courtesy- nadigarthilagam .com
http://i1146.photobucket.com/albums/...ps30e6e04e.jpg
Printable View
courtesy- nadigarthilagam .com
http://i1146.photobucket.com/albums/...ps30e6e04e.jpg
courtesy- pradeepbalu sir
http://youtu.be/oIFVcdYtTic
நிஜ அண்ணன் தங்கையை நிழலில் கொண்டு வந்து திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய 'என் தங்கை' திரைப்படத்தின் அபூர்வ பதிவுகளை வெளியிடும் திரு. செல்வகுமார் அவர்களுக்கும், தலைவரின் புகைப்படங்களை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக நிறைய நேரம் செலவு செய்து மிகவும் நேர்த்தியாக பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி...இவரது சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" திரைப்படத்தில் இடம் பெற்ற
பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
1. ஆண் - பெண் ஜோடிப்பாடல் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம் - கவலை தவிர்ந்தோம்
நாம் கவலை தவிர்ந்தோம்
2. குழுப்பாடல் : தீம் தன தீம் ! தன தீம் ! தீம் தன தீம்
அழகாய் பொம்மை வைத்தே -
கொலுவைச் சிங்காரித்தே
3. ஜோடிப்பாடல் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே
ஆறு வந்து கடலில் சேருதே - வாலிபம் போலே
ஆசை வளருதே.
4. தனித்த குரலில் பெண் பாடல் : தீன தயாபரி தாயே ... அம்பா ... திருவாகும் உருவே
நீ அருள்வாய் தேவி ... மானிலமதில் நீயே கதி
5. நகைச்சுவை ஜோடிப் பாடல் : குட்லக் ! குட்லக் ! குட்லக் ! என் வாழ்விலே
(வசன நடை ) கட்டக் கந்தல் இல்லாத ஏழை
கஷ்டம் நீக்கும் , குபேரன் ஆக்கும்
6. தனித்த பெண் குரலில் சோகப்பாடல் : மீளா துயரமோ மாதா ... மனமிளகாதா
கண்களிரண்டும் இழந்தவன் பேதை
7. தனித்த குரலில் பெண் பாடல் : அன்னையே , அன்னையே , அன்னையே
அருள் தாரும் மேரி தாயே - ஊழ்வினையதாலே
நானே --- உள்ளம் உடைந்து நொந்தேன்
8. தனித்த குரலில் பெண் பாடல் : இன்பமே சிறுதும் அறியாத பெண் ஜன்மம் (பல்லவி)
துன்பம் என் வாழ்வினில் இல்லாத நாளில்லை
பேதை யாது செய்வேன் கண்ணில்லாத (சரணம்)
9. ஜோடிப்பாடல் : என் இன்ப ஜோதியே ! உன் அன்புப் பார்வையால்
இன்பத்தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே
10. தனித்த குரலில் ஆண் பாடல் : வாழ்வதிலும், நலம் சூழ்வதிலும் புவி மக்களெல்லாம்
ஒப்புடையார் .. ஏழ்மையில் மக்களை தள்ளுவதோ !
11. பின்னணிப்பாட்டு : வறுமைப்புயலாலே துயரக்கடல் மேவும் (தொகையறா)
கருவிலே உருவான காயம் !
================================================== ====================================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி ஆர்
எங்கள் இறைவன்
பேரன்புக்குரிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்,
எப்பொழுதும் போல் புதுப்பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் மீண்டும் தாங்கள் பொன்மனச்செம்மல் Filmography திரியில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் குறித்த அரிய பதிவுகளை அளிக்கத் தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வெற்றியோடு தொடரட்டும் தங்களது திருப்பணியாகிய இந்தத் திரிப்பணி ! தங்களது சேவையாலும், ஏனைய அனைவரது பங்களிப்புகளாலும் இத்திரி ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கப் போவது திண்ணம்.
தற்போது இடம்பெற்றுவரும் "என் தங்கை" குறித்த தகவல்கள், நிழற்படங்கள் அசத்தல் ! பாசத்தைப் பொழியும் அண்ணனாக அண்ணல் எம்.ஜி.ஆர். அவர்கள் அருமையாக நடித்திருப்பார்.
