீது குற்றமா?... கந்தல் பிரிண்ட்டாக இருந்தாலும் பலதடவை பார்த்து தியேட்டர்காரர்களின் கல்லாவை ரொப்புவோர்கள் நம் ஆட்கள். நான் முதலில் குறிப்பிட்டவாறு எந்த ஆதரவும் இன்றி எவ்வளவு வறுமையில் வாடினாலும் நடிகர் திலகத்திற்காக தன் சொந்த பணத்தை செலவு செய்து அவரை அகத்திலும், புறத்திலும் அழகு பார்ப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீதும் குற்றம் இல்லை...
சரி... பொது மக்களின் குற்றமா! அதுவும் இருக்க முடியாது... ரசிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாகி விட முடியாது. நடிகர் திலகம் ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு வருடங்களிலும் சராசரி ஐந்து அல்லது அதற்கு மேல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பொது மக்களும் அவற்றை சலிக்காமல் கண்டு களித்து அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்கள். அது மட்டுமல்லாமல் கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறங்கள் வரையிலும் பாகுபாடு, வேறுபாடின்றி மறு வெளியீடு நடிகர் திலகத்தின் படங்களையும் வசூல் மழை பொழிய வைத்த பெருமைக்குரியவர்கள். கர்ணனுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை மறக்க முடியுமா?... நல்ல விஷயங்கள் எது நடந்தாலும் அதுவும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏகோபித்த வரவேற்பை அளிப்பவர்கள் அவர்கள்.. அவர்கள் மீதும் குற்றமில்லை.
சரி திரையரங்கு உரிமையாளர்கள் மேல் குற்றமா? எப்படி இருக்க முடியும்?...நடிகர் திலகத்தின் படங்களுக்கு முதலிடம் கொடுத்து ஓட்டுபவர்கள் அவர்கள்தானே! ரசிகர்களின் அன்பு எல்லைமீறும் போது கூட பொறுமை காத்து நம் மன்னவர் class audience ஐ பெருமளவு பெற்றிருப்பதை மனதில் வைத்து மல்டி காம்ப்ளெக்ஸ் திரையரங்குகளை உற்சாகத்துடன் அளித்து தாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் களிப்படைய செய்தவர்கள்
அவர்கள்தானே!
சரி... யார் மீது குற்றம் சொல்வது?
'வசந்த மாளிகை' நம்மை சற்று வாடிப்போகச் செய்ததற்கு என்னென்ன காரணங்கள்?
1.முதலில் மதர் பிரிண்ட் என்பதை நன்றாகத் தேடி ஆராய்ந்து தெரிவு செய்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
2. Restoration செய்வதா வேண்டாமா என்று தெளிவாக முடிவெடுத்திருக்க வேண்டும். புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் கர்ணனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்க வேண்டாமே!
3. அருமை நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல சினிமாஸ்கோப்போ அல்லது டிஜிட்டல் version ஒ தான் வேண்டும் என்று யாரும் அடம் பிடிக்க வில்லை. ஜாங்கிரி நன்றாக இருப்பதனால் தங்கத்தட்டில்தான் வைத்து திங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சாதாரண இலையிலும் வைத்து சாப்பிடலாம். அதே இன்பம் அதே சுவை தான் கிடைக்கும். இங்கு அப்படியல்ல... ஜாங்கிரியை கெட வைத்து பந்தி பரிமாரியிருக்கிறார்கள். 35 mm மிலேயே புத்தம் புதிய பாலியெஸ்டர் ப்ரிண்ட்டாக வெளியிட்டிருக்கலாம். கண்டிப்பாக வெற்றி மகுடம் தரித்திருக்கும்.
4. அப்படியே இல்லாமல் நான் Restoration செய்துதான் வெளியிடுவேன் என்று தீர்மானித்திருந்தால் அதற்கான முழு முயற்சில் முழுமனதாக ஈடுபட்டிருக்க வேண்டும். (உதாரணம் சொக்கலிங்கம் அவர்கள்) அப்படி எதுவும் நடந்ததாகவே தெரிய வில்லை. யார் யாரை வைத்து Restoration செய்தார்கள்... பங்கு கொண்ட technical team எது?... சென்னையில் செய்தார்களா அல்லது மும்பை போன்ற வெளியிடங்களில் செய்தார்களா?(திருவிளையாடல் லண்டனில் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியுமே!)... இசைச் சேர்ப்பு அல்லது கோர்ப்பு நடந்ததா?...ஆடியோ seperation செய்யப் பட்டதா?... ஆடியோ டிஜிட்டல் செய்யப்பட்டதா?