"என் தங்கை" குறித்த தங்களது முதல் பதிவில், படத்தின் சிறப்பம்சம் என்கின்ற பகுதியில், தாங்கள் அளித்துள்ள சென்னை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரத்தில் சில சிறுதிருத்தங்கள்:
"என் தங்கை", 31.5.1952 சனிக்கிழமையன்று சென்னை மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் சித்ரா, பிராட்வே, சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 'சித்ரா'வில் 31.5.1952லிருந்து 6.8.1952 வரை 68 நாட்கள் ஓடியது. 7.8.1952 வியாழனன்று 'சித்ரா'வில் திலீப்குமார் நடித்த "ஆன்" ஹிந்தித் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வெளியானது. அதே போல், 'பிராட்வே'யில் 31.5.1952 தொடங்கி 14.8.1952 வரை 76 நாட்கள் ஓடியது. சுதந்திரத் திருநாளான 15.8.1952 வெள்ளியன்று 'பிராட்வே'யில் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்த விஜயா-வாஹினியின் ஹாஸ்யச் சித்திரமான "கல்யாணம் பண்ணிப்பார்" திரைப்படம் வெளியானது. 'சரஸ்வதி'யில் 100 நாள் ஓடியதா என்பது பற்றி ஆராய்ந்துதான் கூற வேண்டும். 'சரஸ்வதி'யில் அடுத்து வெளியான படம் பற்றிய தகவல் தற்பொழுது என்னிடம் இல்லை. சித்ரா, பிராட்வே அரங்குகளிலேயே 100 நாட்களை எட்டாதபோது 'சரஸ்வதி'யில் மட்டும் 100 நாட்கள் ஓடியிருக்க வாய்ப்புகள் இல்லை அல்லது மிகமிகக் குறைவு. மேலும். சித்ரா, பிராட்வே அரங்குகளில்கூட இடையில் வேறு ஏதாவது படம் வெளியானதா என்பது பற்றியும் தகவல்கள் இல்லை. எனவே ஓடிய நாட்களை அதிகபட்சம் ஓடிய நாட்களாகவே கொள்ள வேண்டும்.
ஆக, "என் தங்கை"யின் சென்னைப் புள்ளிவிவரம் (approx.):
சித்ரா - 68 நாட்கள் (அதிகபட்சம்)
பிராட்வே - 76 நாட்கள் (அதிகபட்சம்)
சரஸ்வதி - 100 நாட்களுக்கு குறைவாக (அதிகபட்சம்)
சென்னையைப் பொறுத்தவரை, "என் தங்கை" வர்த்தகரீதியாக வெற்றிப்படம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
அன்புடன்.
பம்மலார்.
I had watched En Thangai in Satellite TV in early 90s. I was very astonished on the story part. As there is no action scene for our Thalaivar. MGR had mentioned that the movie had a lucrative run and the producers (Asoka Pictures) had mailed him and praised about his performance in En Thangai. And further MGR states that this is the only movie and only producer to thank him after his commitment in his entire film career.
MGR attended the function in Trichy for its victory day and the photo was also publihsed in Olikirathu Urimaikural magazine.
ஒஹ்.....அப்படியா ! ஆச்சர்யமாக இருகிறதே சார் !
இரண்டு data வுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறதே ? இதில் எது சரி ...எது திருத்தப்படவேண்டியது ?
காரணம் prof அவர்கள் தகவல் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் அவர் prof . ஆராயாமல் வெளியிடமாட்டார் என்பது அனைவரது எண்ணம் நான் உட்பட..நீங்களும் அதே போல்தான் ...Encyclopaedia of film Data with related documents . நீங்களோ வெளிவந்த, எடுக்கப்பட்ட தேதிகளையும் அதற்க்கு பின்னர் வந்த படங்கள் பற்றிய தகவல்வரை வெளியிட்டுளீர்கள் ...ஒரே குழப்பம்...
எது எப்படியோ...தகவல் களஞ்சியம் தொடரட்டும்...அடுத்த பதிவுக்கு பதிவிறக்கம் செய்ய காத்திருக்கும் சுப்பு..!
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" படம் பற்றிய தகவல்
1. படம் வெளியான தேதி : 05-03-1953
2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஜுபிடர் பிக்சர்ஸ் & மேகலா பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : குமரன்
5. பாடல்கள் : மு கருணாநிதி
6. கதை வசனம் : மு கருணாநிதி
7. இசை அமைப்பு : சிதம்பரம் எஸ். ஜெயராமன்
8. இயக்குனர் : ஏ. காசிலிங்கம்
9. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : எம் ஜி சக்கரபாணி, பி. எஸ். வீரப்பா, எம். என். நம்பியார், எம். எம். ஏ. சின்னப்பா தேவர், வி. என். ஜானகி, பி. கே. சரஸ்வதி, எஸ். ஆர் ஜானகி, எம். எஸ். எஸ். பாக்கியம் உட்பட மற்றும் பலர்.
குறிப்பு : இத்திரைப்படம் காஷியின் "காதல் கண்ணீர்" என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
http://i42.tinypic.com/8xtvd5.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" திரைப்படத்தின் கதைச் சுருக்கம் :
நமக்காகப் பணி புரிய உலகிலே எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். அவர்களில் பலரை நாமே அழித்து விட்டோம். இந்தக் கொடுமைக்குப் " பிரயாச்சித்தமே" கிடையாதா ? உண்டு !இனியும் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபடக் கூடாது. அவர்கள் செத்தாலும் அவர்கள் கொள்கையை சாக விடக்கூடாது.
இந்த உண்மையையுரைக்கும் வாலிபனாகத்தான் குமரன் பகுத்தறிவுபுரியில் நடை போட்டான். மக்களை வாழ்விக்க எண்ணம் கொண்ட அந்த மறுமலர்ச்சியாளனின் வாழ்வு அவிழ்க்க முடியாத சிக்கலாயிருந்தது. அவன் ஆசைக் கோபுரத்துக்கு அடித்தளம் அமைக்க ஒரு அருமையான ஆதாரம் இருந்தது.
அதுதான் ஜமீன் சொத்துக்கு உயில் இந்த உயிலை மறைத்து விட்டு உப்பரிகையில் உலவினான் ஒரு உன்மத்தன். மலையப்பன் எனும் மனித மிருகம் உயிலைக் கைப்பற்றி சதி விளையாட்டுக்களில் மூளையை செலவிட்டான், ஞ்சீவி என்ற வைத்தியன். சஞ்சீவி ஒரு அழகான பெண்ணுக்கு தகப்பன். அந்த பெண் பிரேமாவை குமரனுக்கு மணம் செய்து வைத்து பிறகு உயிலையும் குமரனிடம் தந்து மகளை ஜாமீன்தாரிணியாக்க கனவு கண்டான் சஞ்சீவி. ஆனால், குமரனின் இதயங் கவர்ந்தவள் மீனா. அவள் மலையப்பனின் தங்கை.
குமரன், தனக்குச் சொந்தமான சொத்து ஒரு சூதுக்காரனால் சுருட்டிக் கொள்ளப்பட்டது என்பதை மரணப் படுக்கையில் விழுந்த மாதாவின் வாயிலாக அறிகிறான். மலையப்பனின் சூழ்ச்சியால் மாதாவைப் பறி கொடுத்த குமரன் சூழ் நிலையின் சாகசத்தால் மீனாவை சந்தேகிக்கிறான். வைத்தியனிடம் உயிலைப் பற்றிக் கேட்கிறான்.
"வழக்கு நடத்த பணம் தேடு, பிறகு உயிலைத் தேடு" என யோசனை சொல்லுகிறான் அந்த வஞ்சகன்.
பிரேமாவை குமரன் மணந்தால்தான் உயிலை அவனிடம் தருவது என்ற முடிவுள்ளவன் சஞ்சீவி. குமரன் வெளியூர் செல்கிறான். குத்துச்சண்டை வீரனாகிறான். அவனை சாய்த்து விட சதி பண்ணுகிறான் மலையப்பன். குமரன் தப்புகிறான். குமரன் மீதுள்ள காதலால் பிரேமா தந்தையிடமுள்ள உயிலை கொண்டு வந்து தருகிறாள். அதற்குப் பரிசாக காதல் முத்தம் கேட்கிறாள். அவனோ, சகோதரி என அழைக்கிறான்.