5.சொக்கலிங்கம் அவர்கள் கர்ணனுக்காக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்து டிஜிட்டலாக்கினார் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. ஒரு சில லட்சங்கள் கூடவோ குறைச்சலாகவோ இருந்திருக்கலாம். ஆனால் பெருந்தொகை செலவிடப்பட்டது உண்மை. அப்படி ஒரு பெருந்தொகை இந்த காஸ்ட்லியான படத்திற்கு செலவழிக்கப்பட்டதா? அதுவும் இந்தப் படத்திற்கு ரிச்னெஸ் அவசியம் தேவை.
6. கர்ணன் டிஜிட்டல் செய்ய ஏறக்குறைய ஒரு வருடங்கள் எடுத்துக் கொள்ளபப்பட்டது. ஒவ்வொரு பிரேமாக சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் photoshop இல் மெருகேற்றப்பட்டு இசைச் சேர்ப்புகள் மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தரம் மெருகு குலையாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் வசந்த மாளிகைக்கு போதிய அவகாச நேரங்கள் எடுத்துக் கொண்டார்களா? ஏதோ அவசர கோலம் அள்ளித் தெளித்தாற் போன்று வேலைகள் நடந்திருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவும் யாருக்கும் வெளியே தெரியாமலேயே.
7.Restore செய்த வகையில் முக்கியமானவர்களுக்கு, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டதா? அவர்களின் திருப்தியான ஒப்புதல் கிடைத்ததா? அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்து மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியும்.
8.எல்லாமே ரகசியமாத்தான் நடந்து அரங்கேறின. தங்களுடைய சுய லாபம் மட்டுமல்ல பல பேருடைய கௌரவம் குறிப்பாக லட்சக்கணக்கான ரசிகர்களின் கௌரவம் இதில் பாதிக்கப் படுமே என்று எண்ணிப் பார்க்கப்பட்டதா.. ஏனென்றால் என்னதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், படத்தை பொது மக்களிடம் மிகப் பெரிய அளவில் அதிலும் குறிப்பாக வசந்த மாளிகையை கொண்டு சேர்த்ததில் ரசிகர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது. பலவித அதுவும் ஆளுயர பேனர்கள், கட்.அவுட்டுகள், பந்தல்கள், நாதஸ்வரம், அன்னதானம், நற்பணிகள் என்று சொந்தக் காசை இழந்து பரிதாபமாய் நிர்க்கதியாய் நிற்கும் இவர்களுக்கு யார் ஆறுதல்? (எந்த விதமான பின்புலமும் இல்லாமல் நடிகர் திலகமே உயிர் மூச்செனக் கொண்ட இந்த அப்பாவிகளுக்கு)
9. அதைக் கூட ரசிகன் பெரிதாக எண்ண மாட்டான். காசு இன்று போகும்...நாளை வரும்... ஆனால் கர்ணனை மிஞ்சும் என்று நம்பிக்கை வைத்தானே... மனக்கோட்டை கட்டினானே! அந்த நம்பிக்கையில் மண் அள்ளிக் கொட்டியதற்கு யார் காரணம்? காலம் முழுதும் அண்ணன் அண்ணன் என உயிரை விடுகிறானே... அவனுடைய கள்ளமில்லா அன்புக்கு யார் பதில் சொல்வது?
10. தவறேதும் செய்யாமல் இன்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறானே ரசிகன் ! இவனுக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்? எப்போது எப்போது என்று எள்ளி நகையாடக் காத்திருக்கும் சிலர் விஷத்தைக் கக்க காத்திருப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்த காரணகர்த்தா யார்?
இத்தனை கேள்விகளும் வாசுதேவன் மனதில் மட்டுமல்ல... அத்துணை பேர் நெஞ்சிலும் தற்சமயம் குடிகொண்டிருக்கும் கேள்விகள். ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இனி நாம்தான் உஷாராக வேண்டும்.
வேதனையுடன்
வாசுதேவன் என்ற சாதாரண ரசிகன்.