குமரனிடம் உயில் கிடைத்தது தெரிந்த மலையப்பன் குடிசைக்கு தீ வைக்கிறான். குமரன் இறந்து விட்டதாக ஊரிலே பேச்சு. ஆனால், அவன் வைத்தியன் வீட்டிலே ரகசியமாக பாதுகாக்கப்படுகிறான். குமரனிடம் உயில் இல்லை இப்போது. எரிந்து விட்டதாகக் கூறுகிறான். ஆனால், உயில் மீனாவிடம் கிடைத்தது யாருக்கும் தெரியாது. குமரன் ஜமீன்தாராக முடியாது எனக் கண்ட வைத்தியன் பிரேமா - குமரனைக் காதலிக்கக் கூடாது எனத் தடுக்கிறான். பிரேமா கேட்க வில்லை அந்தக் காதலை, முறிப்பதற்காக குமரன் முகத்தை விகாரப் படுத்துகிறான் வைத்தியன்.
விகாரமடைந்த குமரன் வெளியில் கிளம்ப வெட்கப்பட்டு, இரவிலே திரிகிறான். ஊரிலே பிசாசு பிரச்சாரம் பரவுகிறது. அந்தப் பயங்கரப் பிரச்சாரத்திலிருந்து குமரன் தப்புகிறான். மக்களுக்கு தொண்டாற்றுகிறான். சிறையும் செல்கிறான்.
அந்த நேரத்தில், நேர்மையற்றோர் கிளம்பி மக்களைப் பழைய பாதைக்குத் திருப்புகிறார்கள். மக்களுக்காக ஊழியம் செய்தவணை மக்களே எதிர்க்கிறார்கள். ஆம், நம்மை நாமே எதிர்க்கும் கொடுமை நடைபெறுகிறது.
இதன் முடிவுதான் என்ன ?
எதிர்த்தவர்கள் இன்ப வாழ்த்துக்கள் கூறினார்கள்.
================================================== ============================
"நாம்" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இடையறாது பணியிலும் இதய தெய்வத்தின்
இயற்கை பரிணாமங்களை இணையில்லா அழகுடன்
இடைவிடாது இங்கே பதிவிடுவதில் இன்பம் காணும்
இனிய நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நன்றி ! நன்றி !
புரட்சித்தலைவரின் பொக்கிஷங்களை பொன்போல்
பாதுகாத்து வைத்திருக்கும் பேராசிரியர் செல்வகுமார்
அவர்களுக்கும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ரசிகர்கள்
சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்....
the hindu -review
M.G. Ramachandar, V.N. Janaki, M.N. Nambiar, P.S. Veerappa, M.G. Chakrapani, P.K. Saraswathi, S.R. Janaki, R.M. Sethupathi, S.M. Thirupathisami, T.M. Gopal, M. Jayashree, A.C. Irusappan, M.M.A. Chinnappa (Chinnappa Thevar), D.K. Chinnappa
During the 1950s, M.G. Ramachandran spelt his name as Ramachandar for a short period in his movies, and Naam was one of them. He felt Ramachandar sounded stylish. Besides, he wanted to distinguish himself from another popular actor of that period, T.R. Ramachandran.
Naam was a joint venture of Jupiter Pictures and Mekala Pictures, in which Mu. Karunanidhi, Rajaram (a noted film journalist), MGR and Janaki were partners. Karunanidhi wrote the screenplay, dialogue and lyrics, based on the story Kaadhal Kanneer (Tears Of Love) by Kashi, a talented screenwriter who is today forgotten.
The story revolves around Kumaran (MGR), a young man with progressive views about life and society. He’s the heir to a zamindari estate, which he learns from his mother in her death bed. However, the will and the related testament are hidden by a vicious Malayappan (Veerappa). A rural doctor Sanjeevi (M.G. Chakrapani) is also interested in the property and wants his daughter (Saraswathi) to marry Kumaran. But, Kumaran is in love with Malayappan’s sister Meena (Janaki). But when she gets possession of the will, Kumaran suspects her intentions, and leaves the village. In the city, he becomes a boxing champion. Meanwhile, Malayappan sets fire to Kumaran’s house and people assume he’s dead, but he is saved by Meena. More complications arise about the missing will, and simultaneously, the boxer, whose face is disfigured, moves around at night, giving rise to rumours about a ghost in the village. However, the truth is finally revealed, and the lovers are united.
A. Kasilingam, a talented editor too, directed the film and held good control over the film and its narration. The film’s music was composed by noted singer Chidambaram S. Jayaraman (of ‘Indru Poyi Naalai Vaa…’ fame). Besides Jayaraman, singers including Nagoor Hanifa, A.M. Raja, Jikki, M.L. Vasanthakumari, A.P. Komala, K.R. Chellamuthu and T.R. Gajalakshmi lent their voices. Despite this line-up and meaningful lyrics, the songs did not become popular.
Remembered for: The interesting storyline, meaningful dialogue, impactful direction, good performances by MGR, Chakrapani, Veerappa, Janaki and Saraswathi.
Naam movie release with theater names.
http://i125.photobucket.com/albums/p...pse96e52ec.jpg
Forwarded by Olikirathu Urimaikural Editor B.S.Raju
Naam movie print is not available. Before 1982 most of my family members have watched this movie in Vijaya Talkies Arumbakkam. My brother has told me that the movie is not with MGR formula, MGR gets beaten mostly, he suffers a lot.
The movie was produced by MGR, M.G.C., P.S.Veerappa and Karunanidhi all were partners, after watching the rush MGR told the movie is missing in entertainment, all of them was against MGR's words but finally the movie not fared in box office. Though MGR performance was superb than En Thangai. The scene (image provided by Tirupur Ravichandran) were MGR face burnt was the highlight of the movie. My brother told me the scene were MGR shows his pain while face was disfigured and the subsequent scenes having difficulty in showing his face to people, his reaction was awesome. My brother had not witnessed such a emotional acting from other MGR movies. This movie showcased MGR's acting performance.
I had the opportunity to handle the above image, chance given by MGCB Pradeep. MGR was lying in the platform to his right will be M.G.Chakrapani. There is also another image from this movie. This image is from recently published MGR album.
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள்
1. குழுப்பாடல் : மாரி மகமாயி மாரி மகமாயி
ஆயி எங்கள் காளியம்மா
2. தனித்த ஆண் குரல் பாடல் : ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் - பல்லாயிரம் வேதம்
3. காதல் ஜோடிப்பாடல் : பேசும் யாழே ... பெண் மானே
வீசும் தென்றல் நீதானே ... நீல வானே
4. தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : மணமில்லா மலர் நானம்மா ! மாதர் உலகில்
வாழ்வே அறியா மணமில்லா மலர் நானம்மா !
5. தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : பேசும் யாழே ... பெண் மானே
(சோகத்தில் மீண்டும் பாடுவது) வீசும் தென்றல் நீதானே ... நீல வானே
6. கிராம வாசிகள் பாடும் கோரஸ் பாடல் : ஹா! ஹா! வருவாய் வருவாய்
வைபோக சுந்தரியே
7. கதாநாயகன் கிராம வாசிகளுடன் பாடும் பாடல் புதியதோர் பாதை வகுப்போம் ..... நாம் கெட்ட போரிடும் பாதையை சாய்ப்போம்... நாம்
8. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ... அருமை
மிகுந்த எங்கள் அறிஞர் அண்ணா வாழ்கவே !
9. பின்னணிப்பாடல் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ...
பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் உலகில் ================================================== ============================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நாம் திரைப்படம் மக்கள் திலகம் தம் துணைவியார் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து நடித்த கடைசி படம். மக்கள் திலகம் கலைஞர், காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா, ஆகியோருடன் கூட்டாகச் சேர்ந்து தயாரித்த கடைசிபடம். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. உரிமைக்குரல் மாத இதழ் வெளியிட்ட வெற்றி சரித்திரம் வீடியோ சிடியில் இன்னமும் சில அபூர்வமான புகைப்படங்கள் உள்ளன. மற்றபடி படத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் படம் எம்.ஜி.ஆர் படங்களைப் போல விறுவிறுப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இல்லை என்று எனது தந்தை இப்படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு வரை இதன் நெகடிவ் மற்றும் விசிஆர் கேசட் பிரதிகள் நல்ல நிலையில் இருப்பதாக தேவி வார இதழில் ஒரு கட்டுரை வந்தது. விசிடியாக உள்ளதாக என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் மக்கள் திலகம் ஒரு வினாடி மட்டுமே தோன்றும் காட்சியாக இருந்தாலும் அவை யாவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். மக்கள் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். இந்தப் பொக்கிஷங்களைத் தேடிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்த அபூர்வ புகைப்படங்கள் அல்லது விடியோக்கள் வைத்திருப்போர் தகவல் தெரிவிக்கவும்.
http://i39.tinypic.com/4awi.jpg
நாம் படத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடன் நம் தலைவர்
http://www.raaga.com/a/?t0001485
நாம் திரைப்படப் பாடலின் இணைப்பு மேலே தரப்பட்டுள்ளது.
அருமை நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின்
அயராத உழைப்பில் பொன்மனச்செம்மலின் திரைப்பட
பட்டியல் படி வரிசையாக படங்களின் கதை சுருக்கம் ,பாடல்கள்
மற்றும் இதர விபரங்கள் என்று பதிவிட்டு வரும் இந்த இனிய
தருணத்தில் பொன்மனச்செம்மல் திரிக்கு 5 நடசத்திர அந்தஸ்து
கிடைத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்து
கொள்கின்றேன் .
[B]Dear Vinoth Sir,
I am happy to note that this Thread was awarded with 5 Star Status, within short span of time. But for the unstinted co-operation of all Thread users and Viewers, this would not have been possible.
I am grateful and thankful to all concerned. [/B]
எல்லாப் புகழும் எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !
அன்பன் :
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 30வது திரைப்படம் " பணக்காரி " படம் பற்றிய தகவல்
1. படம் வெளியான தேதி : 01-05-1953
2. படத்தை வெளியிட்ட நிறுவனம் : உமா & ஓம் பிலிம்ஸ்
3. கதாநாயகன் : வி.நாகையா
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : சுந்தர்
5. பாடல்கள் : பாபநாசம் சிவன், ராமையாதாஸ், லட்சுமணதாஸ், குயிலன்
6. இசை அமைப்பு : எஸ். வி., வெங்கட்ராமன்
7. இயக்குனர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
8. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஜாவர் சீத்தாராமன், சி. வி. வி. பந்துலு, டி.எஸ். துரைராஜ், கே.ஏ. தங்கவேலு, டி.ஆர். ராஜகுமாரி, கே. ஆர். செல்லம்., டி.எஸ். ஜெயா, குமாரி பாரதி, கே. எஸ். தங்கமுத்து, மற்றும் பலர்.
குறிப்பு :
இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் வில்லனாக நடித்திருப்பார்
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"பணக்காரி" படத்தில் நம் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நடிகை டி.ஆர். ராஜகுமாரியுடன்
http://i41.tinypic.com/28sprfn.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Leo Tolstoy’s classic ‘Anna Karenina’ was made into a Hollywood movie in 1935 by Clarence Brown with the iconic star Greta Garbo playing Anna. It was filmed earlier as a silent movie in 1928 named Love, again with Greta Garbo as Anna and the ‘great lover’ John Gilbert in the male lead. The novel and the 1935 Hollywood version were popular in India and the story was filmed in Tamil in 1953 as Panakkari by K. S. Gopalakrishnan (the maker of Chakradhari) under the technical supervision of the renowned Newtone Studio founder-cinematographer-filmmaker, Jiten Bannerjee.
http://i44.tinypic.com/xnf2id.jpg
T. R. Rajakumari, the then dream girl, played the Tamil Anna and Chittoor V. Nagaiah as the suspecting husband who ill-treats her for being friends with an army officer (M. G. Ramachandran). The original story of misunderstanding between the couple due to the wife’s friendship with another man was more or less followed in the Tamil version. MGR’s role was somewhat villainous. While old timers ‘Javert’ Seetharaman and C. V. V. Panthulu played their supporting roles effectively, Mangalam, the woman the army man discards was also impressive. In a sequence, Panthulu (playing an elderly husband) carrying on with his young daughter’s attractive dance teacher, signals her to come up to his bedroom, leaving the daughter to dance to a gramophone record! While the dancer is busy upstairs, the gramophone record which has a crack, goes on playing the same word, hearing which the wife rushes out of the kitchen and catches the husband and the dance teacher red-handed. Though this sequence is hilarious, the moviegoers in those days thought it was in bad taste. There is also another scene the Tamil audience didn’t relish much — the husband (Nagaiah) introduces his lovely wife (Rajakumari) to his army friend and the man and the woman shake hands. It was also why the public rejected the movie, despite its impressive cast and production values.
The film had pleasing music (S. V. Venkataraman) with lyrics by Papanasam Sivan, Thanjai Ramaiah Das, Lakshmana Das and Kuyilan. Gopalakrishnan, a graduate, took part in the Freedom Movement and also worked in movies. He was associated with S. S. Vasan and directed the Gemini Studios’ box office hit of 1948, Chakradhari. Though he made a few films, he didn’t meet with much success. He is scarcely remembered today and many mistake him for the other K. S. Gopalakrishnan, a successful Tamil filmmaker.
However, Panakkari failed at the box office, mainly because of its ‘anti sentimental’ storyline. During the same period, another film, Pitchaikkari, a remake of a Malayalam film, proved a major hit and gave rise to a joke in the Madras movie circles —‘Those who bought Panakkari became pitchaikkaarans (beggars), while buyers of Pitchaikkari became panakkarans (rich men)!
Remembered for its different storyline, high production values and impressive performances by Nagaiah, Rajakumari and MGR.
RANDOR GUY
courtesy- the hindu
நம் நட்சத்திர நாயகனின் திரிகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆகிய இரண்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற செய்தி தேனினும் இனிய செய்தி..இந்த தகுதி பெற அயராது பாடுபட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. மாசானம், திரு. ரூப், திரு. சைலேஷ் பாபு, திரு. எம்ஜிஆர் பாஸ்கரன் மற்றும் நம் திரியின் அனைத்து நண்பர்களுக்கும், மேலும் இந்த திரியை பார்த்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும், நம் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.
MGR acted in the role of Count Vronsky that is the Army Officer in Panakari.
தலைவர் தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கதை அமைப்பில் நடிததற்கு காரணம் வயிற்று பிழைப்புக்காக என்று தன்னுடைய வாழ்கை வரலாற்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Image from Panakari
http://i125.photobucket.com/albums/p...ps09e6903a.jpg
From B.S.Raju magazine.
Another Image from Panakari
http://i125.photobucket.com/albums/p...ps5c103d39.jpg
அன்பு செல்வகுமார் சார் அவர்களுக்கு,
தாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ள பொன்மனச்செம்மல் அவர்களது படங்கள், பாடல்கள் பற்றிய விபரங்கள், கதைச்சுருக்கம் ஆகியவற்றை அழகுற பதிவிட்டு மாபெரும் சேவை செய்து வருகிறீர்கள். ஒரு சிறு வேண்டுகோள். அந்தப் பாடல்களை எழுதிய கவிஞர் தம் பெயரினையும் பாடலினைப் பாடிய பின்னணிப் பாடகர்கள் பற்றிய விபரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுகிறேன்.
பணக்காரி படம் மக்கள் திலகம் வில்லனாக நடித்த படம் என்பதைத் தவிர வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை. வில்லன் பாத்திரமாக இருப்பினும் சமூக அவலங்களைச் சாடும் ஒரு பாத்திரமாக இது அமைந்திருந்தது என்று ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம். எந்த சூழ்நிலையில் இந்தப் படத்தினை தலைவர் ஒப்புக் கொண்டார். கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பா போன்ற விபரங்களை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஏனென்றால் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். செல்வகுமார் சார் தான் இது பற்றி விளக்க முடியும். ஆவலுடன் ... ... ... பல படங்கள் கதாநாயகனாக நடித்த பின் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். பின்னணியினை விளக்கவும்.
மக்கள் திலகத்தின் 30வது திரைப்படம் " பணக்காரி " படத்தின் கதைச்சுருக்கம் :
ஆண்களுடன் சகஜமாகப் பழகுவதிலே எவ்வளவு ஆபத்திருக்கிறதென்று பிரேமா ஆலோசிக்க வில்லை. ஆழ்ந்து சற்று சிந்தித்திருப்பாளேயானால், தன் கணவன் பாலு தன்னை அவ்வாறு சகஜமாக பழகும்படி சொன்ன போதே அதற்கு அணை போட்டு தடுத்திருப்பாள்.
பாவம் ! பிரேமா பேதமின்றி பழகினாள். ஆனால், பாலு அதைச் சந்தேகித்தார். சூழ்நிலைகள் அப்படி சதி செய்து விட்டன. இதனால் அவர்கள் வாழ்க்கையிலேயே ஒரு பெரிய சூறாவளி தோன்றியது.
அமைதி நிலவிய அவர்கள் குடும்பம் அலங்கோலமாகப் போய்விட்டது. இதை விதியின் விளையாட்டென்பதா அல்லது வீண் பழியால் ஏற்பட்ட விபரீதம் என்று முடிவு கட்டுவதா ?
இல்லா விட்டால், தவறான எண்ணம் ஏதுமின்றி சுந்தர் என்ற பள்ளித் தோழனோடு, ஒரு நண்பன் என்ற முறையில் பிரேமா பழகி வந்ததை பாலு சந்தேகிப்பாரா ? அவர் தானே சுந்தரை டீ சாப்பிட வீட்டிற்கு அழைத்தார் ? அது முதல் அவளும் சுந்தரும் அடிக்கடி சந்திக்கலானார்கள். ஆனால், அவள் தூய்மையாகப் பழகுவதைப் போலவே சுந்தரும்
பழகுவான் என்று அவள் நினைத்தாள். ஒரு சமயம், சுந்தர் சற்று வரம்பு மீறிப் போன போது அவள் அழைத்து கண்டித்தாள். ஆனால், பாலு அவளுக்கும், சுந்தருக்கும் கள்ளக் காதல் இருப்பதாக குற்றம் சாட்டினார். விசித்திரம் தான்.
அவரென்ன செய்வார் பாவம் ! வம்பளக்கும், உலகம், வதந்திகளை உலவ விட்டது. அவருக்கு, உண்மை நிலை புரியாமல் போய் விட்டது. அதனால்தான் அவர் அவளைக் கண்டித்தார். அவள் சுந்தரைப் பார்க்கவோ அவனோடு பேசவோ கூடாது என்று கட்டளையிட்டார்.
அந்தக் கட்டளையை மீறும் நோக்கத்தோடு, பிரேமா மறுபடியும் சுந்தரைப் பார்க்கப் போக வில்லை. சுந்தர் குதிரையிலிருந்து விழுந்து, ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததும், நண்பனைப் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் அவள் போனாள். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், தப்பர்த்தம் செய்து கொண்டு அவளை வீட்டை விட்டே துரத்தி விட்டார் பாலு. பெற்ற பிள்ளையையும், தன்னுடன் அனுப்ப மறுத்து விட்டார். பரிதாபம். ! அவளைத் தொடர்ந்த வீண் பழி, அத்துடன் நின்றதா ! இல்லை !
பிரேமா ஒரு விபத்திற்குள்ளாகி தன் சிநேகிதி உஷா வீட்டில் சிகிச்சை பெற்று வருவதையறிந்த சுந்தர் அவள் வைத்தியப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்கிறான். இதனால், ஊர் வம்பு வரம்பு மீறி வளர்ந்து விடுகிறது. பிரேமா குணமடைகிறாள்; சுந்தர் தனது உண்மை குணத்தைக் காட்டுகிறான். அப்போதுதான் அவனைப் புரிந்து கொள்கிறாள் பிரேமா. உடனே, அங்கிருந்து தனது அண்ணன் வீட்டிற்கு செல்கிறாள்.
ஆனால், அங்கு அண்ட இடமின்றி விரட்டினாள், அவள் அண்ணி. புகலிடம் இல்லாத பிரேமா அங்கிருந்து புறப்படுகிறாள். .
பிரேமாவின் வாழ்க்கையை மட்டுமா கொந்தளிக்க வைத்தான் இந்த சுந்தர் ? பத்மா என்ற பெண்ணின் வாழ்விலும், இவனால் எத்தனை அலை மோதல்கள் ! இல்லா விட்டால், பூபதிக்குப் போட்டியாக சுந்தர் வருவானா ? இதைக்கண்டு பூபதி மனமுடைந்து சென்று விடுவானா ?
போட்டியாகத் தான் வந்தானே ! ஒரு நிலையில் இருக்கக் கூடாதா ? புஷ்பத்திற்குப் புஷ்பம் தாவும் பட்டாம் பூச்சியைப் போல பிரேமாவைப் பார்த்ததும், சுந்தர் அவளைப் பின் தொடர்ந்து செல்லவா வேண்டும் ?
மற்ற விவரங்கள் திரையில் .
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்